ஸ்பெக்ட்ரம் வழக்கில் சம்மந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி பெற்றது தொடர்பாக அந்த டி.வி.யின் பங்குதாரரும், தி.மு.க. தலைவர் கலைஞரின் மகளுமான கனிமொழி எம்.பி. மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. அவரது ஜாமீன் மனு மீதான தீர்ப்பு நேற்று டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் அறிவிக்கப்பட்டது. அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று மாலை 5.45 மணி அளவில் கருணாநிதி தனது கருத்தை தெரிவிக்க இருப்பதாகவும், ஒரு சில பத்திரிகையாளர்கள் மட்டும் உள்ளே வரும்படியும் அழைப்பு வந்தது.
ஆனால் அனைத்து தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளின் வீடியோகிராபர்கள், போட்டோகிராபர்கள், நிருபர்கள் என அனைவரும் உள்ளே நுழைந்ததால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சில நிமிட நேர கூச்சலுக்கு பின்னர் கலைஞர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியின் ஜாமீன் மனு டெல்லி நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதே? அதுபற்றி உங்கள் கருத்து என்ன?
அது நீதிமன்ற விவகாரம். நான் ஒன்றும் அதில் கருத்து சொல்ல விரும்பவில்லை.
காங்கிரசுடன் உங்கள் உறவு தற்போது எப்படியிருக்கிறது?
எல்லோருடனும் நல்ல உறவு இருக்கிறது.
இந்த தீர்ப்பின் காரணமாக காங்கிரசுடன் உங்களுக்குள்ள உறவு பாதிக்குமா? என்ன முடிவு எடுக்கப்போகிறீர்கள், இதற்காக கட்சிக் கூட்டம் நடைபெறுமா?
தி.மு.க. என்பது ஒரு ஜனநாயக இயக்கம். நான் மாத்திரம் எந்த முடிவும் எடுக்க முடியாது. எங்கள் கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூடித்தான் எந்த முடிவையும் எடுக்க வேண்டும். நானாக ஒரு முடிவு எடுக்க முடியாது.
செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தை எப்போது கூட்டப்போகிறீர்கள்?
தேவைப்படும்போது கூட்டுவோம்.
இந்த தீர்ப்பு குறித்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போகிறீர்களா?
சட்டவல்லுநர்களை கலந்தாலோசித்து முடிவெடுப்பேன். என்ன முடிவு என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.
உடனடியாக டெல்லி போகிறீர்களா?
இப்போது நான் போகவில்லை.
தேர்தலிலே உங்களுக்கு கிடைத்த முடிவு பற்றி என்ன கருதுகிறீர்கள்?
அதைப்பற்றி நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன். மக்கள் நல்ல ஓய்வு கொடுத்திருக்கிறார்கள். இப்போது நீங்களும் ஓய்வு கொடுத்தால் நல்லது.
உங்கள் மகள் கனிமொழியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறதே, அதன் காரணமாக உங்கள் மனநிலை எப்படி பாதிக்கப்பட்டிருக்கிறது?
உங்களுக்கு ஒரு மகள் இருந்து, அவர் செய்யாத குற்றத்திற்காக, இதுபோன்ற ஒரு தண்டனை கிடைத்தால், உங்கள் மனம் அப்போது என்ன பாடுபடுமோ அந்த மனநிலையில் என் மனம் இருக்கிறது.
கலைஞரின் வார்த்தைகள் எங்கும் சோகமும், விரக்தியும் நிறைந்து காணப்படுகிறது! புத்திரசோகம் கொடுமையானது என்று சொல்வார்கள்! என்ன செய்ய சட்டம் தன் கடமையை செய்கிறது! எமக்கும் வருத்தமாகத்தான் உள்ளது!!
ReplyDeleteஒரு மனுஷன் எத்தன நாளா காத்து இருக்கரதுய்யா...........கடல்ல நீங்களா எப்பதான் தூக்கி போடப்போறீங்க.......!
ReplyDelete//உங்களுக்கு ஒரு மகள் இருந்து, அவர் செய்யாத குற்றத்திற்காக,//
ReplyDeleteகோவணத்தையே உருவுனாலும் இந்தாளுக்கு வெக்கமே கிடையாதா ?
இன்னமும் தாத்தா திருந்தவில்லையே...
ReplyDeleteபரபரப்பா பேட்டி கொடுத்தாலும் பரப்பாம பேட்டி கொடுத்தாலும் ஒன்னும் நடக்காது. காங்கிரசை விட்டு இவர்களால் வெளியே வரவே முடியாது நண்பா. கூட்டணியில் இருக்கும் போதே இந்த நிலை இன்னும் வெளியில் வந்துவிட்டால் என்ன ஆகும் என்று கலைஞர் யோசிக்க மாட்டாரா.
ReplyDeleteஇவரு எவ்வளவு அடிச்சாலும் தாங்குராரு ரொம்ப நல்லவரா இருப்பாரு போலிருக்கு.
ReplyDeleteபாவம்யா கலைஞர் அவர கொஞ்சம் ஓய்வெடுக்க விடுங்கப்பா.
ReplyDeleteஉங்களுக்கு ஒரு மகள் இருந்து, அவர் செய்யாத குற்றத்திற்காக, இதுபோன்ற ஒரு தண்டனை கிடைத்தால், உங்கள் மனம் அப்போது என்ன பாடுபடுமோ அந்த மனநிலையில் என் மனம் இருக்கிறது.>>>>>>>
ReplyDeleteஹா..ஹா.. எப்புடி எஸ்கேப்பு ஆகராங்கப்பா!
செம்மொழியான தமிழ்மொழியாம்
ReplyDeleteகம்பிக்கு பின்னாடி கனிமொழியாம்
=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+
ஒரு காந்தியவாதியின் வேண்டுகோள்
http://speedsays.blogspot.com/2011/05/gandhi-request.html
இந்த எலவைஎல்லாம் கனிமொழியை அரசியலில் திநிக்கும்போதே யோசித்திருக்கணும்
ReplyDeleteபேசாம, பிரதமருக்கு தந்தி அனுப்பினால் என்ன?
ReplyDelete///அதைப்பற்றி நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன். மக்கள் நல்ல ஓய்வு கொடுத்திருக்கிறார்கள். இப்போது நீங்களும் ஓய்வு கொடுத்தால் நல்லது.
ReplyDelete/// கலைஞர் ஐயா அது நல்ல ஓய்வு இல்ல "நிரந்தர ஓய்வு".......))
இவங்கள திருத்தமுடியாது
ReplyDelete. மக்கள் நல்ல ஓய்வு கொடுத்திருக்கிறார்கள். இப்போது நீங்களும் ஓய்வு கொடுத்தால் நல்லது.
ReplyDeleteமாப்ளே.. விடய்யா பாவம்.. செத்த பாம்பை இன்னும் எத்தனை பேர்தான் அடிப்பீங்க?
ReplyDeleteவருமுன் யோசித்திருக்கவேண்டியவை, வந்தபின் யோசித்து என்ன பயன்??
ReplyDeleteசெய்யாத குற்றமா..தலிவரு இன்னும் கெத்தை மெயிண்டய்ன் பண்றாரே?
ReplyDeleteசெம்மொழி மாநாடு கண்ட தமிழ் தலைவன் இன்று மானம் இழந்து கோமணம் கூட இல்லாமல் நிற்கிறான்....!!! மடிந்த ஈழ தாய், சகோதரிகளின் ஆவிகளின் சிரிப்பொலி என் காதில் கேட்கிறது, மீனவனின் ஆவியும் சந்தோசத்தில்....
ReplyDeleteவினை விதைத்தவன் வினை அறுப்பான்.
ReplyDeletehttp://zenguna.blogspot.com
"அங்க ஒரு பதினோரு பேரு... அவிங்களால எவ்ளோ முடியுமோ அவ்ளோ அடிச்சாங்க... அடிச்சிக்கிட்டிருக்கும் போதே ஒருத்தன் சொன்னான் 'மணி'ல பாதிய நீ வச்சிக்கோ... கனி'ய வேணும்னா நான் வச்சிருக்கேன்'னு ... பட் அந்த டீல் எனக்கு பிடிச்சிருக்கு...."# கலைஞர்.
ReplyDeleteகடைசி பதிலை கேட்டால் கல்லும் கரைந்து விடும். ஆனால் நான் கல்லல்ல. வாயில நல்லா வருது....
ReplyDeleteசபாஷ் கலைஞர்..
ReplyDeleteஇந்த வயதிலும் எப்படி இப்படி?
'செய்யாத குற்றத்திற்காக' என்று சிக்காமல் பேச முடிகிறது உங்களால்?
அது நீதிமன்ற விவகாரம். நான் ஒன்றும் அதில் கருத்து சொல்ல விரும்பவில்லை.//
ReplyDeleteகலைஞர்களின் பதில்கள் ஒவ்வொன்றும் சமாளிப்பாக இருக்கிறதே சகோ.
லேட்டஸ், செய்தியைப் படிக்க லேட்டா வந்திட்டேனே சகோ.
ReplyDelete//மக்கள் நல்ல ஓய்வு கொடுத்திருக்கிறார்கள்.
ReplyDeleteஇப்போது நீங்களும்
ஓய்வு கொடுத்தால் நல்லது.
உங்களுக்கு ஒரு மகள் இருந்து, அவர் செய்யாத குற்றத்திற்காக, இதுபோன்ற ஒரு தண்டனை கிடைத்தால், உங்கள் மனம் அப்போது என்ன பாடுபடுமோ அந்த மனநிலையில் என் மனம் இருக்கிறது.//
ஒரு மிகச்சிறந்த [சமாளிப்பு] பேச்சாற்றல் கொண்டவர் என்பதை மறுக்கவே முடியாது.
uyirodu erithu kollappatta dinakaran vooliyargal 3 perin kudumbam enna mana nilaiyil irunthirukkum?.thudikka thudikka vetti saaikkappata tha.kirutinan in kudumbam enna mana nilaiyil irukkum?kalaignar itharkum bathil solvaara
ReplyDelete