பெரும்பான்மை பலம் பெற்ற கட்சி தலைவர், முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு, பதவியில் அமர்ந்தவுடன், அவர் போடும் முதல் கையெழுத்து, மிகவும் எதிர்பார்ப்பு வாய்ந்ததாக இருக்கும்.
தேர்தல் பிரசாரம் முடிந்தவுடன், "இனி ஆட்சியில் அமர்ந்தால், நீங்கள் இடும் முதல் கையெழுத்து எதுவாக இருக்கும்' என நிருபர்கள் கேட்டதற்கு, "அது எதுவாயினும், ஏழை எளியவர்களின் கண்ணீரைத் துடைப்பதற்காகவே இருக்கும்' என, கருணாநிதி கூறியிருந்தார்.
விலையில் விண்ணைத் தொட்ட அத்தியாவசியப் பொருட்கள், வெள்ளைக் குதிரையின் விலை போல் கூறப்பட்ட காய்கறிகள், இதுவரை தமிழகம் சந்திக்காத மின் பற்றாக்குறை போன்றவற்றால், நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள், தங்கள் தினசரி வாழ்க்கையை ஓட்டுவதற்கு விழி பிதுங்கி நின்ற போது, அவர்களின் துயர் போக்க, அரசின் சார்பில் முன்னாள் முதல்வர் எடுத்த நடவடிக்கை என்னவென்று அவரால் கூற முடியுமா?
அவரது ஆட்சியின் போது தான் மின்சாரத்துறை, மின்வெட்டுத்துறை என மாற்றமடைந்து, அது நம்மை பின்னோக்கி இழுத்துச் சென்று, மின்சாரம் கண்டுபிடிப்பதற்கு முன் உள்ள காலம் எவ்வாறு இருந்திருக்கும் என உணரச் செய்தது.கடந்த, 2008, ஜூலையில் துவங்கிய மின்வெட்டு, தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு, தற்போது பகலில், சென்னையில் ஒரு மணி நேரம், மற்ற மாவட்டங்களில் மூன்று மணி நேரம் இருக்கும் என்ற நிலையில் உள்ளது.
எனவே, நம் அவசிய தேவையான மின்சாரம் பெருக, அதில் தமிழகம் தன்னிறைவு அடைய, அத்துறையில் நிர்வாக குளறுபடிகள் நீங்க, இது நாள் வரை தமிழக முதல்வர் செய்யத் தவறியதை, இனி ஆட்சிக் கட்டிலில் அமரப் போகும் ஜெ., மாற்றி, மக்களை மின்வெட்டிலிருந்து விடுவிக்க, அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் தன் முதல் கையெழுத்தை இட வேண்டும்!
வலைச்சரத்தில் இன்று : அதிரடி அரசியல் பதிவுகள் - அரசியல் வெள்ளி
ஆட்சிதுவக்கமே அமர்களப்படுத்துகிறார் ஜெ.,
ReplyDeleteபணிவான பேச்சு..
பரபரப்பு இல்லாத வேகம்..
பார்ப்போம..
இது 5 ஆண்டுகள் நீடிக்க வேண்டும்
என்று வேண்டுவோம்..
அடிப்படை பிரச்சனைதான்
ReplyDelete=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+
கல்கத்தா
http://speedsays.blogspot.com/2011/05/blog-post_1916.html
அனைவரின் எதிர்பார்ப்பும் அதுதான்...
ReplyDeleteரிலாக்ஸா கையெழுத்து போடுவாங்கய்யா
ReplyDeleteகலைஞர் என்ன கையெழுத்து போட்டாரு..நினைப்பில்லை..ஆங் இலவச டிவி..?ஒரு ரூபாய் அரிசி..?
ReplyDeleteதெளிவான, அமைதியான வார்த்தை பிரயோகத்தை பார்த்த போது விரைவில் ஒரு தமிழக அரசியலில் ஒரு புயலடிக்கும் என்று தோன்றுகிறது. அது கலைஞர் குடும்பத்தை உலுக்காமல் விடாது
ReplyDeleteஎப்படியோ பைல படிச்சுப்பாத்து கையெழுத்துப் போட்டா சரிதான்...!
ReplyDeleteஎதுவென்றபோதும் நல்லது நடந்தால் சரி..
ReplyDeleteஜெயலலிதா ஆட்சிக்கு வர காரணமா இருந்த ஆர்க்காட்டாரை பாராட்ட வேண்டும்...
ReplyDeleteவாத்தி சொல்லியாச்சு அம்மா செஞ்சாச்சு....
ReplyDeleteஃபைலை படிச்சி பார்த்து ஒப்பு போட சொல்லுங்க, இல்லைனா நாஞ்சில்மனோ கதி ஆகிருவீங்க...
ReplyDeleteஎன்னய்யா வாத்தி உம்மையும் எவனோ மிரட்டுற மாதிரி இருக்கே....
ReplyDeleteஎல்லாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..)
ReplyDeleteஒரு நல்ல விஷயத்திற்கு கையெழுத்து போட்டால் சரிதான்
ReplyDeleteமக்களை மின்வெட்டிலிருந்து விடுவிக்க, அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் தன் முதல் கையெழுத்தை இட வேண்டும்!//
ReplyDeleteநல்லது ... நடந்தால் சரி..
vaaththi. innaikku madurai'yila ippa varaikkum powercut aana neram 4 - 5 hrs. intha sani kizhamaya aatchi seirathu amma'vaa, ayya'vaa?
ReplyDeleteமுடல் கையெழுத்து சாமான்னியர்களின் துயரைத்துடைப்பதர்க்காக இருக்கட்டும்.
ReplyDeleteஎல்லோரும் பிரச்சினைகளுக்கு விடிவுகாலம் வரும் என்றுதான் எதிர்பார்க்கிறோம். தமிழக மக்களுக்கு நல்லது நடக்க அந்த ஆண்டவனை வேண்டுவோம்.
ReplyDeleteநல்லது நடக்குமா.......
ReplyDeleteமக்களுக்கான யதார்த்தப் பிரச்சினையை, அம்மாவிடம் முன் வைப்பது போன்ற கோரிக்கையில்- ஒரு விழிப்புணர்வாக உங்கள் பதிவு எழுதப்பட்டிருக்கிறது.
ReplyDeleteசிறிது காலம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்- அம்மாவின் மக்கள் பணி எவ்வாறு இருக்கப் போகிறது என்பதனை.
இந்தியாவின் இரும்புப் பெண், சிறந்த அரசியல் நிர்வாகத் திறமை கொண்ட அம்மையார் ஜெ.. அவரகள் தங்கள் ஆட்சியின் தொடக்கததில் தேவர்-தேவேந்திரர் ஒற்றுமைக்கு வழி செய்ய வேண்டும்.
ReplyDeleteஇந்தியாவின் இரும்புப் பெண், சிறந்த அரசியல் நிர்வாகத் திறமை கொண்ட அம்மையார் ஜெ.. அவரகள் தங்கள் ஆட்சியின் தொடக்கததில் தேவர்-தேவேந்திரர் ஒற்றுமைக்கு வழி செய்ய வேண்டும்.
ReplyDeleteகவனமா போடச் சொல்லுங்கள் வெள்ளை காகிதத்தில் போட்டாலும் போட்டுடுவாங்க...
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
என் மலர் விழியை கண்டிங்களா ?
சகோதரம் ஒரு அவசர வேண்டுகோள் இத்தகவலை சீனா ஐயாவிடம் சேர்ப்பித்து உதவவும்... எனது குறோம், பயபொக்ஸ் இணைய உலாவியால் வலைச்சரத்தை திறக்க முடியவில்லை எத்தனையோ தடவை முயற்சித்தும் முடியல இப்பிரச்சனை கடந்த 3 வாரங்களாக இருக்கிறது என் இணைய இணைப்பு வேகமின்மை தான் காரணம் என விட்டு விட்டேன் தயவு செய்து உதவங்கள்...
ReplyDelete