நான் மூன்று மாதங்களுக்கு முன் அறுபத்தி நான்கு கிலோ எடை இருந்தேன் . இந்த மாதம் எடையை சரிபார்க்கும் போது ஐந்து கிலோ கூடியிருந்தேன். இந்த எடையை எப்படி குறைப்பது என்று இணையத்தில் தேடும்போது வெப் துனியாவில் ஒரு கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
இதோ, உங்களுக்காக எடையை குறைக்கும் 7 எளிய வழிகள்:
1. உடற்பயிற்சி:
வாரம் 5 முறையாவது தவறாமல் செய்ய வேண்டும். உடற்பயிற்சியால் கொழுப்பு கறைகிறது. இதனால் எடை குறைவதோடு, பல நோய்களிலிருந்தும் பாதுகாப்பு கிடைக்கிறது.
2. பசித்தால் மட்டுமே சாப்பிடவும்:
"அப்படித்தான் செய்கிறேன்" என்று கூறுவதற்கு, முன் யோசிக்கவும். எத்தனை முறை வயிறு நிறைய சாப்பிட்ட பிறகு ஐஸ்கிரீம், இனிப்பு என்று சாப்பிட்டிருப்பீர்கள்? எடையை மேலும் கூட்டவே இது உதவுகிறது!
3. எதைச் சாப்பிடலாம் என்று தெரிந்து கொள்ளவும்:
"நான் 4 பிஸ்கெட்டும் ஒரு கிளாஸ் ஜூஸ் மட்டும் குடிச்சேன்" என்று நீங்கள் சொல்லலாம். நீங்கள் சாப்பிட்ட பிஸ்கெட்டுகளிலும் ஜூஸிலும் எத்தனைக் கலோரிகள் இருந்தன என்று தெரியுமா? எதைச் சாப்பிட்டால் நல்லது என்பதை அறிந்துக் கொள்வது மிகவும் முக்கியம்.
4. தண்ணீர் தண்ணீர்:
ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 8 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிப்பதால் சாப்பிடும் அளவும் குறையும். அத்தோடு உடலில் உள்ள நச்சுப் பொருட்களையும் இது சுத்தம் செய்கிறது.
5. உட்கொள்ளும் அளவு:
மதியம் அதிகமாக சாப்பிட்டுவிட்டால், இரவில் உட்கொள்ளும் அளவை குறைக்கவும். காலையில் சாப்பிட்டதைவிட, மதியம் சற்று குறைவாகவும், இரவில் அதைவிட குறைவாகவும் சாப்பிடுவது நல்லது.
6. ரிலாக்ஸ் ப்ளீஸ்:
தினமும் நாம் சந்திக்கும் பிரச்சனைகள், சில சமயங்களில் நம்மை அளவுக்கு அதிகமாக சாப்பிடத் தூண்டலாம். அதனால் தினமும் 15 நிமிடங்கள் ரிலாக்ஸ் செய்ய எடுத்துக் கொள்ளவும்.
7. "நான் குண்டு" என்று யோசிப்பதை தவிர்க்கவும்:
நீங்கள் இப்போது எப்படி இருக்கிறீர்கள் என்பதைப் பற்றிய நினைப்பை விட்டு, மேற்கண்ட வழிகளைப் பின்பற்றினால் எப்படி மாறுவீர்கள் என்பதை யோசிக்கவும்.

இன்னும் என்ன தாமதம்? உங்கள் எடைக் குறைப்பை இப்போதே ஆரம்பியுங்கள்!
ஏழாவது பாய்ண்ட் மட்டும் கடைப்பிடிச்சால் எடை குறையுமா? :-)
ReplyDeleteஇதே மாதிரி பிரகாஷ் ஒன்னு போட்டிருந்தாரே..
ReplyDeleteதுளசி கோபால் கூறியது...
ReplyDeleteஏழாவது பாய்ண்ட் மட்டும் கடைப்பிடிச்சால் எடை குறையுமா? :-)//// இப்படியெல்லாமா டவுட்டு கேப்பீங்க?
செங்கோவி கூறியது...
ReplyDeleteஇதே மாதிரி பிரகாஷ் ஒன்னு போட்டிருந்தாரே.. /// அவர் மட்டும் இல்லை இதே டாபிக்ல பல பேர் போட்டிருக்காங்க....
How to increase weight
ReplyDeleteஅனைவர்க்கும் தேவையான பதிவு அறிய தந்தமைக்கு மிக்க நன்றி கரூன்.
ReplyDeleteநல்ல டிப்ஸ்...
ReplyDelete>>செங்கோவி சொன்னது…
ReplyDeleteஇதே மாதிரி பிரகாஷ் ஒன்னு போட்டிருந்தாரே..
அண்ணன் எங்கே போனாலும் வமபை வளர்ப்பீங்க போல..
எனக்கு ஒரு சந்தேகம் ..
ReplyDeleteநீங்க குண்டா ....?????
பதிவு நல்ல தகவல் நிறைந்தது ,,
உடம்பையும் சற்று கவனிக்க வேண்டும் ...
தேவையான பதிவு பாஸ் வாழ்த்துக்கள் நன்றி
ReplyDeleteஏழு வழி,நல்ல வழி!
ReplyDeleteபயனுள்ள தகவல்கள்....நன்றி நண்பரே...
ReplyDeleteஅட போங்க பாஸ் நாங்கலாம் எடை கூடவே இல்லைனு நினைக்கிறோம். முதல்ல அதுக்கு ஒரு வழி சொல்லுங்க. ஏத்திட்டு அப்புறமா இறக்கிகலாம்.
ReplyDeleteஉடம்பு ஆரோக்யமா இருந்தா மனசும் சந்தோசமா இருக்கும், மனசு சந்தோசமா இருந்தா வாழ்க்கை சிறப்பா இருக்கும்..
ReplyDeleteஆரோக்யத்துக்கு வழிகாட்டி இருக்கீங்க கருன், நன்றி! :)
http://karadipommai.blogspot.com/
பயனுள்ள பகிர்வு.
ReplyDeleteநல்ல பகிர்வு கருன்.
ReplyDeleteஏன் திம்பானே நடப்பானே
ReplyDelete------------------------
பாதுகாப்பா இருக்கறது எப்படி?
http://speedsays.blogspot.com/2011/05/blog-post_04.html
குறிப்பாக எனக்கு தேவையான பதிவு. நன்றி நண்பரே
ReplyDeleteரைட்டு!
ReplyDeleteஅடுத்து எடையை கூட்ட 7 வழிகள்?
ReplyDeleteமாதுளம்பழம் சாப்பிட்டா கொழுப்பை கரைச்சிருமாம்
ReplyDeleteuseful post
ReplyDelete//இதே மாதிரி பிரகாஷ் ஒன்னு போட்டிருந்தாரே.. /// அவர் மட்டும் இல்லை இதே டாபிக்ல பல பேர் போட்டிருக்காங்க....///
ReplyDeleteஎத்தனை பேர் பகிர்ந்தாலும் இத்தனை ஓட்டு யாரால் வாங்க முடியும்? என் வாக்கையும் சேர்த்து..
ஆஹா... 70 சதவீதமான பதிவர்களுக்கு தேவையான மாட்டர் இது :)
ReplyDeleteOk...I ll try to follow...He He...I am just 81 Kgs..
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteகருண்
ஆனா நான் எடையை கூட்டனும்
பயனுள்ள பதிவு தந்திருக்கிறீர்கள் . பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே நானும் இந்த ஏழு வழிமுறைகளையும் கடைபிடிக்க முயற்ச்சிக்கிறேன் . ஏழாவது எண்ணம் சார்ந்தது அதை முதலில் மாற்ற வேண்டும் அழகாய் சொன்ன விதம் சிறப்பு .
ReplyDelete