அருவிகளுக்குப் பெயர் போன குற்றாலத்திற்கு வெளியேயும் பல சிறந்த அருவிகள் உள்ளன. அவற்றில் ஒன்று திருநெல்வேலி அருகில் பாபநாசம் அணைக்குச் செல்லும் வழியில் உள்ள அகத்தியர் அருவி.
மலைகள் சூழ்ந்திருக்க ஒரு அருமையான இயற்கைச் சூழலில் அமைந்துள்ள இந்த அருவி சிறியதாக இருந்தாலும், குற்றாலத்தைப் போல இந்த அருவியில் விழும் தண்ணிரும் உடல் நலத்திற்கு வலிமை சேர்ப்பதாகும்.
இதனை குடும்ப அருவி என்று கூட அழைக்கலாம். அருவியில் இருந்து கொட்டும் தண்ணீர் இதமாக விழுவதால், சிறுவர்களைக் கூட அழைத்துச் சென்று ஆனந்தமாகக் குளிக்கலாம்.
இந்த அருவியின் ஒரு பகுதி நீர் வந்து நிரம்பும் குளம் ஒன்று அருகில் உள்ளது. இதில் மிகவும் வளர்ந்த மீன்கள் நீந்தி விளையாடுவதை பார்த்துக் கொண்டேயிருக்கலாம்.
மாலையில் சென்று பொழுதைக் கழிக்க ஏற்ற இடமிது. அருவியில் சுகமாக நீராட விரும்புவோர் அதிகாலை நேரத்தில் இங்கு சென்று நீராடலாம்.
இந்த அருமையான இடத்தை, ஒரு நடை குடும்பத்தோடு போய் பாத்துவிட்டுதான் வாருங்களேன்..













