நம் நாட்டில் எங்காவது ரயில் விபத்து ஏற்பட்டால் உடனே அமைச்சர் விரைந்து சென்று பார்வையிடுவார். பத்து லட்ச ரூபாய் இழப்பீடு இத்யாதி, இத்யாதி என பல அறிவிப்புகள் அறிவிப்பார். பயங்கரவாதிகள் தாக்குதல், உயிர்ப்பலி என்றால், 'மிகவும் கோழைத்தனமானது இது அனுமதிக்க முடியாது', இதை நாங்கள் 'இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம்' என்பார் அமைச்சர். உயிரிழந்தோருக்கு இழப்பீடு, அனுதாபம், ஆதரவு பேச்சு என பல நாடகங்களை அரங்கேறும் .
இரண்டு வாரங்களில் நாம் எல்லாரும் அதை மறந்து விடுவோம். அத்துடன் அடுத்த விபத்து, அடுத்த குண்டு வெடிப்பு நடக்கும் போது மட்டும் தான் , அதைப் பற்றி பேசுவோம். இவற்றுடன் புதிதாக இணைந்துள்ள விஷயம் பெட்ரோல், டீசல், கேஸ் விலையேற்றம். கடந்த மே மாதம் ஐந்து ரூபாய் ஏற்றியவர்கள், இந்த செப்டம்பரில், 'மிகவும் கருணை உள்ளத்தோடு' மூன்று ரூபாய் மட்டுமே ஏற்றியிருக்கின்றனர்.
எதிர்க்கட்சியினர் என்ன செய்வார்கள் ஒரு வாரம் கத்திவிட்டு, விட்டு விடுவார்கள். நீங்கள் வேண்டுமானால் பார்த்து கொண்டே இருங்கள் . இன்னும் சில மாதங்களில், இந்த பெட்ரோல் விலை, '100' அடித்து விடும்.
காஸ் விலையை, 800 ரூபாய் ஆக்குவதற்கு பலமாக முயற்சிக்கிறார் அத்துறை அமைச்சர் . என்ன விலைவாசி ஏறினாலும் முழுவதும் சகித்துக் கொண்டு அடிமை வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறது நம் நாட்டு நடுத்தர வர்க்கம். இது தான் கடந்த நான்கு வருடங்கலாக பொருளாதார மேதை மண்(ன்) மோகன் சிங் தலைமையில் காங்கிரஸ் அரசு சாதித்தது.
இந்தியா வல்லரசாகிறது. எதில்?
நல்லா சொன்னீங்க தோழரே
ReplyDeleteஇந்தியா வல்லரசாகிறது. எதில்?
ReplyDeleteஎதிலோ!
வேறென்ன சொல்ல?
இந்தியா தானே? வல்லரசுதானே? ஆகிடும் , ஆகிடும்....
ReplyDelete150ரூபாய்க்கு பெட்ரோல் வாங்குவோம் அந்த காலம் வெகு தொலைவில் அல்ல, அப்ப என்ன செய்விங்க அப்ப என்ன செய்விங்க.....
ReplyDeleteஅப்புறம் இப்ப உள்ளவர்கள் (மத்தியில்) அமைச்சர்களா?? என்ன சார் தமாசு பண்ணிக்கிட்டு
இந்தியா எப்பவோ வல்லரசு ஆகிவிட்டது ஊழலில்
ReplyDelete//இந்தியா வல்லரசாகிறது. எதில்?//
ReplyDeleteஉங்க கேள்வி நல்ல கேள்விதான். பதில் சொல்லத்தான் நாம் ஓட்டுப்போட்டு உட்கார்த்திவைத்த அரசியல்வாதிகள் யாரும் தயாராக இல்லை சகோ.
இந்தியா இனிமேல தான் வல்லரசாக ஆக்ப்போகிரதா????????
ReplyDeleteஆளுக்கொரு சைக்கிள் பார்சல்!
ReplyDeleteஎன்ன சைக்கிள் வெல லட்ச ரூவாயா?
அப்போ நடைராஜா தான்....
என்ன? நடக்குரதுக்கும் டோல் கட்டணுமா?
அவ்வ்வ்வ்வ்வ்
காங்கிரஸ் வாழ்க!
ReplyDeleteஅன்னை வாழ்க!
தானியத் தலீவன் ராகுல்"ஜி" வாழுக!
விலைவாசி முன்னேற்றத்தில் சீக்கிரம் நாடு முன்னோக்கி சென்றுவிடும்
ReplyDeleteஅண்ணாச்சி எப்படி இருக்கீங்க ?
ReplyDeleteகண்ணு தெரியாதவன் கார் ஓட்டுனமாதிரி இருக்கு காங்கிரஸ் ஆட்சி ....
ReplyDeleteமன்மோகன் சிங்: ஏம்பா ஒபாமா ஏதோ வல்லரசு வல்லரசுன்னு சொல்றாங்களே அது இருந்தா ஒண்ணு குடுய்யா எங்க நாட்ல போய் மாட்டிடுறேன் எவன் பார்த்தாலும் எப்ப வல்லாரசாகும் எப்ப வல்லரசாகும்னு கடுப்பு ஏத்துறான்...
ReplyDeleteஒபாமா: அது எங்க நாட்ல கிடைக்காது பாகிஸ்தான்ல தான் இருக்கு அவன் கிட்ட சண்டை போட்டு எடுத்துக்குங்க
மன்மோகன்: போடாங்... ஏற்கனவே எங்களுக்கும் அவுங்களுக்கும் வாய்க்கா தகராறு இதுல இது வேறையா...
பொருளாதார மேதை மண்(ன்) மோகன் சிங் தலைமையில் காங்கிரஸ் அரசு சாதித்தது.//
ReplyDeleteஇவரெல்லாம் நாட்டுக்கு தேவையில்லாத குப்பைகள்...!!!
பெட்ரோல் விலையேற்றம் அதில்தான் இந்தியா வல்லரசு ஆகிறது ஆஆகிர்ர்ர்ர்ர்ர் த்தூ....
ReplyDeleteவல்லரசு......
ReplyDeleteசோனியா பூந்தி உயிரோடு இருக்கும் வரை அது நடக்காது!!!!
//
ReplyDeleteஇந்தியா வல்லரசாகிறது. எதில்?//
ஊழலில்
//
ReplyDeleteஇந்தியா வல்லரசாகிறது. எதில்?//
விலைவாசியில் ..
இவனுங்க இருக்கும் வரை வாய்ப்பே இல்லை
ReplyDeleteஇன்று என் வலையில்
ReplyDeleteகிளுகிளு கில்பான்ஸ் கழகம்- துவக்க விழா
நல்லா சொன்னீங்க...
ReplyDeleteஅத்தியாவசியத்தை அதிசயம் ஆக்கிவிட்டது, இந்த அரசு
ReplyDeleteஅதுதானே அண்ணளவாகத் தினத்திற்கு 40 ரூபா வரையில் சம்பாதிப்பவர் வறுமைக்கோட்டிற்கு கீழ் இல்லையென்று சொல்லியிருக்கிறாங்களே அப்புறம் எதுக்குக் கவலைப்படணும்
ReplyDeleteஎன்னது காந்தி செத்துட்டாரா ?
ReplyDeleteஇந்தியா தான் வல்லரசாகி விட்டதே இன்னுமா புரியவில்லை உலக அளவில் ஊழல் ... நிர்வாக திறன் இன்மை நாட்டையே காணவில்லை என இந்த மண் (ன் ) மோகன் சொல்லபோறார் இந்த மக்களும் கேட்கத்தான் போறாங்க ...
ReplyDeleteஇந்தியா நிச்சயம் வல்லரசாய் மாறும் ( காங்கிரசோ , பிஜேபியோ யார் வந்தாலும் )., இதை நம் கண்கள் காணும்
ReplyDelete/// நான்கு வருடங்கலாக பொருளாதார மேதை மண்(ன்) மோகன் சிங் தலைமையில் காங்கிரஸ் அரசு சாதித்தது.///
ReplyDeleteசோதித்தது
===================================
கேள்வி - இலக்கணக்குறிப்பு எழுதுக...
காங்கிரஸ் அரசு
--------
பதில் - வினைத்தொகை
சோதித்தது....சோதிக்கிறது....சோதிக்கப்போகிறது....