புதிய முதல்வர் அவர்களே..
நான் ஆனந்தி ,நலமா ?
நான் போன முதல்வர் அவர்களுக்கு நிறைய கடிதம் எழுதி இருக்கிறேன் .. முதன் முதலாக உங்களுக்கு கடிதம் எழுதிகிறேன்.
தமிழக மக்கள் அளித்த தீர்க்கமான முடிவால் பதவியேற்ற முதல்வர் ஜெயலலிதாவின் புதிய ஆட்சியில், பொதுமக்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர். ஐந்து விஷயங்களில், இந்த அரசு உடன் கவனம் செலுத்த வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். அவை:
1.ஊழலை ஒழித்தல்,
2.விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துதல்,
3.நிர்வாகச் சீர்கேடுகளை ஒழுங்குபடுத்துதல்,
4.அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல்.
5.அனாவசிய செலவுகளைக் கட்டுப்படுத்துதல்.
கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்,
சென்னை மெட்ரோ ரயில் திட்டம்,
சர்வதேசத் தர நூலகம்,
சாலைகள்,
பூங்காக்கள்,
பாலங்களுக்கான திட்டங்கள், கடந்த தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்தப்பட்டன.
ஒரு ரூபாய்க்கு அரிசி, மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் ஆம்புலன்ஸ் வசதி திட்டங்களும் செயல்படுத்தப்பட்டன. ஆனால், சென்னையில் 10 தொகுதிகளில் ஒன்றை மட்டுமே வென்று, ஒன்பதை தி.மு.க., இழந்ததைப் பார்க்கும்போது, இவற்றையெல்லாம் மக்கள், அரசின் சாதனைகளாகக் கருதவில்லை. ஓர் அரசின் கடமையாகவே பார்த்தனர் என்பது தெரிகிறது.
தவிர, அரசு சாதனைகளாகக் கூறிய விஷயத்தின் மறுபக்கத்தையும், மக்கள் பார்க்க ஆரம்பித்தனர். (உபயம் - இலவச கலர் "டிவி') எவ்வளவு கோடி ஊழல் நடந்தது. குடும்ப சாதனைகளாகக் கருதவில்லை. ஓர் அரசின் கடமையாகவே பார்த்தனர் என்பது தெரிகிறது.
சாதாரண சைக்கிளில் சென்ற கவுன்சிலர்கள் கூட ஒயிட் சுமோவிலும், ஸ்கார்பியோவிலும் ஆடம்பரமாக செல்லும் வசதி திடீரென எப்படி ஏற்பட்டது. எந்த திட்டங்களில் அவர்கள் பயன் அடைந்தனர் என்று நினைத்தனரே தவிர, அவற்றையெல்லாம் அரசின் சாதனைகளாகக் கருதவில்லை.
புதிதாத முதல்வர் பொறுப்பேற்கவுள்ள ஜெயலலிதா, ஊழலை முழுமையாக ஒழிப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும். அதற்காக முந்தைய ஆட்சியில் இருந்தவர்களை கோர்ட்டுக்கு இழுக்க வேண்டும் என்பதில்லை. எத்தனை சிறப்பு நீதிமன்றங்கள் இருந்தாலும் உடனடியாக தண்டனை வாங்கிக் கொடுக்க முடியாது என்பது நாம் அறிந்ததே. ஆகவே, அதில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, இனி தமிழகத்தை எப்படி முதலிடத்தில் கொண்டு வரலாம் என்பதில் கவனம் செலுத்துவதே சிறந்தது.
கடந்த ஆட்சியில், ஓய்வு பெற்ற பின்னரும் உயர் அதிகாரிகள் முக்கிய பொறுப்பில் இருந்தனர். அவர்களை முழுமையாக இந்த அரசு ஒதுக்கிவிட வேண்டும். தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, நேர்மையான, துடிப்பு மிகுந்த இளம் அதிகாரிகளுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்க வேண்டும்.
வெள்ளைக்காரர்கள் வகுத்த நிர்வாக நடைமுறையின்படி, ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரி உதவியில்லாமல், எந்த அரசியல்வாதியும் பணம் எடுக்க முடியாது. இன்றும் இதுதான் நிலை. உயர் அதிகாரிகள் மட்டத்தில் பொறுப்புணர்வும், கடமையைச் செய்ய வேண்டும் என்ற உணர்வும், தவறு செய்தால் தண்டிக்கப்படுவோம் என்ற பயமும் இருந்தால்தான், திட்டங்கள் சரியாக நடக்கும்.
சுயநலம் பார்க்காத, திறமை உள்ள அதிகாரிகள் ஊக்குவிக்கப்படுவர் என்ற நம்பிக்கையும், எதிர்ப்பு வந்தால் அரசால் பாதுகாக்கப்படுவோம் என்ற தைரியமும் இருந்தால், தமிழகத்தை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்ல ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பலர் முன்வருவர் என்பதை புதிய அரசு புரிந்து கொள்ள வேண்டும்.எந்த வேலை என்றாலும், அரசு அதிகாரிகளை பார்த்தால்தான் முடியும் என்ற நிலை தான் ஊழல் அதிகரிக்க காரணம். இந்நிலை மாற வேண்டும். நிர்வாக சீர்த்திருத்தங்களுக்கான பரிந்துரை அமல் செய்ய வேண்டும்.
ஒரு தனி அதிகாரி கையில் அதிகாரங்கள் குவிந்திருக்கக் கூடாது. அனுமதி, அங்கீகாரம் வழங்கும் முறைகள், ஒற்றைச் சாளர முறையில் நடக்க வேண்டும்.நாடு வளர்ச்சி அடைய, அரசு நிர்வாகம் செய்ய வேண்டுமே தவிர, தனியாரிடம் போட்டிப் போட்டுக் கொண்டு அரசு தொழில் செய்யக் கூடாது என்ற எண்ணம் ஆட்சியில் இருப்பவர்களுக்கு இருக்க வேண்டும்.
50 ஆண்டுகளுக்கு முன், தனியார் முதலீடு இல்லாத காலத்தில், அரசே எல்லாவற்றையும் செய்ய வேண்டிய நிலை இருந்தது. இன்று, தனியார்கள் கோடிக்கணக்கில் முதலீடு செய்ய தயாராக இருக்கின்றனர். அனைத்து தொழில்களுக்குமான அடிப்படைத் திட்டங்களுக்கும் தனியார் முதலீடு செய்யலாமே தவிர, இதையும் அரசே நடத்தலாம் என்ற நிலையை முதலில் நிறுத்த வேண்டும். தற்போது இருக்கும் பல அரசுத் துறைகளில் படிப்படியாக தனியாரின் பங்கேற்பை அதிகரிக்க வேண்டும்.
நேர்மையான, அரசின் தலையீடு இல்லாத திட்டங்களை வகுத்துக் கொடுத்தால், அனைத்துத் துறைகளிலும் தனியார்கள் முதலீடு செய்யத் தயாராக இருக்கின்றனர். 20 ஆண்டுக்களுக்கு முன், தொலைத்தொடர்பு, விமானப் போக்குவரத்தின் நிலையை எண்ணிப் பாருங்கள். இன்று, இத்துறைகளின் அபார வளர்ச்சியையும் எண்ணிப் பாருங்கள். இந்த வளர்ச்சிக்கு அரசு எடுத்த தாராளமயமாக்கல் கொள்கைதானே. தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான "டிராய்' போன்றுதான் பல அரசு அமைப்புகள், தொழில்களை கண்காணிக்கும் ஏஜன்சிகளாக செயல்பட வேண்டும். பஸ் நடத்துவது, டூரிஸ்ட் லாட்ஜ் நடத்துவது அரசின் வேலையல்ல.
தி.மு.க., அரசு பெரிய தொழிற்சாலைகளை ஊக்குவித்ததே தவிர, அரசு நிர்வாக சீர்கேட்டை மாற்ற முயற்சி செய்யவில்லை. எதற்கெடுத்தாலும் அரசு அதிகாரிகளை சந்திக்கும் வகையில்தான் தி.மு.க., அரசின் திட்டங்கள் செயல்பட்டன. ஏதாவது ஒரு வகையில், அரசு அதிகாரிகள் வருமானம் பெற்றால், அவர்கள் தி.மு.க., அரசின் மீது விசுவாசமாக இருப்பார்கள் என்று எண்ணினரே தவிர, நிர்வாக சீர்த்திருத்த முயற்சிகளை எடுக்கவில்லை.
தொலைத்தொடர்பு, போக்குவரத்துத் தொழில் போல், மின் உற்பத்தித் திட்டங்களுக்கும் தனியாரை ஈடுபடுத்த அரசு முயற்சிக்க வேண்டும். அனல் மின் நிலையமாக இருந்தாலும் சரி, மரபுசாரா மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி, தனியாரை ஊக்குவிக்கும் தனித் திட்டங்களை புதிய அரசு வகுக்க வேண்டியது அவசியம்.
சில அமைச்சர்கள் அரசியல் ரீதியாக திறமையானவர்களாக இருந்தாலும் - நிர்வாக ரீதியாக அனுபவம் இல்லை.கடந்த 30 ஆண்டுகளில், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வில் பெயர் சொல்லும் அளவுக்கு எந்த அமைச்சரும் இருக்கவில்லை.
தமிழகத்தில் திறமையான அமைச்சர் யார் எனக் கேட்டால் சி.சுப்பிரமணியம், ஆர்.வெங்கட்ராமன் என்று தான் கூறுகின்றனரே தவிர, நெடுஞ்செழியனோ, ஆற்காடு வீராசாமியோ, அன்பழகனோ என்று சொல்வதில்லை.செய்திகள் உதவி தினமலர்.
தமிழகத்தில் திறமையான அமைச்சர் யார் எனக் கேட்டால் சி.சுப்பிரமணியம், ஆர்.வெங்கட்ராமன் என்று தான் கூறுகின்றனரே தவிர, நெடுஞ்செழியனோ, ஆற்காடு வீராசாமியோ, அன்பழகனோ என்று சொல்வதில்லை.செய்திகள் உதவி தினமலர்.
இந்நிலை மாற, தொழிலில் சாதித்தவர்களின் திறமையை இந்த அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எம்.எல்.ஏ., அல்லது எம்.எல்.சி., ஆனால் தான் அமைச்சராக முடியும் என்ற நிலை இருப்பதால், அமைச்சருடன் நிர்வாகத் திறமை உள்ள நிபுணர் குழுவை அமைத்து, திட்டங்கள் வகுக்க வேண்டும். சட்ட ரீதியாக பொறுப்பும், அதிகாரமும் இக்குழுவிற்கு வழங்க வேண்டும். அப்போதுதான் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை கமிட்டியில் அமைக்கும் பாணி முடிவுக்கு வரும். பதவி வகித்த 25 ஆண்டுகளில் சாதிக்காத அதிகாரி - ஓய்வு பெற்ற பின் பெரிதாக சாதிக்கப் போவதில்லை.
நிபுணத்துவம் உள்ளவர்கள் கமிட்டியில் இடம்பெற்றால், நிர்வாகம் சீர்படும். தற்போது, தேசிய அடையாள அட்டைத் திட்டத் தலைவராக இன்போசிஸ் நிறுவனத்தின் துணைத்தலைவர் நந்தன் நிலேகனியை மத்திய அரசு பயன்படுத்திக் கொண்டது.
///1.ஊழலை ஒழித்தல்,
ReplyDelete2.விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துதல்,
3.நிர்வாகச் சீர்கேடுகளை ஒழுங்குபடுத்துதல்,
4.அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல்.
5.அனாவசிய செலவுகளைக் கட்டுப்படுத்துதல்.//// ரொம்ப கடினமாததாச்சே!!!!!
////ஒரு தனி அதிகாரி கையில் அதிகாரங்கள் குவிந்திருக்கக் கூடாது. அனுமதி, அங்கீகாரம் வழங்கும் முறைகள், ஒற்றைச் சாளர முறையில் நடக்க வேண்டும்//// உண்மை தான் அதிகாரம் ஒரு இடத்திலே குவியும் போது சர்வதிகாரம் தோற்றம்பெறும்...
ReplyDeleteநல்ல பதிவு நண்பரே
மாப்ள ரைட்டு!
ReplyDeleteநல்லதொரு சிந்தனையில் விளைந்த நல்ல இடுகை - முதல்வருக்கும் தெரியும் - பொறுத்திருந்து பார்ப்போம்
ReplyDeleteஹேய் அண்ணன் சொல்லிட்டாரு, உடனே எல்லா திட்டத்தையும் நிறைவேத்துங்கப்பா....
ReplyDelete"ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரி உதவியில்லாமல், எந்த அரசியல்வாதியும் பணம் எடுக்க முடியாது. "// முற்றிலும் உண்மை...
ReplyDeletehtp://zenguna.blogspot.com
சுத்தம் உன்னையும் மிரட்ட ஆரம்பிச்சிட்டாயிங்களா...??
ReplyDeleteகந்தசாமி. கூறியது...
ReplyDeleteடினமாததாச்சே!!!!!// appadiyaa?
கந்தசாமி. கூறியது...
ReplyDeleteநல்ல பதிவு நண்பரே // nanri.;
விக்கி உலகம் கூறியது...
ReplyDeleteமாப்ள ரைட்டு!// இதைத்தவிர வேற எதுவும் சொல்ல மாட்டியா:?
மாப்ள ரைட்டு!
ReplyDelete16 மே, 2011 8:52 pm
நீக்கு
பிளாகர் cheena (சீனா) கூறியது...
நல்லதொரு சிந்தனையில் விளைந்த நல்ல இடுகை - முதல்வருக்கும் தெரியும் - பொறுத்திருந்து பார்ப்போம்..// நன்றி..
ஆனந்தி அட்டகாசம்
ReplyDeleteஆனந்தி..கலக்கல்
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ கூறியது...
ReplyDeleteஹேய் அண்ணன் சொல்லிட்டாரு, உடனே எல்லா திட்டத்தையும் நிறைவேத்துங்கப்பா....// ஆமா சொல்லிட்டேனயா ..
குணசேகரன்... கூறியது...
ReplyDelete"ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரி உதவியில்லாமல், எந்த அரசியல்வாதியும் பணம் எடுக்க முடியாது. "// முற்றிலும் உண்மை...// ஆமா..
MANO நாஞ்சில் மனோ கூறியது...
ReplyDeleteசுத்தம் உன்னையும் மிரட்ட ஆரம்பிச்சிட்டாயிங்களா...??// ஒன்னும்பயமில்லை..
ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...
ReplyDeleteஆனந்தி அட்டகாசம்// நன்றி/..
ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...
ReplyDeleteஆனந்தி..கலக்கல்// நன்றி மாப்ள
We need Good IAS like uma shankar
ReplyDeleteஇது மாதிரி அப்ப அப்ப கடிதம் எழுத வேண்டும் ஆனந்தி...
ReplyDeleteபொறுத்திருந்து பார்ப்போம் !
ReplyDelete:)
நல்ல பகிர்வு தோழரே..
ReplyDeleteஇனியாவது திருந்தட்டும் அனைவரும்
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா மைனஸ் ஓட்டு விழுதுருச்சி ஹய்யா கேப்பி கேப்பி கேப்பி, வாத்தி உனக்கு எவனோ செமையா ஆப்பு வச்சிட்டு இருக்கான்யா ஹா ஹா ஹா....
ReplyDeleteஊழலை ஒழித்தலா........விளங்கிரும்.
ReplyDeleteநாட்டு நலனை விரும்புவோரின் உண்மையான ஆதங்கங்களையும் எதிர்பார்ப்புகளையும் வெகு அழகாகவே தொகுத்து எழுதியுள்ளீர்கள்.
ReplyDeleteநல்லதே நினைப்போம். நல்லதே நடக்கும் என்று நம்புவோம்.
நல்லதொரு பதிவுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
//தி.மு.க., அரசு பெரிய தொழிற்சாலைகளை ஊக்குவித்ததே தவிர, அரசு நிர்வாக சீர்கேட்டை மாற்ற முயற்சி செய்யவில்லை. எதற்கெடுத்தாலும் அரசு அதிகாரிகளை சந்திக்கும் வகையில்தான் தி.மு.க., அரசின் திட்டங்கள் செயல்பட்டன. ஏதாவது ஒரு வகையில், அரசு அதிகாரிகள் வருமானம் பெற்றால், அவர்கள் தி.மு.க., அரசின் மீது விசுவாசமாக இருப்பார்கள் என்று எண்ணினரே தவிர, நிர்வாக சீர்த்திருத்த முயற்சிகளை எடுக்கவில்லை.//
ReplyDeleteசட்டம் ஒழுங்கும் நிர்வாக சீர்திருத்தமும் மிக முக்கியமானவையே.எதை கவனிக்கப் போகிறார்கள். எதை விடப்போகிறார் ஒன்றுமே தெரியவில்லை. ரொம்ப ஹார்ட் ஓர்க் பண்ணணும் மேடம்.
//தி.மு.க., அரசு பெரிய தொழிற்சாலைகளை ஊக்குவித்ததே தவிர, அரசு நிர்வாக சீர்கேட்டை மாற்ற முயற்சி செய்யவில்லை. எதற்கெடுத்தாலும் அரசு அதிகாரிகளை சந்திக்கும் வகையில்தான் தி.மு.க., அரசின் திட்டங்கள் செயல்பட்டன. ஏதாவது ஒரு வகையில், அரசு அதிகாரிகள் வருமானம் பெற்றால், அவர்கள் தி.மு.க., அரசின் மீது விசுவாசமாக இருப்பார்கள் என்று எண்ணினரே தவிர, நிர்வாக சீர்த்திருத்த முயற்சிகளை எடுக்கவில்லை.//
ReplyDeleteசட்டம் ஒழுங்கும் , நிர்வாக சீர்திருத்தமும் மிக முக்கியமானதே. எதை முதலில் முன்னுரிமை கொடுத்து சரிசெய்வார்னு தெரியல.
ஆக்கபூர்வமான கருத்துக்கள்ன்னு நான் பின்னூட்டம் போட்டால் இதுவரைக்கும் தி.மு.க வை அடிச்சு துவைச்சுப் போட்டதால நான் அ.தி.மு.க சார்பாளன் என்ற பிம்பம் ஏற்படுகிறது.
ReplyDeleteஇருந்தாலும் நல்லவைகள் எங்கேயிருந்தாலும் பாராட்டு சொல்வதே நடுநிலையாளனுக்கு அழகு.வாழ்த்துக்கள்.
ஜெயலலிதாவை வெற்றி பெறச் செய்த மக்கள் அனைவரினதும் உள்ளத்து உணர்வுகளை, இக் கடிதம் வெளிப்படுத்தும் வண்ணம் எழுதப்பட்டிருக்கிறது. சிறிது காலம் பொறுத்திருந்து தான் அம்மாவின் பணிகள் எவ்வாறு அமைகின்றன என்பதனைப் பார்க்க வேண்டும்.
ReplyDeleteசிறப்பான சிந்தனைகள். இதெற்கெல்லாம் சிந்தனயும், உழைப்பும், மன ஒருமைப்பாடு வேண்டும்.
ReplyDeleteஉங்கள் தாழ்மையான வேண்டுகோள் ஜெவிடம் எடுபடுமா?
இதெல்லாம் வேண்டும் , செய்யவும் என்று கேட்கவும்.
வேண்டுகோள் , பிச்சை எல்லாம் எப்போதும் எங்கும் தூக்கி எறியப்படும்.
ஆனந்தி..அடிக்கடி வாம்மா..
ReplyDeleteநல்ல பகிர்வு.
ReplyDeleteதமிழ்நாட்டை முதல் மாநிலமாக மாற்ற ஒரு நல்ல லிஸ்ட் கொடுத்திருக் கிறீர்கள்! பாதியாவது நடக்கும் என
ReplyDeleteநம்புவோம்!
நீங்கள் கூறிய முதல் ஐந்து விஷயங்களை எதிர்பார்த்துத்தான் மக்கள் ஓட்டு போட்டிருக்கிறார்கள்.
ReplyDeleteஅருமையான பகிர்வு
ReplyDeleteபொறுத்திருந்து பார்ப்போம் !
அருமையான பகிர்வு
ReplyDeleteபொறுத்திருந்து பார்ப்போம் !
வெரி குட் அலசல் மாப்ளே
ReplyDeleteசிறபான பதிவு
ReplyDelete=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+
சார்லி சாப்ளின் “The Kid”
http://speedsays.blogspot.com/2011/05/charlie-chaplin-kid.html
நன்றி பதிவை பகிர்ந்தமைக்கு.. ஏதாவது நல்லது நடந்தால் சரி தமிழ்நாட்டுக்கு..
ReplyDeletehttp://karadipommai.blogspot.com/
Very well written!!!
ReplyDeleteஇந்த பகுதியில் ஒன்று நான் கூறியே ஆகவேண்டும் ::
ReplyDelete1 . ஒரு ருபாய் அரிசி - வறுமை நிலைக்கு கீழே உள்ளவர்களுக்கு வழங்கப்பட்ட(அது நடக்குறது இல்ல) ஒரு ருபாய் அரிசியும் மற்றவர்களுக்கு கொடுக்கப் படும் அரிசியும் ஒன்றல்ல. (தேர்தலுக்கு மூன்று மாதத்துக்கு முன்பு வரை) தரம் குறைந்த அரிசியை ஒரு ருபாய் அரிசியாகவும் மற்றவர்களுக்கு தரம் கூடிய அரிசியும் தனித்தனி மூட்டைகளாக வந்து விநியோகம் செய்யப்பட்டது.
2 . மருத்துவ காப்பீட்டு திட்டம் - ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டால், அதே குடும்பத்தில் மற்றவர் உயிருக்கே போராடினாலும் அவருக்கு காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை அளிக்கப்பட மாட்டாது.
3 . ஒரு லட்சத்தில் முடிந்தால் வீடு கட்டிக்கோ திட்டம் - பஞ்சாயத்துக்கு உங்களுடைய வீடு கட்டக்கூடிய பணம் வந்ததும் அங்கே கையெழுத்து இட்டு 20% பணத்தை வாங்கி அடித்தளம் இடவேண்டும். பின்பு அடித்தளம் அமைத்து விட்டேன் என்று பஞ்சாயத்தில் போய் சொன்னால், மேலும் 30% பணம் தருவார்கள். அதில் கொஞ்சம் சுவர்களை எழுப்பி விட்டுவிட்டு திரும்ப போய் சொல்லி 30% பணத்தை வாங்கி மீத சுவர்களை எழுப்பி கதவுகள் அமைக்கலாம். பின்பு அதை கட்டிவிட்டேன் என்று சொன்னால் மீதமுள்ள 20% தருவார்கள். அதில் கூரை அமைக்கலாம். ஆகா, வீடு கட்டி முடிக்கவும் கட்டியவனுக்கு மூணு லட்ச ருபாய் கடன்.
இந்த திட்டங்களை பற்றி நானே நேரடியான அனுபவங்களின் மூலமாகவும், நண்பர்களின் அனுபவங்களின் மூலமும் இவைகளை நான் அறிந்து கொண்டேன்.
ஆனால் இவை எல்லாம் ஏன் அந்த திட்டத்தின் குறைகளாக வெளியே வரவில்லை. காரணம் தெரிந்தவர்கள் சொல்லவும் ????
WHO IS THE ANNATHI? SHE IS DMK OPPOSITER AND ADMK SUPPORTER " OK
ReplyDelete