Tamilus

The best Tamil Aggregator | Tamilus

5/19/2011

இனிது..இனிது...!


றியாமை இனிது 
அனைத்தும் அறிந்த 
அறிவை அறிவெனத்
தேரா மாந்தர் முன் 
அறியாமை இனிது...!

பேசாமை இனிது 
பேசியும் 
சாமான்யன் பேச்சு என்பதால் 
பேதம் காட்டும்
மனிதர்கள் முன்னே 
பேசாமை இனிது...!

செல்லாமை இனிது 
சென்றால் 
பேச்சால், செயலால்
காமத்தை சீண்டிப் பார்க்கும் 
பித்தர் முன்னே 
வேலைக்குக்  கூட
செல்லாமை இனிது ...!

ழுதாமை இனிது 
எழுத்தினால் 
சாதிக்க பல இருந்தும் 
சாமான்யன் எழுத்து 
என்பதினால் 'பூ' என ஒதுக்கும்
வல்லோர் முன்னே 
எழுதாமை இனிது...!

36 comments:

  1. காலையிலே அட்வைஸா ?

    ReplyDelete
  2. mமாப்ளை என்னமோ சொல்ல வர்றாரு.. ஆனா என்ன நு தான் புரியல ஹி ஹி

    ReplyDelete
  3. அண்ணே நல்லா இருக்குன்னே!

    புரியல்லன்னா இப்படித்தான் சொல்லணும் ஹிஹி!

    ReplyDelete
  4. பெயரில்லா கூறியது...

    காலையிலே அட்வைஸா ?// உனக்கு பெயரில்லையா ?

    ReplyDelete
  5. சி.பி.செந்தில்குமார் கூறியது...

    ஜஸ்ட் மிஸ்சா?/// எது?

    ReplyDelete
  6. சி.பி.செந்தில்குமார் கூறியது...

    mமாப்ளை என்னமோ சொல்ல வர்றாரு.. ஆனா என்ன நு தான் புரியல ஹி ஹி// அடப்பாவி..

    ReplyDelete
  7. விக்கி உலகம் கூறியது...

    அண்ணே நல்லா இருக்குன்னே!

    புரியல்லன்னா இப்படித்தான் சொல்லணும் ஹிஹி!// மாப்ள உனக்குமா?

    ReplyDelete
  8. இனிது, இனிது... கவிதை இனிது.

    ReplyDelete
  9. புதிய ஆத்திச் சூடி சூப்பரா இருக்கே

    ReplyDelete
  10. இன்னும் சுருங்க சொல்லியிருக்கலாம்னு சிபி சொல்றாரா

    ReplyDelete
  11. பேசாமை இனிது
    பேசியும்
    சாமான்யன் பேச்சு என்பதால்
    பேதம் காட்டும்
    மனிதர்கள் முன்னே
    பேசாமை இனிது...!


    .... nice. கருத்துக்கள் அள்ளித் தெளித்து இருக்கீங்க....

    ReplyDelete
  12. அவ்வையை நல்லா ரீமிக்ஸ் பண்ணி இருக்கீங்க..நல்லா இருக்கு!

    ReplyDelete
  13. சரி..சரி...கேட்டுக்கறேன். ஆனா என்ன சொல்றிங்கன்னு புரியல அப்படின்னு கேட்க மாட்டேன். ஹி..ஹி...

    ReplyDelete
  14. அருமைங்க. இந்த மாதிரி பதிவுகள் எல்லாம் இப்போ ரொம்ப குறைவு. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  15. கருண் நீங்கள் எழுதும் கவிதைகள் எப்போதுமே எனக்குப் பிடிக்கும்! இதனை நான் பலமுறை சொல்லி வந்திருக்கிறேன்! இன்றும் கூட மிக அருமையாக எழுதி இருக்கிறீர்கள்! உங்கள் எண்ணங்களை ஒவ்வையாரின் மொழியிலே சொன்னது நல்லதொரு சிந்தனை! வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  16. //பேசாமை இனிது
    பேசியும்
    சாமான்யன் பேச்சு என்பதால்
    பேதம் காட்டும்
    மனிதர்கள் முன்னே
    பேசாமை இனிது...!//

    மதிக்காதவர்களிடத்தில் பேசாமல் இருப்பதே நல்லது அழகான வரிகள் கரூன்.

    ReplyDelete
  17. இனியவை நாற்பது பார்ட் 2 எழுதி விடும் ஐடியா இருக்கு போல

    ReplyDelete
  18. இனிது இனிது உங்களின் இந்த பதிவை படித்தல் இனிது...

    ReplyDelete
  19. அருமையாக இனிது குறித்து
    விளக்கியிருக்கிறீர்கள்
    காமத்தைச் சீண்டிப்பார்க்கும்....
    இதுதான் கொஞ்சம் பொருந்தாததுபோல் பட்டது
    நல்ல பதிவுதொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  20. உங்கள் சொல்லியிருக்கும் விதம் இனிது...இனிது

    ReplyDelete
  21. உங்கள் சொல்லியிருக்கும் விதம் இனிது...இனிது

    ReplyDelete
  22. எஞ்சேர் புடைபணிந்து

    இரவும் பணிசேர்த்து

    என்செந்தமிழ் விதைத்தாய்

    வாழ்க உன் குடில்

    =+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=
    இன்று நம் பதிவுலகில் விருது வழங்கபட்டுள்ளது, விழாவில் கலந்து கலக்குங்கள்

    நாமே ராஜா, நமக்கே விருது-7

    http://speedsays.blogspot.com/2011/05/award-7.html

    ReplyDelete
  23. அட அட அடா! சொல்லவும் முடியல.. எழுதவும் முடியல.. பேசவும் முடியல, அறிந்தும் அறியாமலும் நான் படித்த வரை கவிதை பல நல்ல கருத்துக்களை சுமந்திருக்கிறது.. :)


    http://karadipommai.blogspot.com/

    ReplyDelete
  24. ///பேசாமை இனிது
    பேசியும்
    சாமான்யன் பேச்சு என்பதால்
    பேதம் காட்டும்
    மனிதர்கள் முன்னே
    பேசாமை இனிது...!// ஆகா ஆகா தத்துவம் அருமை!

    ReplyDelete
  25. இனிது இனிது இந்தப் பதிவு இனிது.

    ReplyDelete
  26. உங்கள் கவிதையும் இனிது…

    ReplyDelete
  27. நன்று வாத்யாரே!

    ReplyDelete
  28. அன்பின் கருண்

    அருமையான சிந்தனையில் விளைந்த அழகிய கவிதை. நன்று. மொத்தத்தில் மதியாதார் வாசல் மிதியாதே ! நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  29. கவிதை இனிது கருன்.

    ReplyDelete
  30. இனிது..இனிது...!!
    எளிமை அருமை!!!

    ReplyDelete
  31. சிறப்பான கவிதை கருன் !

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"