Tamilus

The best Tamil Aggregator | Tamilus

5/17/2011

கோடைக்கு சுற்றுலா போகலாம் வாங்க ...


ருவிகளுக்குப் பெயர் போன குற்றாலத்திற்கு வெளியேயும் பல சிறந்த அருவிகள் உள்ளன. அவற்றில் ஒன்று திருநெல்வேலி அருகில் பாபநாசம் அணைக்குச் செல்லும் வழியில் உள்ள அகத்தியர் அருவி.

மலைகள் சூழ்ந்திருக்க ஒரு அருமையான இயற்கைச் சூழலில் அமைந்துள்ள இந்த அருவி சிறியதாக இருந்தாலும், குற்றாலத்தைப் போல இந்த அருவியில் விழும் தண்ணிரும் உடல் நலத்திற்கு வலிமை சேர்ப்பதாகும்.

இதனை குடும்ப அருவி என்று கூட அழைக்கலாம். அருவியில் இருந்து கொட்டும் தண்ணீர் இதமாக விழுவதால், சிறுவர்களைக் கூட அழைத்துச் சென்று ஆனந்தமாகக் குளிக்கலாம்.




இந்த அருவியின் ஒரு பகுதி நீர் வந்து நிரம்பும் குளம் ஒன்று அருகில் உள்ளது. இதில் மிகவும் வளர்ந்த மீன்கள் நீந்தி விளையாடுவதை பார்த்துக் கொண்டேயிருக்கலாம்.

மாலையில் சென்று பொழுதைக் கழிக்க ஏற்ற இடமிது. அருவியில் சுகமாக நீராட விரும்புவோர் அதிகாலை நேரத்தில் இங்கு சென்று நீராடலாம்.
அகத்தியர் அருவி இருக்குமிடமும் களக்காடு - முண்டன்துறை புலிகள் சரணாலயத்தின் ஒரு பகுதி என்பதால் இருட்டுவதற்கு முன்னர் அங்கிருந்து புறப்பட்டு வந்துவிடுவது பாதுகாப்பானதாகும்.

இந்த அருமையான இடத்தை, ஒரு நடை குடும்பத்தோடு போய் பாத்துவிட்டுதான் வாருங்களேன்..

49 comments:

  1. தமிழ்மணம் மொத ஓட்டு நாந்தாம்ல வாத்தி

    ReplyDelete
  2. குற்றாலம் வேனாம்ல, கொடைக்கானலுக்கு செங்கோவி வரும் வாரம் பிளான் போட்டிருக்காரு. அவரோட சேர்ந்து போகலாமா?

    ReplyDelete
  3. கருன் எங்க ஊருக்கு பக்கத்தில் உள்ள அருவி பற்றி சொல்லி இருக்கீங்க. அதான் முதல் ஆளா வந்துட்டேன்.
    முன்னேல்லாம் அடிக்கடி போவோம்
    பாம்பே வந்தபிறகு எல்லாமே மலரும்
    நினைவுகளா ஆயிடுத்து.இதுபோல மணிமுத்தாறு அருவியும் சூப்பரா
    இருக்கும்.

    ReplyDelete
  4. அட இன்ட்லியும் நாந்தாம்ல. ஹி..ஹி...

    ReplyDelete
  5. கோடை காலத்திற்கு ஏற்ற பதிவு..

    ReplyDelete
  6. அட அகத்தியர் அருவியா? அங்க ஏதோ ஸ்பெஷல் இருக்கு போல... சரிய்யா வா.. போயிட்டு வருவோம்.

    ReplyDelete
  7. அண்ணே நீங்க பெரிய ஆளுண்ணே எப்படின்னே இப்படி என்னால முடியல!

    ReplyDelete
  8. வாசிக்கும் போதே அருவியில் குளித்த உணர்வு.

    ReplyDelete
  9. @விக்கி உலகம்
    அண்ணே...ஆளவே பாக்க முடியல... ரொம்ப பிசியோ?

    ReplyDelete
  10. காலத்திற்கு ஏற்ற பதிவு..
    சந்தர்ப்பம் கிடைத்தால் வருகிறேன்

    ReplyDelete
  11. இலவு தவிற மற்ற் அணைத்திலும் ஓட்டு போட்டுட்ட்டேன்

    என்ன ஃபிரியா கூட்டிட்டி போகனும்


    =+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+
    சார்லி சாப்ளின் “The Kid”

    http://speedsays.blogspot.com/2011/05/charlie-chaplin-kid.html

    ReplyDelete
  12. நானும் அகத்தியர் அருவிக்கு சென்று இருக்கிறேன்....அருமையான அருவி..பகிர்வுக்குநன்றி...

    ReplyDelete
  13. தமிழ்வாசி - Prakash கூறியது...

    தமிழ்மணம் மொத ஓட்டு நாந்தாம்ல வாத்தி/// வாங்க..

    ReplyDelete
  14. தமிழ்வாசி - Prakash கூறியது...

    குற்றாலம் வேனாம்ல, கொடைக்கானலுக்கு செங்கோவி வரும் வாரம் பிளான் போட்டிருக்காரு. அவரோட சேர்ந்து போகலாமா?// பதிவ ஒழுங்கா படிலே...

    ReplyDelete
  15. Lakshmi கூறியது...

    கருன் எங்க ஊருக்கு பக்கத்தில் உள்ள அருவி பற்றி சொல்லி இருக்கீங்க. அதான் முதல் ஆளா வந்துட்டேன்.
    முன்னேல்லாம் அடிக்கடி போவோம்
    பாம்பே வந்தபிறகு எல்லாமே மலரும்
    நினைவுகளா ஆயிடுத்து.இதுபோல மணிமுத்தாறு அருவியும் சூப்பரா
    இருக்கும்.// நீங்க நெல்லையா?

    ReplyDelete
  16. தமிழ்வாசி - Prakash கூறியது...

    அட இன்ட்லியும் நாந்தாம்ல. ஹி..ஹி.../ appadiyaa?

    ReplyDelete
  17. # கவிதை வீதி # சௌந்தர் கூறியது...

    கோடை காலத்திற்கு ஏற்ற பதிவு..//நன்றி..

    ReplyDelete
  18. விக்கி உலகம் கூறியது...

    அண்ணே நீங்க பெரிய ஆளுண்ணே எப்படின்னே இப்படி என்னால முடியல!// இதுல எனி உள்குத்து..

    ReplyDelete
  19. தமிழ் உதயம் கூறியது...

    வாசிக்கும் போதே அருவியில் குளித்த உணர்வு.// நன்றி..

    ReplyDelete
  20. படிக்கும்போதே சில்லுன்னு ஆயிருச்சி

    ReplyDelete
  21. குளு குளு சிலு சிலூ!!

    ReplyDelete
  22. சமீபத்தில்தான் ஒருவர் குற்றாலம் போய் வந்ததாக எழுதினார்;நீங்க அகத்தியர் அருவி பற்றி!கோடைக்குக் குளு குளுன்னு அருவியில் குளித்து அனுபவியுங்க!

    ReplyDelete
  23. காலத்திற்கேற்ற பகிர்வு போஸ்

    ReplyDelete
  24. இங்கே கோவை எப்பொழுது ஆவேரஜ் வெயில்தான்
    :)

    ReplyDelete
  25. சீசனுக்கு ஏற்ற பதிவு அப்படியே வால்பாறை பற்றி பதிவு போட்டால் நல்லா இருக்கும். அங்க போகலாமுன்னு ஒரு ஐடியா இருக்கு

    ReplyDelete
  26. தமிழ்வாசி - Prakash கூறியது...

    @விக்கி உலகம்
    அண்ணே...ஆளவே பாக்க முடியல... ரொம்ப பிசியோ?/// விக்கி எப்பவுமே பிசி தான்..

    ReplyDelete
  27. யாழ். நிதர்சனன் கூறியது...

    காலத்திற்கு ஏற்ற பதிவு..
    சந்தர்ப்பம் கிடைத்தால் வருகிறேன்/// நன்றி நண்பரே..

    ReplyDelete
  28. Speed Master கூறியது...

    இலவு தவிற மற்ற் அணைத்திலும் ஓட்டு போட்டுட்ட்டேன்

    என்ன ஃபிரியா கூட்டிட்டி போகனும்/// வாங்க கூட்டிட்டு போறேன்..

    ReplyDelete
  29. NKS.ஹாஜா மைதீன் கூறியது...

    நானும் அகத்தியர் அருவிக்கு சென்று இருக்கிறேன்....அருமையான அருவி..பகிர்வுக்குநன்றி.../// நன்றி நண்பா..

    ReplyDelete
  30. ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...

    படிக்கும்போதே சில்லுன்னு ஆயிருச்சி// அப்படியா?

    ReplyDelete
  31. ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...

    குளு குளு சிலு சிலூ!!// போய் பாருங்க இன்னும் சூப்பரா இருக்கும்..

    ReplyDelete
  32. அருமையான் பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  33. கோடை காலத்தில் கொளுத்தும் வெயிலில் அருவிகள் அற்புதமான ஒரு இடம் நண்பா ...

    ReplyDelete
  34. அடடா இப்பவே வந்திடனும் போல இருக்கே! அது சரி இதென்ன டெம்பிளேட் மாற்றம் ? ஓட்டுப் பட்டைகள் எங்கே?

    ReplyDelete
  35. எல்லா அருவிளையும் நானும் குளிச்சிருக்கேன்...

    ReplyDelete
  36. சென்னை பித்தன் கூறியது...

    சமீபத்தில்தான் ஒருவர் குற்றாலம் போய் வந்ததாக எழுதினார்;நீங்க அகத்தியர் அருவி பற்றி!கோடைக்குக் குளு குளுன்னு அருவியில் குளித்து அனுபவியுங்க!..// aamaa

    ReplyDelete
  37. ahan.Thamesh கூறியது...

    காலத்திற்கேற்ற பகிர்வு போஸ்// முதல முறை வருகைக்கு நன்றிகள்..

    ReplyDelete
  38. ஷர்புதீன் கூறியது...

    இங்கே கோவை எப்பொழுது ஆவேரஜ் வெயில்தான்
    :)/// அப்படியா?

    ReplyDelete
  39. சசிகுமார் கூறியது...

    சீசனுக்கு ஏற்ற பதிவு அப்படியே வால்பாறை பற்றி பதிவு போட்டால் நல்லா இருக்கும். அங்க போகலாமுன்னு ஒரு ஐடியா இருக்கு////// போடறேன்..

    ReplyDelete
  40. இராஜராஜேஸ்வரி கூறியது...

    அருமையான் பகிர்விற்கு நன்றி.// நன்றி..

    ReplyDelete
  41. கந்தசாமி. கூறியது...

    கோடை காலத்தில் கொளுத்தும் வெயிலில் அருவிகள் அற்புதமான ஒரு இடம் நண்பா .../// ஆமாம்.

    ReplyDelete
  42. ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி கூறியது...

    அடடா இப்பவே வந்திடனும் போல இருக்கே! அது சரி இதென்ன டெம்பிளேட் மாற்றம் ? ஓட்டுப் பட்டைகள் எங்கே?// இருக்கு நண்பா..

    ReplyDelete
  43. thirumathi bs sridhar சொன்னது…

    நல்ல பகிர்வு.
    .// நன்றி,,

    ReplyDelete
  44. நெல்லை மட்டுமா அகஸ்த்தியர் அருவிக்கு மிக பக்கத்திலாக்கும் என் ஊரு.

    ReplyDelete
  45. இரண்டு முறை குளித்த அனுபவம், சொந்த ஊர் அருகில் ஆலங்குளம் அருகில் கிராமம். குற்றல குளியல் 10 முறை, திற்பரப்பு அருவி குளியல் 3 முறை ஆம் என் போன்ற சென்னை வாசிக்கு இது அதிகம்தானே. நினைவூட்டலுக்கு நன்றி

    ReplyDelete
  46. நல்ல பகிர்வு...
    படிக்கும் போதெ சும்மா ஜில்லென இருக்கு.

    ReplyDelete
  47. மாப்ளை ஒரே நாள்ல 3 .. ஹி ஹி

    ReplyDelete
  48. Oru murai kollimalai vannga....www.kollihills.co.in

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"