Tamilus

The best Tamil Aggregator | Tamilus

5/05/2011

என்னை காபி பேஸ்ட் பதிவர் என்பவர்களுக்கு - என் பதில் !?





நீளப்  போர்வையாய்ப்
போர்த்திக்கொண்டேன் 
என் மௌனத்தை ...!

ன்னில் தேங்கிக் கிடந்த 
மகிழ்ச்சியை
சுரண்டிக் குளிர் காய்ந்த 
கோரமுகத்திற்குப்
பதிலடியாய் 
கை நீட்டும் என் மௌனம்...!

னது வசவுகளும் 
கோபங்களும்
பொங்கிப் பாய்கையில் 
இலாவகத்தொடு 
உள்ளடைக்கும் என் மௌனம் ...!

சுற்றிலுமான
விமர்சனங்களுக்கும்
நான் புன்னகையோடு 
பரிமாறினேன் மௌனத்தை ...!

வரவர் முகத்தை
அவர்களுக்கே காட்டும் 
கண்ணாடி 
என் மௌனம் ...!


45 comments:

  1. உங்கள்மீது விமர்சனம் செய்பவர்கள் பற்றி நீங்கள் கவலைப்படவேண்டாம். அவர்கள் தங்கள் வலைப்பதிவை முன்னுக்கு கொன்டுவருவதற்காக மற்றையவர்கள் மேல் வீண்பழி சுமத்தி குறுக்கு வழிகளிலே முயற்சிக்கிறார்கள். இத்தகையவர்கள் விரைவில் ஓரங்கட்டப்பட்டு விடுவார்கள்

    ReplyDelete
  2. அடடா அடடா அடடடடா!

    ReplyDelete
  3. //சுற்றிலுமான
    விமர்சனங்களுக்கும்
    நான் புன்னகையோடு
    பரிமாறினேன் மௌனத்தை ...!//

    தங்கள் மீதுள்ள மரியாதை இன்னும் அதிகரித்துள்ளது கருன்

    ReplyDelete
  4. உங்கள்மீது விமர்சனம் செய்பவர்கள் பற்றி நீங்கள் கவலைப்படவேண்டாம். அவர்கள் தங்கள் வலைப்பதிவை முன்னுக்கு கொன்டுவருவதற்காக மற்றையவர்கள் மேல் வீண்பழி சுமத்தி குறுக்கு வழிகளிலே முயற்சிக்கிறார்கள். இத்தகையவர்கள் விரைவில் ஓரங்கட்டப்பட்டு விடுவார்கள்//

    I accept this

    ReplyDelete
  5. But i ll tell if u copy some content..He He

    ReplyDelete
  6. மௌனத்தை போல பெரிய ஆயுதம் இல்லை சகொதரா ஆனால் அதை எடுக்கத் தான் சில நேரம் மனம் விடுகுதில்லை...

    ReplyDelete
  7. காப்பி என்பது தவிர்க்க முடியாத ஒன்று...
    சிலர் தனக்கு படித்து பிடித்த பதிவுகளை மின்அஞ்சல் மூலம் மற்ற நண்பர்களுடன் பரிமாறி கொள்கிறார்கள். சில பேர் தங்களது வலைதளத்தில் காப்பி செய்து, தங்களது வலைதளத்தை பின் தொடற்பவர்களுடன் பரிமாறி கொள்கிறார்கள். இவ்வாறு செய்யும் போது தாங்கள் காப்பி செய்த வலைதளத்தின் முகவரியை கீழே கொடுத்துவிட்டால் எந்த தொல்லைகளும் வராது.
    இதன் மூலம் உண்மையான பதிவை எழுதியவருக்கும் ஒரு அங்கீகாரம் கிடைக்கும் அல்லவா?

    http://rajaguru-rajam.blogspot.com/2011/05/blog-post.html

    ReplyDelete
  8. @ ராஜகுரு

    சகோதரம் வேறு புத்தகம் போன்ற இடங்களில் எடுத்து விட்டு சுட்டிக்காட்டுவதில் தப்பில்லை ஆனால் ஒரு வலைத்தளத்தில் இருந்து எடுத்து விட்டு சுட்டிக் காட்டுவதிலும் பார்க்க முற் குறிப்பை கொடுத்து விட்டு மிகுதிக்கு லிங்கை கொடுக்கலாம் தானே... எழுதியவர் தளம் சென்று பார்ப்பது தானே அவருக்கு பெறுமதியானது தப்பாக சொன்னால் மன்னிக்கவும்...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    அளவுக்கதிகமான பரசிட்டமோல் என்ன செய்யும்.. (Paracetamol Poisoning)

    ReplyDelete
  9. ம்ம்ம், ரைட்டு...நடக்கட்டும்....நடக்கட்டும்....

    ReplyDelete
  10. அவரவர் முகத்தை
    அவர்களுக்கே காட்டும்
    கண்ணாடி
    என் மௌனம் ...!>>>>>

    செம வரிகள் மாம்ஸ்...

    ReplyDelete
  11. ராஜகுரு சொன்ன பதிலே போதும் என நினைக்கிறேன்

    ReplyDelete
  12. ஆமா தலைப்புக்கு விளக்கம் கவிதையா..ம்..நடத்துங்க

    ReplyDelete
  13. உங்கள்மீது விமர்சனம் செய்பவர்கள் பற்றி நீங்கள் கவலைப்படவேண்டாம். அவர்கள் தங்கள் வலைப்பதிவை முன்னுக்கு கொன்டுவருவதற்காக மற்றையவர்கள் மேல் வீண்பழி சுமத்தி குறுக்கு வழிகளிலே முயற்சிக்கிறார்கள். இத்தகையவர்கள் விரைவில் ஓரங்கட்டப்பட்டு விடுவார்கள்//
    வெல்டன் மதுரன்

    ReplyDelete
  14. மாப்ள பொங்குவார்னு பார்த்தா அடக்கி வாசிச்சுட்டாரே.. ம்ம் ம் ஓக்கே

    ReplyDelete
  15. அன்பின் கருன்,

    கூறுபவர்கள் கூறிக் கொள்ளட்டும். மௌனம் ஒரு சிறந்த மொழி. இருப்பினும் எங்கிருந்தாவ்து செய்திக்ளை எடுத்து இங்கு இடுகையாக இட்டால் - மூலத்தினையும் ஆரம்பித்திலேயே சொல்லி விடுவது நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  16. //என்னில் தேங்கிக் கிடந்த
    மகிழ்ச்சியை
    சுரண்டிக் குளிர் காய்ந்த
    கோரமுகத்திற்குப்
    பதிலடியாய்
    கை நீட்டும் என் மௌனம்...!//

    அய்யயோ... உங்கள் மகிழ்ச்சியை சுரண்டிட்டான்களா பாஸ்...

    அடுத்தவன் எழுதியதை எடுத்து நீங்கள் போடும் போது உண்மையில் எழுதியவன் எவ்வளவு மன உளைச்சலுக்கு உள்ளாவான் என தெரியுமா கருண்.

    செய்யுறது சுடுற வேலை. அதுல பீலிங் வேறயா பாஸ்? உங்களை தலைல தூக்கி வச்சு கொண்டாடனும்னா பாஸ் நினைக்குறீங்க?

    நீங்கள் செய்ற வேலை முக்காடு போட்டுக் கொண்டு செய்ய வேண்டியது.

    மன்னிக்கவும். நான் கூறியது உங்களை புண்படுத்தி இருக்காலாம். ஆனால் கூறியது அனைத்தும் உண்மை.

    ReplyDelete
  17. நிதானமான பதிலுக்குப் பாராட்டுகள் கருன்!

    ReplyDelete
  18. விமர்சனத்தை தூக்கி தூர எறிந்துவிட்டு, தங்கள் பணியை தொடருங்கள் சகோ. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. மௌனத்தைப் போல் சிறந்த ஆயுதம் எதுவுமில்லை. அவர்களுக்கு மற்றவர்களைப்பற்றி குற்றம் காண்பது மட்டுமே வேலை. நமக்கு ஆயிரம் அர்த்தமுள்ள வேலைகள் இருக்கிறது. விமர்சனங்களை புறந்தள்ளி நம்வேலையைப் பார்க்க போய்ட்டே இருக்கணும். எல்லாவற்றையும் கவிதையாய் பார்க்க(வடிக்க)தெரிந்த உங்கள் திறமையை மதிக்கிறேன். வெல்டன்.

    ReplyDelete
  20. மெளனத்தாலே பதில் சொல்லி விட்டீர்கள்...

    ReplyDelete
  21. பதில் என்று சொல்லிவிட்டு கவிதையாக எடுத்து விட்டிருக்கிறீர்கள்..!

    காரசாரமான இடுகையை எதிர்பார்க்க வைத்தது தலைப்பு. ஆனால் மௌனம் தான் எனது பதில் என்று சொல்லி எம்மை மௌனத்தில் ஆழ்த்திவிட்டீர்களே.. கருன்..!

    ReplyDelete
  22. பின்னிடிங்க தலைவா

    ReplyDelete
  23. " A joke " visit
    http://rajamelaiyur.blogspot.com/2011/05/blog-post_586.html

    ReplyDelete
  24. அவரவர் முகத்தை
    அவர்களுக்கே காட்டும்
    கண்ணாடி
    என் மௌனம் ...!//

    arumaiyana savukkadi .....

    dont feel about other word

    keep rockinggggggggggggggg

    ReplyDelete
  25. நண்பா மௌனம் உலகில் மிகப் பெரிய ஆயுதம்! மௌனமா இருங்க! எல்லாம் சரியாகும்!!

    ReplyDelete
  26. //அவரவர் முகத்தை
    அவர்களுக்கே காட்டும்
    கண்ணாடி
    என் மௌனம் ...!//
    இதை விடச் சிறப்பாகச் சொல்ல முடியாது.carry on karun!

    ReplyDelete
  27. உங்கள் எழுத்தின் தரம் என்றும் குறையாது....நீங்கள் ஏன் விமர்சிப்பவர்களுக்கு பதில் சொல்கிறீர்கள்?

    ReplyDelete
  28. கவிதையாகவே ஒரு தன்னிலை விளக்கம் சூப்பர்

    ReplyDelete
  29. //அவரவர் முகத்தை
    அவர்களுக்கே காட்டும்
    கண்ணாடி
    என் மௌனம் ...!//
    Nice!

    ReplyDelete
  30. கவலை வேண்டாம் கரூன் பாராட்டுபவர்கள் 100 பேரை விட்டுட்டு குறை சொல்பர்கள் 2 பேரை பற்றி கவலை வேண்டாம் தொடருங்கள்.

    என்னுடைய சிறிய அறிவுரையும் இது தான் நம் வலைப்பதிவுகளில் இருந்து எடுக்க வேண்டாம் ஒருவேளை நீங்கள் எடுத்து போட்டு இருந்தால் அதை பற்றி பதிவிற்கான உரிமையாளர் திரட்டிகளிடம் புகார் செய்தால் அனைத்து திரட்டிகளும் உங்கள் தளத்தை தடை செய்து விடும். அப்புறம் நீங்கள் எந்த பதிவையும் இணைக்க முடியாது. ஏதேனும் தவறாக கூறி இருந்தால் மன்னித்து கொள்ளவும். உன் தளத்தின் நலனுக்காகவே கூறினேன்.

    ReplyDelete
  31. ////அவரவர் முகத்தை
    அவர்களுக்கே காட்டும்
    கண்ணாடி
    என் மௌனம் ...!/// ரொம்ப சூடான வரிகள் பாஸ். அருமை!

    ReplyDelete
  32. நச்சுனு இருக்கு

    ReplyDelete
  33. என்னை காபி பேஸ்ட் பதிவர் என்பவர்களுக்கு - என் பதில் !?//

    பதில் இல்லை, சகோ,
    வார்த்தைகளால்,...
    உச்சிப் பொட்டில் சம்மட்டியில் அடிப்பது போன்று வார்த்தைகளையல்லவா கவிதையில் கோர்த்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
  34. அவரவர் முகத்தை
    அவர்களுக்கே காட்டும்
    கண்ணாடி
    என் மௌனம் ...!//

    கவிதையின் ஹிட்..இந்த வரிகள் தான்.

    ReplyDelete
  35. உங்களை விமர்சனம் செய்பவர்களை
    எதிர்க்க நீங்கள் தூக்கிய மௌனம் எனும்
    ஆயுதம் சரியானதே ; தொடருங்கள் உங்கள்
    எழுத்துலக பணியை

    ReplyDelete
  36. //அவரவர் முகத்தை
    அவர்களுக்கே காட்டும்
    கண்ணாடி
    என் மௌனம் ...!//


    விடுய்யா, நாங்கெல்லாம் எதுக்கு இருக்கிறோம் கவலை படாமல் தொடரும்....

    ReplyDelete
  37. இது நல்லாருக்கே வாத்யாரே !

    ReplyDelete
  38. காபியோ,டீயோ வித்தா சரி:)

    ReplyDelete
  39. காய்த்த மரந்தான் கல்லடி படும்

    ReplyDelete
  40. அவரவர் முகத்தை
    அவர்களுக்கே காட்டும்
    கண்ணாடி
    என் மௌனம் ...!
    interesting..

    ReplyDelete
  41. காப்பி பேஸ்டுக்கும் கவிதை யா

    ReplyDelete
  42. What a fantastic roundup! I have always been a huge fan of No. 1 Web Design and I find your style of writing to be absolutely harmonious. Keep up the amazing topics; I look forward to checking these out in the near future

    As you can see it is all work in progress – I will be tweaking it up and blogging the modifications I made.
    WebIndia InfoTech

    ReplyDelete
  43. ரொம்பப் பிரமாதமான கவிதை இது.

    மௌனம்தானே மிகப்பெரிய வன்முறை.. வலி நிறைந்ததும் கூட..


    வாழ்த்துக்கள்.

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"