Tamilus

The best Tamil Aggregator | Tamilus

5/18/2011

2011 தமிழக சட்டசபை தேர்தல் உணர்த்தியிருக்கும் பாடம் என்ன?


டந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில், மவுனமாகவே இருந்து, ஒரு மகத்தான புரட்சியை ஏற்படுத்தி இருக்கின்றனர் தமிழக மக்கள்.

எம்.ஜி.ஆர்., ஒருவரைத் தவிர, தொடர்ந்து இரண்டாவது முறையாக தங்களை ஆளும் உரிமையை, மக்கள் வேறு யாருக்கும் வழங்கியதில்லை.

ஒரு ரூபாய் அரிசி,
50 ரூபாய் மளிகைப் பொருட்கள்,
பொங்கல் பை,
இரண்டு ஏக்கர் நிலம்,
மகளிர் சுய உதவிக் குழுக்கள்,
இலவச கான்கீரிட் வீடு,
அவசர சிகிச்சைக்கு, 108 ஆம்புலன்ஸ் சேவை,
வாரத்திற்கு ஐந்து முட்டைகள்,
இலவச "டிவி'

போன்ற எதுவுமே, ஐந்து ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்த கட்சியை கரை சேர்க்கவில்லை.

விலைவாசி உயர்வும், நிரந்தர மின்வெட்டும், குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கமும், விவசாயிகளின் கண்ணீரும், தேர்தல் என்ற ஒரே சுனாமியில், ஆளும் கட்சி சுழற்றி வீசப்பட்டு விட்டது.

அந்த சுனாமியில், கூட்டணியும், ஜாதி ஆதிக்கமும், பணப்பட்டுவாடாவும், அதிகார துஷ்பிரயோகங்களும், உடன்பிறப்புகளின் அராஜகங்களும், இலவச லேப் டாப்புகளும் கூட காணாமல் போனதென்பது தான் உண்மை.

பணத்தைக் கொட்டி, காலேஜ் சீட்டோ, அரசு வேலையோ வேண்டுமானால் வாங்கிவிடலாம்; ஆனால், ஆட்சி அமைக்கும் உரிமையை வாங்கி விட முடியாது என்பதை, அரசியல் கட்சிகள் இனிமேலாவது உணர்ந்து செயல்பட்டால், அவர்களுக்கும் நல்லது; நாட்டுக்கும் நல்லது.

சிலரை சில நாள் ஏமாற்றலாம்; பலரை பல நாள் ஏமாற்றலாம். ஆனால், எல்லாரையும், எப்போதும் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது என்பதை, 2011 தமிழக சட்டசபை தேர்தல் நிரூபித்துக் காட்டியிருக்கிறது.

45 comments:

  1. கடமையும் சாதனையும் இரு வேறு பெரிய விஷயங்கள் என்பதை மறந்தால் இப்படித்தான் நண்பா!

    ReplyDelete
  2. திமுகாவுக்கு நல்ல பாடம் கற்பித்த நம் மக்கள் ஜெயாவின் நடவடிக்கை சரியில்லை என்றால் அடுத்த தேர்தலில் அவருக்கு தகுந்த பாடம் கர்ப்பிப்போம்.

    ReplyDelete
  3. சும்மா அதிருது.. :)
    சில வரியில பல கதைகள சொல்லிட்டீங்க

    ReplyDelete
  4. நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில், மவுனமாகவே இருந்து, ஒரு மகத்தான புரட்சியை ஏற்படுத்தி இருக்கின்றனர் தமிழக மக்கள்.//

    மக்கள் புரட்சி என்பதன் மறு வடிவம் இது தான் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  5. எம்.ஜி.ஆர்., ஒருவரைத் தவிர, தொடர்ந்து இரண்டாவது முறையாக தங்களை ஆளும் உரிமையை, மக்கள் வேறு யாருக்கும் வழங்கியதில்லை.//

    காரணம், அவர் மக்களுக்காக வாழ்ந்த மகேசன்,
    ஏனைய தலைவர்கள் தம் மக்களுக்காக வாழும் சுதேசிகள்.

    ReplyDelete
  6. எம்.ஜி.ஆர்., ஒருவரைத் தவிர, தொடர்ந்து இரண்டாவது முறையாக தங்களை ஆளும் உரிமையை, மக்கள் வேறு யாருக்கும் வழங்கியதில்லை.//

    காரணம், அவர் மக்களுக்காக வாழ்ந்த மகேசன்,
    ஏனைய தலைவர்கள் தம் மக்களுக்காக வாழும் சுதேசிகள்.

    ReplyDelete
  7. //விலைவாசி உயர்வும், நிரந்தர மின்வெட்டும், குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கமும், விவசாயிகளின் கண்ணீரும், தேர்தல் என்ற ஒரே சுனாமியில், ஆளும் கட்சி சுழற்றி வீசப்பட்டு விட்டது.//

    உண்மைதான்

    ReplyDelete
  8. சிலரை சில நாள் ஏமாற்றலாம்; பலரை பல நாள் ஏமாற்றலாம். ஆனால், எல்லாரையும், எப்போதும் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது என்பதை, 2011 தமிழக சட்டசபை தேர்தல் நிரூபித்துக் காட்டியிருக்கிறது.//

    ஆமாம் சகோ, உண்மையில் மக்கள் மாற்றுத் தெரிவேதும் இல்லாத காரணத்தினால் தான் அம்மையாரைத் தெரிவு செய்திருக்கிறார்கள். பார்ப்போம், அம்மையாரின் செயற்பாடுகள் எப்படி இருக்கின்றன என்று.

    ReplyDelete
  9. //சசிகுமார் சொன்னது…
    திமுகாவுக்கு நல்ல பாடம் கற்பித்த நம் மக்கள் ஜெயாவின் நடவடிக்கை சரியில்லை என்றால் அடுத்த தேர்தலில் அவருக்கு தகுந்த பாடம் கர்ப்பிப்போம்.//

    அப்படியானால் அடுத்தமுறை திமுகவை வெற்றிபெற வைக்கப்போகின்றீர்களா?

    ReplyDelete
  10. @மதுரன்
    வேறு வழி இல்லையே அடுத்து ஓட்டு போடமாட்டார்கள் என்ற சுயநலத்திலாவது ஏதாவது நல்லது செய்வார்கள் அல்லவா. ஒருவருக்கே தொடர்ந்து போட்டு கொண்டு இருந்தால் நம்முடைய கதி அதோ கதி தான்.

    ReplyDelete
  11. மாற்றி மாற்றி ஓட்டு போடரது நல்லதே

    ReplyDelete
  12. விக்கி உலகம் கூறியது...

    கடமையும் சாதனையும் இரு வேறு பெரிய விஷயங்கள் என்பதை மறந்தால் இப்படித்தான் நண்பா!/// vaa nanbaa..

    ReplyDelete
  13. சசிகுமார் கூறியது...

    திமுகாவுக்கு நல்ல பாடம் கற்பித்த நம் மக்கள் ஜெயாவின் நடவடிக்கை சரியில்லை என்றால் அடுத்த தேர்தலில் அவருக்கு தகுந்த பாடம் கர்ப்பிப்போம்./// ஆம் நண்பா..

    ReplyDelete
  14. Lali கூறியது...

    சும்மா அதிருது.. :)
    சில வரியில பல கதைகள சொல்லிட்டீங்க// நன்றி..

    ReplyDelete
  15. நிரூபன் கூறியது...
    மக்கள் புரட்சி என்பதன் மறு வடிவம் இது தான் என்று நினைக்கிறேன்.// ஆம் நண்பா..

    ReplyDelete
  16. நிரூபன் கூறியது...
    காரணம், அவர் மக்களுக்காக வாழ்ந்த மகேசன்,
    ஏனைய தலைவர்கள் தம் மக்களுக்காக வாழும் சுதேசிகள்./// உண்மை நண்பா..

    ReplyDelete
  17. மதுரன் கூறியது...
    உண்மைதான்// நன்றி சகோ..

    ReplyDelete
  18. நிரூபன் கூறியது...
    ஆமாம் சகோ, உண்மையில் மக்கள் மாற்றுத் தெரிவேதும் இல்லாத காரணத்தினால் தான் அம்மையாரைத் தெரிவு செய்திருக்கிறார்கள். பார்ப்போம், அம்மையாரின் செயற்பாடுகள் எப்படி இருக்கின்றன என்று.// ஆம் பார்ப்போம்..

    ReplyDelete
  19. மதுரன் கூறியது...

    அப்படியானால் அடுத்தமுறை திமுகவை வெற்றிபெற வைக்கப்போகின்றீர்களா?// இது அவரைக் கேக்கலாம்.

    ReplyDelete
  20. //சசிகுமார் சொன்னது…
    @மதுரன்
    வேறு வழி இல்லையே அடுத்து ஓட்டு போடமாட்டார்கள் என்ற சுயநலத்திலாவது ஏதாவது நல்லது செய்வார்கள் அல்லவா. ஒருவருக்கே தொடர்ந்து போட்டு கொண்டு இருந்தால் நம்முடைய கதி அதோ கதி தான்.//

    எம்.ஜி.ஆர்., ஒருவரைத் தவிர, தொடர்ந்து இரண்டாவது முறையாக தங்களை ஆளும் உரிமையை, மக்கள் வேறு யாருக்கும் வழங்கியதில்லை. கருனாநிதி,ஜெ எல்லோருமே மாறிமாறித்தான் ஆட்சியில் இருந்திருக்கிறார்கள். அப்பொழுதெல்லாம் அவர்கள் நல்லது செய்ததாகவோ,பயந்ததாகவோ, திருந்தியதாகவோ தெரியவில்லையே

    ReplyDelete
  21. சசிகுமார் கூறியது...

    @மதுரன்
    வேறு வழி இல்லையே அடுத்து ஓட்டு போடமாட்டார்கள் என்ற சுயநலத்திலாவது ஏதாவது நல்லது செய்வார்கள் அல்லவா. ஒருவருக்கே தொடர்ந்து போட்டு கொண்டு இருந்தால் நம்முடைய கதி அதோ கதி தான்.// மதுரன் பதில் பாருங்க ..

    ReplyDelete
  22. சி.பி.செந்தில்குமார் கூறியது...

    மாற்றி மாற்றி ஓட்டு போடரது நல்லதே// பதிவ ஒழுங்கா படியா ?

    ReplyDelete
  23. "என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...

    Very powerful post// நன்றி..

    ReplyDelete
  24. சிலரை சில நாள் ஏமாற்றலாம்; பலரை பல நாள் ஏமாற்றலாம். ஆனால், எல்லாரையும், எப்போதும் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது

    ReplyDelete
  25. ,மக்களின் வெற்றி

    ReplyDelete
  26. ஓட்டு போட்டாச்சு மக்கா

    ReplyDelete
  27. அன்பின் கருண் - சிந்தனை இயல்லபானதுதான் - மக்கள் புகட்டிய பாடம் இதுதான். 91 ல் இருந்து மாறி மாறித்தானே வருகிறார்கள். நட்புடன் சீனா

    ReplyDelete
  28. எப்பிடியோ ஆட்சியை தூக்கி கடாசிவிட்டார்கள் மக்கள்...

    ReplyDelete
  29. //சிலரை சில நாள் ஏமாற்றலாம்; பலரை பல நாள் ஏமாற்றலாம். ஆனால், எல்லாரையும், எப்போதும் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது என்பதை, 2011 தமிழக சட்டசபை தேர்தல் நிரூபித்துக் காட்டியிருக்கிறது.///

    மிக சரியாக சொன்னீர்கள் வாத்தி....

    ReplyDelete
  30. //சிலரை சில நாள் ஏமாற்றலாம்; பலரை பல நாள் ஏமாற்றலாம். ஆனால், எல்லாரையும், எப்போதும் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது என்பதை, 2011 தமிழக சட்டசபை தேர்தல் நிரூபித்துக் காட்டியிருக்கிறது.///

    மிக சரியாக சொன்னீர்கள் வாத்தி....

    ReplyDelete
  31. தமிழ்வாசி - Prakash கூறியது...

    paakkalaam. amma enna seiraangannu?//என்னய்யா கம்மன்ட் போடற நீ..

    ReplyDelete
  32. மதுரன் கூறியது...
    எம்.ஜி.ஆர்., ஒருவரைத் தவிர, தொடர்ந்து இரண்டாவது முறையாக தங்களை ஆளும் உரிமையை, மக்கள் வேறு யாருக்கும் வழங்கியதில்லை. கருனாநிதி,ஜெ எல்லோருமே மாறிமாறித்தான் ஆட்சியில் இருந்திருக்கிறார்கள். அப்பொழுதெல்லாம் அவர்கள் நல்லது செய்ததாகவோ,பயந்ததாகவோ, திருந்தியதாகவோ தெரியவில்லையே/// sabaash sariyaana padhil

    ReplyDelete
  33. saro கூறியது...

    உங்கள் பதிவு நன்றாக இருந்தது /// நன்றி..

    ReplyDelete
  34. ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...

    ஓட்டு போட்டாச்சு மக்கா///நன்றி.

    ReplyDelete
  35. cheena (சீனா) கூறியது...

    அன்பின் கருண் - சிந்தனை இயல்லபானதுதான் - மக்கள் புகட்டிய பாடம் இதுதான். 91 ல் இருந்து மாறி மாறித்தானே வருகிறார்கள். நட்புடன் சீனா /// நன்றி ஐய்யா ..

    ReplyDelete
  36. //எம்.ஜி.ஆர்., ஒருவரைத் தவிர, தொடர்ந்து இரண்டாவது முறையாக தங்களை ஆளும் உரிமையை, மக்கள் வேறு யாருக்கும் வழங்கியதில்லை.//

    எம்ஜிஆர் ஒரு வாழும் சகாப்தம்ய்யா...

    ReplyDelete
  37. MANO நாஞ்சில் மனோ கூறியது...

    //சிலரை சில நாள் ஏமாற்றலாம்; பலரை பல நாள் ஏமாற்றலாம். ஆனால், எல்லாரையும், எப்போதும் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது என்பதை, 2011 தமிழக சட்டசபை தேர்தல் நிரூபித்துக் காட்டியிருக்கிறது.///

    மிக சரியாக சொன்னீர்கள் வாத்தி....// நன்றி மக்கா..

    ReplyDelete
  38. //பணத்தைக் கொட்டி, காலேஜ் சீட்டோ, அரசு வேலையோ வேண்டுமானால் வாங்கிவிடலாம்; ஆனால், ஆட்சி அமைக்கும் உரிமையை வாங்கி விட முடியாது என்பதை, அரசியல் கட்சிகள் இனிமேலாவது உணர்ந்து செயல்பட்டால், அவர்களுக்கும் நல்லது; நாட்டுக்கும் நல்லது///

    இதை நச்சின்னு மக்களும் சொல்லிட்டாங்க, நீங்களும் சொல்லிட்டீங்க...

    ReplyDelete
  39. பார்ப்பன சதி வலையில் தமிழர்கள் விழுந்து விட்டார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை. நாட்கள் போகப் போக அனைவருக்கும் நன்கு தெளிவாகும். நான் எக்கட்சியையும் சாராதவன்.ஆனால் பார்ப்பனியம் என்ற ஆதிக்க சக்திக்கு எதிரானவன்.இங்குள்ள பதிவர்கள் அனைவரும் 70 களின் இறுதியிலோ அல்லது 80 களின் முற்பகுத்யிலோ பிற்ந்திருப்பீர்கள்.எனவே பார்ப்பனீயம் என்ற தீய சக்தியை தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.அதனால் தான் தினமலர், தினமணி, துக்ளக், கல்கி, ஆனந்தவிகடன் போன்ற பார்ப்பன ஏடுகளை நம்பி ,அவர்களின் பரப்புரைகளை நம்பி ஏமாந்து நிற்கின்றீர்கள். தினமணியில் நேற்று வெளியான சோ, ஜெயலலிதா மற்றும் விஜயகாந்த் ஆகியோர் இடம் பெற்ற புகைப்படத்தை பார்த்திருப்பீர்கள்.இதிலிருந்து தெரியும் உண்மை சோ என்ற ஆதிக்கசக்தி வெறியன் ஒரு கூட்டணியை உருவாக்கி அதைவெற்றி பெறச் செய்யும் குள்ளநரித் தந்திரம் படைத்தவன் என்பது தான்.இது ஒரு ஆபத்தான நிகழ்வு.

    ReplyDelete
  40. பார்ப்பன சதி வலையில் தமிழர்கள் விழுந்து விட்டார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை. நாட்கள் போகப் போக அனைவருக்கும் நன்கு தெளிவாகும். நான் எக்கட்சியையும் சாராதவன்.ஆனால் பார்ப்பனியம் என்ற ஆதிக்க சக்திக்கு எதிரானவன்.இங்குள்ள பதிவர்கள் அனைவரும் 70 களின் இறுதியிலோ அல்லது 80 களின் முற்பகுத்யிலோ பிற்ந்திருப்பீர்கள்.எனவே பார்ப்பனீயம் என்ற தீய சக்தியை தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.அதனால் தான் தினமலர், தினமணி, துக்ளக், கல்கி, ஆனந்தவிகடன் போன்ற பார்ப்பன ஏடுகளை நம்பி ,அவர்களின் பரப்புரைகளை நம்பி ஏமாந்து நிற்கின்றீர்கள். தினமணியில் நேற்று வெளியான சோ, ஜெயலலிதா மற்றும் விஜயகாந்த் ஆகியோர் இடம் பெற்ற புகைப்படத்தை பார்த்திருப்பீர்கள்.இதிலிருந்து தெரியும் உண்மை சோ என்ற ஆதிக்கசக்தி வெறியன் ஒரு கூட்டணியை உருவாக்கி அதைவெற்றி பெறச் செய்யும் குள்ளநரித் தந்திரம் படைத்தவன் என்பது தான்.இது ஒரு ஆபத்தான நிகழ்வு.

    ReplyDelete
  41. மக்களின் வோட்டுக்களின் சக்தியை இரண்டு அரசியல் கட்சி தலைவர்களும் புரிந்து கொண்டு இருப்பார்கள்.

    ReplyDelete
  42. சரியாத்தான் சொல்லி இருக்கீங்க!

    ReplyDelete
  43. ///ஐந்து ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்த கட்சியை கரை சேர்க்கவில்லை.////

    எவ்வளவு காலம் தான் றால் போட்டு சுறா பிடிப்பது...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்.. ?

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"