Tamilus

The best Tamil Aggregator | Tamilus

10/03/2011

மறந்து போகிறதா ? இறப்பின் வலி?!


கூலியோ, சம்பளமோ
வாழ்வைத் தள்ளினாலும்
சாவைத் தள்ளாத
வரைமுறைக்குள்
இன்னும்
வாழ்ந்து கொண்டிருக்கிறது
என் கிராமங்கள்...

யிரம்தான்
சண்டை இருந்தாலும்,
வேலைகள் பல
இருந்தாலும்
வீட்டிற்கு ஒருவராவது
வந்து துக்கம்
விசாரிப்பார்கள்
சாவு வீட்டில்....

திட்டித் தீர்த்து
மண்வாறித் தூற்றி
சாபங்கள் பல
தந்திருந்தாலும்
முந்திக் கொண்டு
வருவார்கள்
துக்கத்தில் பங்கேற்க...

கூடை கூடையாய்
குவியும் வாய்க்கரிசி
சம்பிரதாயத்தில்
ஒரு மாதத்திற்காவது
இல்லாது போகும்
சாவு வீட்டில் பசி...

ரே மயானம்
சென்று அடக்கம்
செய்தபின் பேசும்
பேச்சினில் கரையும்
இறந்தவரின்
அருமை, பெருமைகள்...

நாட்கள் பல 
சென்றபிறகும்
கடைபிடிக்கப்படும் 
துக்கம் .,

ன்றோ 
மின்சார தகன அடுப்பில்
சம்பிரதாயங்கள் இன்றி 
அரைமணி நேரத்தில் 
முடிந்து விடும் 
நகர வாழ்க்கையில் 
மறந்தே போகிறது 
அந்த இ(ற)ழப்பின் வலி...!

37 comments:

  1. இனிய காலை வணக்கம் மச்சி,

    மருவி வரும் இறப்பு வீடுகளின் நிலையினை ஆதங்கமாய்ச் சொல்லி நிற்கிறது கவிதை.

    அன்றைய கால கட்டத்தில் சாவீடுகளில் பிரிந்த சுற்றங்கள் ஒன்று கூடும்,

    இன்றோ..
    தகன அடுப்பின் நிலையால்...உணர்வுகளும் மழுங்கடிக்கப்படுகின்றன எனும் உண்மையினை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறீங்க.

    ReplyDelete
  2. பிறப்பிலேயே நிறைய மாற்றங்கள்... இறப்பிலும் மாற்றங்கள் வருமே...

    ReplyDelete
  3. நிஜமான வலி - உண்மை கவிதை

    ReplyDelete
  4. வரிகளில்
    கிராமத்தில் வாழும்
    பச்சையான மனிதர்களின்
    மண்வாசனை

    ReplyDelete
  5. அருமை நண்பரே பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  6. இன்றோ
    மின்சார தகன அடுப்பில்
    சம்பிரதாயங்கள் இன்றி
    அரைமணி நேரத்தில்
    முடிந்து விடும்
    நகர வாழ்க்கையில்
    மறந்தே போகிறது
    அந்த இ(ற)ழப்பின் வலி...!

    முற்றிலும் உண்மை .மிக்க
    நன்றி சகோ அழகிய கவிதைப்
    பகிர்வுக்கு .........

    ReplyDelete
  7. ஓட்டெல்லாம் போட்டாச்சு சகோ .....

    ReplyDelete
  8. நல்ல சிந்தனை
    கேள்வியும் நன்று..

    அருமை

    ReplyDelete
  9. இன்று என் வலையில்
    நாஞ்சில் மனோ Vs கருண் Vs சி.பி – யார் அதுல பெரிய ஆள்?

    ReplyDelete
  10. இது காலத்தின் மற்றும் சூழ்நிலையின் மாற்றம். இன்றைய நகர வாழ்க்கை தான் நம்மை இவ்வாறு மாற்றிக் கொண்டிருக்கிறது.

    ReplyDelete
  11. இறந்தாலும் பாலை ஊற்றுவார் இங்கே பிறந்தாலும் பாலை ஊற்றுவார்....!!!

    ReplyDelete
  12. அன்பின் கருண்

    சிந்தனை அருமை - கவிதை ( எண்டர் கவிதை ) அருமை . தொழிற்புரட்சி தவிர்க்க இயலாதது - நாம் தான் அதற்கேற்றாற்போல் மாற வேண்டும். நட்புடன் சீனா

    ReplyDelete
  13. வலி மிகுந்த கவிதை வ[லி]ரிகள்....!!!

    ReplyDelete
  14. கருன்,

    கால மாற்றத்திற்கு மனிதன் தனது வாழ்வை காவு கொடுக்கப் பழகி விட்டான்.

    வாழும் காலத்திலேயே இன்னும் எதையெதையெல்லாம் இழக்க இருக்கிறோமோ?

    ReplyDelete
  15. கிராமமோ நகரமோ நாம் மிகவும் நேசிக்கும் ஒருவரின் சாவின் வலி தாங்கமுடியாதது

    ReplyDelete
  16. திட்டித் தீர்த்து
    மண்வாறித் தூற்றி
    சாபங்கள் பல
    தந்திருந்தாலும்
    முந்திக் கொண்டு
    வருவார்கள்
    துக்கத்தில் பங்கேற்க...////////

    உண்மை! உண்மையிலும் உண்மை! கிராமத்தவர்களின் பெருங்குணமே அப்படித்தான்!

    ReplyDelete
  17. ///
    இன்றோ
    மின்சார தகன அடுப்பில்
    சம்பிரதாயங்கள் இன்றி
    அரைமணி நேரத்தில்
    முடிந்து விடும்
    நகர வாழ்க்கையில்
    மறந்தே போகிறது
    அந்த இ(ற)ழப்பின் வலி..////

    இப்போதாவது கொஞ்சம் இருக்கின்ரது இனிவரும் காலங்களில் அதுவும் இருக்காது போங்க

    ReplyDelete
  18. மரணபயம் கொடுமையானதுதான்....
    அந்த வலிக்கும் வேதனைக்கும் மாற்றீடு இல்லை என்பதாலோ...என்னவோ...துக்கத்தை பகிர்ந்துகொள்ள முன்வருகின்றனர்...

    ReplyDelete
  19. இன்றோ
    மின்சார தகன அடுப்பில்
    சம்பிரதாயங்கள் இன்றி
    அரைமணி நேரத்தில்
    முடிந்து விடும்
    நகர வாழ்க்கையில்
    மறந்தே போகிறது
    அந்த இ(ற)ழப்பின் வலி...!
    >>>
    அந்த அரை மணி நேரத்தை நான் சமீபத்தில்தான் உணர்ந்தேன் சகோ. சாவின் கொடுமையைவிட உறவுகள் அடிக்கும் கேலிக்கூத்துக்கள்தான் கண்கலங்க வைத்தன.

    ReplyDelete
  20. நிஜமான வலி!!!!

    ReplyDelete
  21. கவிதையில் வலி அதிகம் கொட்டி கிடக்குது.... நன்று...

    ReplyDelete
  22. மிகச் சரி
    மனதுக்கு மிக நெருக்கமாய் இருந்த
    ஆறுதல் வார்த்தைகள் கூட
    சடங்கு சம்பிரதாயமாக மாறி
    கிராமங்களும் நகரம்போல்
    நரகமாகி வருவது குறித்த
    உங்கள் படைப்பு அருமை
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 20

    ReplyDelete
  23. வேதனைகளை அருமையா சொல்லிட்டீங்க நண்பரே...

    ReplyDelete
  24. உண்மைதான் இன்றும் அப்படிப்பட்ட கிராமங்கள் இருக்கின்றன!

    நல்ல கவிதை!

    ReplyDelete
  25. நிஜமான கவிதை.நிஜமான வலி

    ReplyDelete
  26. கவிதை நல்லாயிருக்குங்க..

    ReplyDelete
  27. காணாமல் போகும் எதார்த்தங்கள்.../
    உண்மைதான். அருமையான கவிதை. நன்று.

    ReplyDelete
  28. மண்ணின் மணம் வீசுது கவிதையில்...
    எண்ணத்தின் வெளிப்பாடான கவிதையிலே!...

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"