உன்மீது உண்டானது
காதல்தான் என்று
எனக்கு
முதலில் உணர்த்தியது
மழை...!
உன்னுள் கரையும் போது
என்னுள் மழையில் நனையும் சிலிர்ப்பு...!
கரு மேகங்கள் சூழ
ஒரு நாள் மழை தோடு முன்
என் விரல்களை நீ பற்றினாய் ...!
நம் முதல் ஸ்பரிசத்தை
மேலும் மகிழ்த்தியது
மழையின் பகிர்வு...!
நெற்றியில் விழும்
ஒற்றை முடி விலக்கி
மெல்ல இதழ் பதித்தாய்
அதுவும்
ஒரு மழைநாள் மாலைப் பொழுதில் ...!
பின்னொரு நாள்
கனத்த இதயத்தையும்
கண்ணீரையும் சேர்த்து
என் காதலுக்கு கல்லறை
எழுப்பினாய்
அன்றும் மழை பெய்தது...!
அந்த மழை
என் கண்ணீர் விலக்கவா
தன் சோகம் கரைக்கவா
என்று தெரியவில்லை ...!
உண்மையில்
உன் பிரிவை விடவும்
என்னை வருத்துவது
நீ தந்த
மழைக்கும் எனக்குமான உறவு...!
கவிதை மழை என்னை நனைத்ததே...
ReplyDeleteபின்னொரு நாள்
ReplyDeleteகனத்த இதயத்தையும்
கண்ணீரையும் சேர்த்து
என் காதலுக்கு கல்லறை
எழுப்பினாய்
அன்றும் மழை பெய்தது...!>>>
ஏன் திடீரென சோகம்? நல்லாதானே போயிட்டு இருந்துச்சு.
Best rain poem of the year
ReplyDeleteஏன்யா வெயில் காலத்துல இப்படி
ReplyDeleteகடுபேத்தறார் மைலாட்
suuuuuuuuuuuuuupppppppeeeeeerrrrrrr...
ReplyDeleteஅனுபவம் வலி நிறைந்ததாய் உள்ளதே சகோதரா ...
ReplyDeleteஅருமையான மழைக்கவிதை!
ReplyDeleteசில்லுன்னு இருக்கு!!
ReplyDeleteஅவள் பிரிவு தந்ததும் ஒரு மழைதானே--கண்ணீர் மழை!
ReplyDeleteபடமும் பதிவும் அருமை.
ReplyDelete"உன் பிரிவை விடவும்
என்னை வருத்துவது
நீ தந்த மழைக்கும் எனக்குமான உறவு"
அருமையான வரிகள்
தொடர வாழ்த்துக்கள்
(மழை தொடுமுன் என இருக்க வேண்டும் என
நினைக்கிறேன் அதை மட்டும் சீர்செய்யவும்)
மழையாய் பொழிந்த கவிதைக்குப் பாராட்டுகள்.
ReplyDeleteகடும் வெய்யில் நேரத்தில் காதல் மழையில் நனைய வைத்துள்ளீர்கள்.
ReplyDeleteநன்றாகவே உள்ளது. பாராட்டுக்கள்.
மிக அருமை
ReplyDeleteஅந்த மழை
ReplyDeleteஎன் கண்ணீர் விலக்கவா
தன் சோகம் கரைக்கவா
என்று தெரியவில்லை ...!
கண்ணீரும் சோகமும்
ஊருக்குத் தெரியக்கூடாது என்பதற்காகத்தான் இந்த மழையோ..
நல்ல கவிதை.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
7th vote mine
ReplyDeletesuper nanpa
ReplyDeleteமனம் தொலைக்கும் கவிதைகள் மழை கவிதைகள்
ReplyDeleteமழை அழகு.உங்கள் கவிதைகள் அழகோ அழகு... :)
http://karadipommai.blogspot.com/
உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 45/100 மார்க். நன்றி!
ReplyDeleteஅன்பின் கருண்
ReplyDeleteகவிதை அருமை - மழையில் நனைந்தது போலவே இருக்கிறது. காதல், மழையில் இனிக்குமே - தோவி அடைந்த நாளும் மழையா - ம்ம்ம்ம் நன்று நன்று - மிக மிக இரசித்தேன் - நல்வாழ்த்துகள் கருண் - நட்புடன் சீனா
பதிவின் வடிவமைப்பிற்குய் ஷர்புதீன் கஞ்சத்தனமாக 45 மதிப்பெண் தான் அளித்துள்ளார் - நானாக இருப்பின் 95 அளித்திருப்பேன் - நல்வாழ்த்துகள் கருண் - நட்புடன் சீனா
ReplyDeleteசீனா சார், வடிவமைப்பின் மதிப்பெண் எனது மனநிலையை பொறுத்த விசயம் என்பதால் அங்கே 45 மதிப்பெண் கொடுத்திருந்தேன், அதிகபட்சம் கதிர் / ஆதி தாமிர போன்றவர்களின் வலைப்பூ 55 வரை மதிப்பெண் எனது பார்வையில் பெற்றது , இது எனது ரசனைக்குரிய மதிப்பெண்ணே அன்றி இறுதி தீர்ப்பு அல்ல .,ஹி ஹி ஹி ஹி
ReplyDelete:-)
ReplyDeleteமிகவும் ரசிக்கத்தக்க கவிதை. வாழ்த்துக்கள்.
ReplyDeleteகரு மேகங்கள் சூழ
ReplyDeleteஒரு நாள் மழை " தோடு " முன்
என் விரல்களை நீ பற்றினாய் ...!
தோடு என்று தானே வர வேண்டும் தோழா !!!
அருமையான ஒரு கவிதை நண்பா
ReplyDeleteகரு மேகங்கள் சூழ
ReplyDeleteஒரு நாள் மழை தோடு முன்
என் விரல்களை நீ பற்றினாய் ...!
தொடு என்று தானே வர வேண்டும் தோழா !
மழை தரும் ஞாபகங்கள் சந்தோஷமாகவும் துக்கமாகவும்.சிலநேரம் அதன் அமைதியும் சாரலும் சுகம் !
ReplyDeleteகவித... கவித...
ReplyDeleteஅட்டகாசமான தூறல் மழை.... மனைதை இதமாக்கியது....
ReplyDeleteபின்னொரு நாள்
ReplyDeleteகனத்த இதயத்தையும்
கண்ணீரையும் சேர்த்து
என் காதலுக்கு கல்லறை
எழுப்பினாய்
அன்றும் மழை பெய்தது...!//
பாஸ்..........கவிதையால் இதயங்களில் சோகத்தை வர வைத்துவிட்டீர்கள்.
மழை மழை கவிதை மழை. கொஞ்சநேரம் மழையில் நனைந்த மாதிரி ரொம்ப இதமாய் இருந்தது. நன்றி தோழரே. கோடையில் மழையில் நனையவைத்ததற்கு
ReplyDeletearumaiyaana varikal...............
ReplyDeletesupper..........................
very very nice......................
ReplyDelete