Tamilus

The best Tamil Aggregator | Tamilus

5/11/2011

மழையை ரசிக்காமல் யாரிருப்பார்?




ன்னுடைய
அறியா வயதில்
அழியா நினைவுகள் இவை...!!!

மேகம் கறுக்கையில்
அம்மாவின் முகமும் கறுக்கும்
மழை தொடங்கிய பின்னோ
வீடே நீர்காடாகும் ...!

சோறு வடிக்க
உதவாத பாத்திரங்கள்
சொட்டும் நீரை
பிடிக்க உதவும் ...!

நீர் ஒழுகாத இடத்தில்
ஒன்டிக்கொள்ள
உடன்பிறப்புகளுடன்
அடிதடி சண்டை ...!

கிடைக்கும் ஒரு வேலை
சோற்றுக்கும்
மண்ணள்ளிப் போடும்
நனைந்த விறகும் அடுப்பும் ...!

ழை வலுக்க
கழிவு நீரும்
மழை நீருடன் சங்கமமாகி
அழையா விருந்தாளியாக
குடிசைக்குள் நுழையும்
அவை விட்டு சென்ற
வியாதிகள் உதவியுடன்
உலகை விட்டுச் சென்ற
தங்கை ஒன்று ...!

வ்வொரு மழையும்
விட்டுசெல்லும் ஞாபங்கள்
மறையும் முன்னே
அடுத்த மழை...!!!

இன்று கண்ணில் பட்டது
ஒரு வரி
"மழையை  ரசிக்காமல் யாரிருப்பார்  ?"

38 comments:

  1. வலிக்கும் ஞாபகங்கள்...
    மழையில் நனைந்தும் விடாத துயரங்கள் கவிதையில்....

    யாதர்த்தமான ஒரு ஏழையின் கண்ணீர்...

    ReplyDelete
  2. மழை வலுக்க
    கழிவு நீரும்
    மழை நீருடன் சங்கமமாகி
    அழையா விருந்தாளியாக
    குடிசைக்குள் நுழையும்
    அவை விட்டு சென்ற
    வியாதிகள் உதவியுடன்
    உலகை விட்டுச் சென்ற
    தங்கை ஒன்று ...!//

    அருமையான கவிதை கருண்! எல்லோரும் மழையை பாசிடிவாக சொல்லும் போது நீங்கள் அதன் இன்னொரு முகத்தை அழகாக எடுத்து காட்டி இருக்கீங்க!

    ReplyDelete
  3. மழை, மலை,மழலை,யானை இவற்றை ரசிக்காத உள்ளங்கள் ஏது?

    ReplyDelete
  4. அருமை கருன். இதுவரை காலமும் மழையை வள்ளலாக பார்த்தோம். ஆனால் நீங்கள் அதன் கொடுமையையும் வெளிப்படுத்திவிட்டீர்கள்

    ReplyDelete
  5. கவிதைகளிலேயே கதை எழுதுகிறீர்கள்..!

    உட்கருத்தை கூறினேன்..

    பகிர்வுக்கு மிக்க நன்றி கருன்..! வாழ்த்துகளும்.

    ReplyDelete
  6. மழையை கவிதையாகவும் ரசிக்க முடிகிறது ஆனந்தம்...

    ReplyDelete
  7. பெய்யாமல் கெடுக்கும்;சில நேரம் பெய்தும் கெடுக்கும்.யதார்த்தத்தின் வெளிப்பாடு கவிதை!

    ReplyDelete
  8. மழை வலுக்க
    கழிவு நீரும்
    மழை நீருடன் சங்கமமாகி
    அழையா விருந்தாளியாக
    குடிசைக்குள் நுழையும்
    அவை விட்டு சென்ற
    வியாதிகள் உதவியுடன்
    உலகை விட்டுச் சென்ற
    தங்கை ஒன்று ...!


    ...... என்றும் மறையாத சோகந்தான்.

    ReplyDelete
  9. வர வர "வேடந்தாங்கல்" "கவிதைவீதி"யா மாரிகிட்டு இருக்கு....

    ReplyDelete
  10. மழைக்கு இரண்டு முகமுள்ளது. கவிதை நன்று.

    ReplyDelete
  11. அன்பின் கருண்

    மழை - பெரும்பாலும் நன்மையைத்தான் செய்யும் - இயறகை சில சீற்றங்களைத் தவைர், பொதுவாக நமக்கு எதிராக ஒன்றும் செய்யாது. இருப்பினும் இக் கவிதையில் குறிப்பிட்டபடி மழையை எதிர்நோக்கும் சக்தி இல்லாமல் பலர் துயரப்படுகின்றனர். அதிலும் அருமைத் தங்கையினை இழந்த சோகத்திற்கு ஆறுதலே சொல்ல இயலாது. சில ஒற்றுப்பிழைகளைத் தவிர கவிதை அருமை. நல்வாழ்த்துகள் கரிண் - நட்புடன் சீனா

    ReplyDelete
  12. அருமை...தொடருங்கள்...

    ReplyDelete
  13. கண்ணீர்மழையும் சேர்ந்த சோகம்.

    ReplyDelete
  14. நல்ல கவிதை.பிழைகளை கொஞ்சம் கவனியுங்கள்...

    ReplyDelete
  15. ///மழை வலுக்க
    கழிவு நீரும்
    மழை நீருடன் சங்கமமாகி
    அழையா விருந்தாளியாக
    குடிசைக்குள் நுழையும்
    அவை விட்டு சென்ற
    வியாதிகள் உதவியுடன்
    உலகை விட்டுச் சென்ற
    தங்கை ஒன்று ...!/// சோகத்தை கவிதையில் விட்டு சென்றுள்ளீர்கள்.......... கவிதை நன்றாக உள்ளது...

    ReplyDelete
  16. எவரும் அறியாமலே
    மழை துளிகளோடு
    சிலரின் கண்ணீர் துளிகளும்
    உதிரும்...
    அவை விட்டுச் செல்லும்
    நினைவின் வலியால்..!

    மழை பூக்கள்
    உயிர் பூக்களோடு
    விளையாடுகிறது
    பல சமயங்களில்...

    ReplyDelete
  17. நிகழ்வுகள் தரும் வலிகளும் சுகங்களும் விதம்விதமாய்..
    சிறிய வரிகளுக்குள் மிகுந்த துயரங்கள்..
    இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் இயற்கை கூட பாகுபாடு காட்டுகிறது...
    http://karadipommai.blogspot.com/

    ReplyDelete
  18. கடும் மழையெனப் பொழிந்து தள்ளி விட்டீர்கள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  19. கரூன் வலைச்சரத்துல ஒரு கமென்ட் போட்டு இருக்கேன் பார்க்கவும்.

    ReplyDelete
  20. 17 வது ஓட்டு என்னுது

    =+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=
    நீங்கள் தெரிந்து கொள்ள

    http://speedsays.blogspot.com/2011/05/blog-post_11.html

    ReplyDelete
  21. //ஒவ்வொரு மழையும்
    விட்டுசெல்லும் ஞாபங்கள்
    மறையும் முன்னே
    அடுத்த மழை...!!!//

    அபாரம்.....கரூன்...!

    ReplyDelete
  22. மழையின் சோகம் தெரிகிறது,...

    ReplyDelete
  23. (ஒவ்வொரு மழையும்
    விட்டுசெல்லும் ஞாபங்கள்
    மறையும் முன்னே
    அடுத்த மழை...!!!°)
    வரிகள் அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  24. வரிகள் சிறப்பா இருக்குங்க ...

    ReplyDelete
  25. அருமையான கவிதை

    ReplyDelete
  26. கீழே விழும் மழைத்துளிகள் எல்லாமே மகிழ்வைக் கொடுப்பதில்லை போலும்.இனி மழையைப் பார்க்கும் போதெல்லாம் இந்தக் கவிதை ஞாபகம் வரும்

    ReplyDelete
  27. மழையின் மறு பக்கம், இவ்வளவு சோகமா?

    ReplyDelete
  28. சிறப்பாக இருக்கிறது நன்றி பதிவுக்கு.

    ReplyDelete
  29. மழையின் பின்னே உள்ள சோகத்தை உணர்வுகளைச் சொல்லும் கவிதையாக வடித்துள்ளீர்கள். உங்கள் கவிதையில் உள்ள இதே உணர்வுகளை நானும் வன்னியில் கொட்டில் வீட்டில் இருந்த காலத்தில் அனுபவித்திருக்கிறேன் சகோ.

    ReplyDelete
  30. மழையின் பின்னே உள்ள சோகத்தை உணர்வுகளைச் சொல்லும் கவிதையாக வடித்துள்ளீர்கள். உங்கள் கவிதையில் உள்ள இதே உணர்வுகளை நானும் வன்னியில் கொட்டில் வீட்டில் இருந்த காலத்தில் அனுபவித்திருக்கிறேன் சகோ.

    ReplyDelete
  31. நல்ல கவிதை கருன்.

    ReplyDelete
  32. அருமை அருமை
    இதம்

    26
    36
    14
    =+=+=+=+=+=+=+=+=+=+=+
    காலம் செய்த கோலம்

    http://speedsays.blogspot.com/2011/05/blog-post_12.html

    ReplyDelete
  33. கருண்...நீங்கள் தான் எனது வலைத்தளத்தில் முதல் கருத்து தெரிவித்தவர்...அந்த வகையில் நீங்கள் மறக்க முடியாதவர்.... இன்றுதான் உங்கள் தளத்துக்கு வர முடிந்தது... கவிதை மிக அற்ப்புதம்... நல்ல படைப்பாற்றல் உங்களிடம் உள்ளது...வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  34. நல்ல கவிதை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"