Tamilus

The best Tamil Aggregator | Tamilus

5/23/2011

ரஜினிக்கு ஒரு ரசிகனின் கடிதம்..


தலைவா ..

இது நீங்கள் சீக்கிரம் குணமடைந்து வீடு திரும்ப தினமும் கோயிலுக்கு போய் பிராதிக்கும் ஒரு சாதாரண ரசிகனின் கடிதம்.

'ராணா' படத்தின் பூஜை முடித்த அன்று மாலையில் நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து உங்களைப் பற்றி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தகவல்கள் வதந்திகளாக பரவி வருவதை பார்க்கும் போது பயமாக இருக்கிறது.

மருத்துவர்கள் உங்களைப் பற்றி தினம் ஒரு அறிக்கை கொடுத்தாலும் என் மனம் நீங்கள் ஒரு முறை மருத்துவ மனை ஜன்னலிலிருந்து கை காட்டினால் போடும் என காத்து கிடக்கிறது  .

உங்களது மனைவி "எனது கணவர் நன்றாக இருக்கிறார். அவருக்கு சின்ன பிரச்னை தான்" என்று பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தாலும், தனுஷ் என்னதான் சமாதானம் சொன்னாலும் என்னுடைய மனது ஏனோ ஏற்க மறுக்கிறது.

நீங்கள் இனிமேல் நடிக்காவிட்டாலும் நான் கவலைப்பட போவதில்லை. ஒரு ரசிகனாக உங்கள் படம் ரிலீசாகும் போது முதல் காட்சி பார்த்து விசிலடித்து ரசித்தவன் நான்.

நீங்கள் "நான் நன்றாக இருக்கிறேன்" என்று பேசி வீடியோ எடுத்து டி.வி. சேனல்களில் ஒளிப்பரப்பலாமே. உங்களுங்கு உடம்பு சரியில்லாத நாளில் இருந்து தவிக்கும் என்னை மாதிரி கோடான கோடி ரசிகர்களுக்கு அது போதுமானதாக இருக்குமே!

உங்களுக்கு உடம்பு குணமான பின் ரசிகர்களை சந்திக்க இருப்பதாக தங்கள் மனைவி கூறி இருக்கிறார். அதற்காகவும் காத்து இருக்கிறேன்.

உங்களுக்கு உடம்பு குணமாகி நீங்கள் 'ராணா' படத்தில் நடித்து அது வெளியாகி, அந்த படத்தில் நீங்கள் வரும் முதல் காட்சியை விசிலடித்து வரவேற்க ஆவலாக காத்திருக்கிறேன் தலைவா..!

நீங்கள் யானை அல்ல குதிரை என்பதைஉணர்த்துங்கள் தலைவா...

20 comments:

  1. உங்களுக்கு உடம்பு குணமாகி நீங்கள் 'ராணா' படத்தில் நடித்து அது வெளியாகி, அந்த படத்தில் நீங்கள் வரும் முதல் காட்சியை விசிலடித்து வரவேற்க ஆவலாக காத்திருக்கிறேன் தலைவா..!

    நன்றாக எழுதி இருக்கீங்க கருண்! எனக்கும் இதே வேண்டுதல்தான்!

    ReplyDelete
  2. ரஜினி இப்போது பேசும் நிலையில் இருந்தால் செய்ய மாட்டார்களா? அவர் சீரியசாக இருக்கிரார். ஆனால் பிரார்த்தனைகள் மூலம் அவர் நலம் பெறுவார் என தோன்றுகிறது

    ReplyDelete
  3. தலைவா விரைவில் எழுந்து வாங்க... உங்கள் ரசிகர்கள் காத்திருக்காங்க.

    எனது வலைப்பூவில்:
    மதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 1 (200வது பதிவாக)

    ReplyDelete
  4. நல்லதே நடக்கும் மாப்ள கவலைப்படாதே!

    ReplyDelete
  5. பிரார்த்தனைகள் மூலம் அவர் நலம் பெறுவார்.

    ReplyDelete
  6. கவலை படாதேய்யா உங்க தலைவர் விரைவில் குணமடைவார்....

    ReplyDelete
  7. இது கனிமொழி கைது செய்யபட்டதை மறைக்க கெளப்பி விடப்பட்ட வதந்தியா இருக்குமோன்னு சந்தேகமா இருக்கு...!!!

    ReplyDelete
  8. I also pray to god for our super star health

    ReplyDelete
  9. நானும் ரசிகன்தான் .நன்றி கருன்

    ReplyDelete
  10. ரஜனி என்ற நல்ல மனி தருக்கு இதுபோல நிறைய ரசிகர்கள் இருக்காங்க.

    ReplyDelete
  11. ரஜனி நிச்சயம் குணமடைவார்

    ReplyDelete
  12. கடிதத்தில் நானும் ஒரு கையெழுத்துப் போட்டுக் கொள்கிறேனே!

    ReplyDelete
  13. ஒவ்வொரு ரசிகனின் மனதில் இருப்பது!

    ReplyDelete
  14. விரைவில் நலம் பெறுவார்

    ReplyDelete
  15. கவலையாகத்தான் இருக்கு,பிரார்த்தனைகள்.

    ReplyDelete
  16. தலைவர் வருவார்..கவலை வேண்டாம்.

    ReplyDelete
  17. உங்களுக்கு உடம்பு குணமாகி நீங்கள் 'ராணா' படத்தில் நடித்து அது வெளியாகி, அந்த படத்தில் நீங்கள் வரும் முதல் காட்சியை விசிலடித்து வரவேற்க ஆவலாக காத்திருக்கிறேன் தலைவா..!

    நம் தலைவர் இந்த சோதனையை இறை அருளுடன் வென்று வருவார்

    ReplyDelete
  18. பிரார்த்திப்போம்.எல்லாம் நல்லதே நடக்கும் !

    ReplyDelete
  19. வா வா தலைவா ...

    வந்து 'ஸ்டைல்' காட்டுத்

    தலைவா ... இல்லாங்காட்டி தூக்கில

    தொங்கிடுவேன் தலைவா ...

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"