வேலமுள் காற்றாடிகள்,
பணங்காயில் வண்டிசெய்தும்,
தைரியமாய் 'தும்பி' பிடித்தும்,
பன ஓலையில் ஃபேன் செய்து ஓடவிட்டும்,
நத்தை ஓடு திறந்து நகர்வதைச்
சத்தம் இல்லாமல் உற்று நோக்கியும் ,
அஞ்சாங்கால், ஏழாங்கால் பல்லாங்குழிகளை
ஐம்பது வயது பாட்டிகளோடு விளையாடியும்,
நாவல் பழங்களை ஏறிப்பறித்தும்,
புளிய மரம் உலுக்கி விளையாடியும்,
மீன் பிடிக்க சட்டை கழற்றி
வெள்ளத்தில் விட்டுவிட்டு
வீடு சேர வேட்கிப் போனதுமான
என் மழலை நாட்கள்...
இன்று
என் மகளோ
என் மகளோ
கணினி இயக்கியும்,
படப்புத்தகமும்,
கரடி போம்மையுமாய்....!
பய புள்ளைக்கு சரக்கடிச்சாத்தான் கவிதா சாரி கவித வரும் போல ஹிஹி!
ReplyDeleteதக்காளி வடை திங்குரதுக்குன்னே ஒரு சிஸ்டம் உண்டாக்கிட்டான்யா....
ReplyDeleteஎங்கேயாவது வடை கிடைக்காமலா போகும் அன்னைக்கு இருக்கு கும்மாங்குத்து....
ReplyDeleteஇரு போயி படிச்சிட்டு [பார்த்துட்டு] வாரேன்...
ReplyDelete//இன்று
ReplyDeleteஎன் மகளோ
கணினி இயக்கியும்
படப்புத்தகமும்,
கரடி போம்மையுமாய்...//
கையில நாலு காசு இருக்குன்னு பயபிள்ளை சொல்லாம சொல்லுது பாரு....
ம்ஹும் போயி ஓட்டு போட்டுண்டு வாரேன் மக்கா....
ReplyDelete//விக்கி உலகம் கூறியது...
ReplyDeleteபய புள்ளைக்கு சரக்கடிச்சாத்தான் கவிதா சாரி கவித வரும் போல ஹிஹி!///
யோவ் என்னய்யா இப்பவே ஆரம்பிச்சிட்டாயிங்களா....?
மலரும் நினைவுகள்....
ReplyDeleteஅந்தக்காலங்கள் இனி திரும்பாது...
இந்த பதிவுக்கு ஒரு சபாஷ் போடலாம்....
ReplyDeleteஇந்த அருமையான கவிதை படிக்காமல்
சிலபேர் இதைக்கூட எங்க காபி அடித்தது என் ஆராய்ச்சி செய்துக் கொண்டிருப்பார்கள்....
தொடரட்டும் தங்கள் கவியார்வம்...
இன்று
ReplyDeleteஎன் மகளோ
கணினி இயக்கியும்//
அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
மாப்ள இதெல்லாம் சரியில்ல ?
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ கூறியது...
ReplyDeleteகையில நாலு காசு இருக்குன்னு பயபிள்ளை சொல்லாம சொல்லுது பாரு....//// இதுக்கு இப்படி ஒரு அர்த்தம் இருக்கோ?
பாட்டு ரசிகன் கூறியது...
ReplyDeleteஇந்த பதிவுக்கு ஒரு சபாஷ் போடலாம்....
இந்த அருமையான கவிதை படிக்காமல்
சிலபேர் இதைக்கூட எங்க காபி அடித்தது என் ஆராய்ச்சி செய்துக் கொண்டிருப்பார்கள்... /////
ஏதோ உள்குத்து மாதிரி தெரியுது?
////என் மழலை நாட்கள்...////
ReplyDeleteநிச்சயமாக கிடைக்காது சகோதரம் அந்த இனிமையான நாட்கள்..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
அளவுக்கதிகமான பரசிட்டமோல் என்ன செய்யும்.. (Paracetamol Poisoning)
இராஜராஜேஸ்வரி கூறியது...
ReplyDeleteஅருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்./// பாராட்டிற்கு நன்றிகள்..
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
ReplyDeleteநிச்சயமாய் கருன்.. நீங்கள் சொல்லிய ஒவ்வொரு நிகழ்வும்..நினைத்திற்கினிய நினைவுகள்.. பால்ய பருவத்தை கண்முன்னே நிறுத்திகிறது வரிகள்..நன்றி.. வாழ்த்துக்கள்..!!
ReplyDeleteகவிதையை படிக்கும்போது எமது பாலப்பருவமும் நினைவில் நின்றாடியது.. எவ்வளவு விலைகொடுத்தாலும் அவ்வினிமையை திரும்ப பெறமுடியுமா? சந்தேகமே..!
ReplyDeleteவாழ்த்துக்கள் கருன் !மனமதை மகிழ்ச்சியில் ஆழ்த்தியமைக்கு..!!
எல்லோருக்கும் ஆசைதான் ஆனால் திரும்ப வருமா ??????????
ReplyDeleteநல்ல கவிதை.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
மலரும் நினைவுகள். காலமாற்றத்தின் மாற்றத்தை யாராலும் மாற்ற முடியாது.
ReplyDeleteநல்லா இருக்குங்கோவ்.....!
ReplyDeleteசகோ!பல்லாங்குழி இல்லாமலே போயிட்டு,
ReplyDeleteஅந்தக்காலம் திரும்பாது,அந்த காலத்து விளையாட்டுகளை யாராவது தனிப் பதிவா போடுங்க!
நமக்கிருந்தது,இவர்களுக்கில்லை;இவர்களுக்குக் கிடைத்தது நமக்குக் கிடைக்கவில்லை!
ReplyDeleteஆயினும் ,ஓலையில் காற்றாடி செய்து அது நன்றாக சுற்றுவதற்காக ஒரு மந்திரம் போல் அதை வாயருகே வைத்துக்”குன்னாங்குன்னா குர்ரா” என்று சொல்லி அதைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடும் சுகமே தனி!
அந்த நினைவுகளை ஒரு பதிவாகவே வெளியிடலாம் எனத் தோன்றுகிறது!
அருமையாக பால்யத்தை அனுபவித்திருக்கிறீர்கள். சகோ.
ReplyDeleteஎன்னுள்ளும் இதே நினைவுகளை
ReplyDeleteஉண்டாக்கிபோகிறது
கோடை விடுமுறையும்
வீட்டுச் சூழலும்
நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்
அரும்பி நிற்கும் ஆசைகளை குறும்பு தட்டிப் பார்க்கிறது மனது கவிதையின் வரியில்..
ReplyDeleteகண்டிப்பா திரும்ப கிடைக்காத வரம் தான்...
மழழை நாட்களை திரும்பிப் பார்க்க முடிந்ததில் மகிழ்ச்சி...
பதிவு அருமை நண்பரே..
அவ்வ்வ்வ் ...இப்படியா எங்கள் நினைவுகளை கிளறி விடுவது .
ReplyDelete.தீப்பெட்டி டெலிபோன் ,தண்ணி (H2o)பட்டவுடன் வெடிக்குமே ஒரு செடி விதை அப்புறம் கம்மர்கட் இதெல்லாம் எங்கள் தொலைந்து போன அழகான நாட்கள் .
இவ்வாழ்க்கை வட்டம் திரும்ப கிடைக்குமா? நிச்சயமாக இல்லை.. கவிதை அருமை
ReplyDeleteஇத்தனையும் நானும் விளையாடி இருக்கேன் :)
ReplyDeleteசரியாய் பள்ளிவிடுமுறை பார்த்து கவிதை சொல்லி இருக்கீங்க
மறுபடி ஒருதடவை பள்ளிக்கூடம் போகணும் போல இருக்கு :(
http://karadipommai.blogspot.com/
ஏந்தேர் ஏனியியற்றி போனாலும்
ReplyDeleteகாலம் வீழ்ந்தின்றி மீண்டதில்லை
கவிதை சுப்பர் வர வர கவிஞன் ஆகிக்கொண்டே போறிங்க
ReplyDeleteஇனிமையான மலரும் நினைவுகள். கவிதை அருமை.
ReplyDeleteமலரும் நினைவுகளா கருண் - நானும் கொடுவத்திஎல்லாம் சுத்தி இருக்கேனே - நேரம் கிடைக்கும் போது பார்க்கவும்
ReplyDeletehttp://cheenakay.blogspot.com
2007 ஆக்ஸ்ட் - அசை போட்டு அனுபவித்து எழுதியது - குறிப்பு 1 எனத் துவங்கி குறிப்பு 6 வரை எழுதி இருக்கிறேன்
சிறுவயது தீபாவளி பற்றிய இடுகை
http://cheenakay.blogspot.com/2008/10/blog-post_26.html
நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா