Tamilus

The best Tamil Aggregator | Tamilus

9/14/2011

ஒன்றுபடுவோம் பதிவர்களே.... நம் சகோதரர்கள் சாகும் முன்னேயாவது...


கூடங்குளம் அணு மின்நிலையத்திற்கு எதிராக இன்று 4-வது நாளாக பொதுமக்கள் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தி வருகின்றனர். 

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் உள்ள அணுமின்நிலையத்தினை நிரந்தரமாக மூடக்கோரி இடிந்தகரை அருகே கடந்த மூன்று நாட்களாக பொதுமக்கள், மீனவர்கள் என பல்வேறு அமைப்பினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று 4-வது நாளாக உண்ணாவிரதப்போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தால் பாதிப்பு அதிகம் உள்ளது. இங்கு நடைபெறும் போராட்டம் ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கான போராட்டம். 

அகில இந்திய அளவில் இதை கொண்டுசெல்லவேண்டும். அன்னாஹசாரே போராட்டத்துக்கு இந்தியா முழுவதும் எல்லோரும் ஆதரவு தெரிவித்தது போல இதற்கும் அனைவரும் ஆதரவு தரவேண்டும்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட கோரியும், இதற்காக நடை பெறும் உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தெரிவித்து பதிவர்கள் ஒன்று திரளவேண்டும்.

ஈழ மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தோம், மீனவர்கள் பிரச்சனைக்காக ஒன்று கூடினோம், இந்தப் பிரச்சனைக்கு ஏன் ஒதுங்குகிறோம்.


(இந்த உண்ணாவிரதத்தில் நம் பதிவர் சகோதரர் கூடல்பாலா அவர்களும் கலந்து கொண்டுள்ளார்)

ஒன்றுபடுவோம் உறவுகளே...


அங்கே நம் சகோதரர்கள் உண்ணாவிரதத்தில் மடியும் முன் நம்மால் முடிந்த உதவிகள் செய்வோம்.

35 comments:

  1. அங்கே நம் சகோதரர்கள் உண்ணாவிரதத்தில் மடியும் முன் நம்மால் முடிந்த உதவிகள் செய்வோம்.:////

    நிச்சயமாக!

    ReplyDelete
  2. நானும் பேஸ்புக்கிலும், பஸ், டுவிட்டர்களிலும் போட்டுட்டுதான் இருக்கேன் பதிவர்களிடமும் பத்திரிகைகளிடமும் நோ ரெஸ்பான்ஸ்...!!!

    ReplyDelete
  3. என்ன செய்யலாம் சொல்லுங்க?

    ReplyDelete
  4. போராட்டம் வெல்லட்டும்.அனைவரும் குரல் கொடுப்போம்.

    ReplyDelete
  5. பரமக்குடி கலவரம் மக்கள் கவனத்தை திசை திருப்பியதாக தோன்றுகிறது...

    ReplyDelete
  6. அங்கே நம் சகோதரர்கள் உண்ணாவிரதத்தில் மடியும் முன் நம்மால் முடிந்த உதவிகள் செய்வோம்.:////

    நிச்சயமாக!போராட்டம் வெல்லட்டும்.அனைவரும் குரல் கொடுப்போம்.

    ReplyDelete
  7. என்னதான் செய்ய முடியும்?

    ReplyDelete
  8. போராட்டம் வெல்ல நம்மால் முடிந்ததை செய்வோம்.

    ReplyDelete
  9. நிச்சயமாக நம்மால் முடிந்ததை செய்வோம்..

    ReplyDelete
  10. நிச்சயம் குரல் கொடுப்போம். . .நல்லது நடக்கட்டும் சகா. . .

    ReplyDelete
  11. அந்தப் பகுதியில் பள்ளி மாணவர்களுக்குக் கூட ஏற்பட்டிருக்கும் விழிப்புணர்வு வியப்பில் ஆழ்த்துகிறது.

    படித்தவர்
    படிக்காதவர்
    ஏழை
    பணக்காரன்
    முதியவர்
    இளையவர் என எந்தப் பாகுபாடுமின்றி ஒன்றிணைந்து குரல்கொடுக்க முன்வந்துள்ள இந்த சூழலில்

    வலையுலகில் இதுதொடர்பான ஒன்றிணைந்த குரல் காலத்தின் தேவை நண்பா.

    ஒன்றுபடுவோம்

    ஓரணியில் திரள்வோம்.

    ReplyDelete
  12. ஒன்றுபடுவோம் குரல் கொடுப்போம்

    போரட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. நல்ல முயற்சி பதிவுலகிலும் ஒன்று பட்டு குரல் கொடுப்பது

    ReplyDelete
  14. ஒன்று பட்டு குரல் கொடுப்போம்!

    ReplyDelete
  15. அவர்கள் போராட்டம் வெல்ல வேண்டும்

    ReplyDelete
  16. போராட்டத்தை இன்னும் பலப்படுத்த வேண்டும். குறைந்த பட்சம் உள்ளூர்வாசிகளும், சுற்றுவட்டார மக்கள் அனைவரும் ஒன்று திரண்டாலே மக்களின் பிரமாண்ட எதிர்ப்பை ஊடகங்கள் வெளிக்கொண்டு வரும்.

    பெரியதொரு மாற்றத்தை நிச்சயம் பெறமுடியும்.

    விழியுங்கள் மக்களே!

    ReplyDelete
  17. அவர்களின் போராட்டம் வெற்றி பெறவாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. ஒன்றுபடுவோம். நிச்சயம் வெல்வோம்.!

    ReplyDelete
  19. எப்போதுமே தமிழ் நாட்டினில் ஒரு பிரச்சினையை மறைக்க இன்னொரு பிரச்சினையை உருவாக்கும் அரசியல்வாதிகள் இருக்கின்றார்கள். ஆனால் மக்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என்கின்ற தன்மை தற்போது நடந்து வருகின்றது. எத்தனையோ பணப் புழக்கம், ஆள் பலம் இருந்தும் கள்ள ஒட்டு சாம்ராஜ்யம் இருந்தும் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டதால் இன்று புதிய ஆட்சியின் கீழ் அமர்ந்து இருக்கின்றார்கள். இனி வரும் எல்லா காலக்கட்டத்திலும் அந்த நிலைதான் வரும், வர வேண்டும். அப்போது நிச்சயம் வெற்றி கிடைக்கும். அதனால் உண்ணாவிரதம் இருக்கும் சகோதர, சகோதரிகளுக்கும் நமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும், ஆதரவையும் தெரிவிப்போம்.

    ReplyDelete
  20. போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகள்

    ReplyDelete
  21. வணக்கம் நண்பா,
    நாம் அனைவரும் நிச்சயமாக ஒருமித்த குரலெழுப்பி, உண்ணாவிரதத்தில் ஈடுபடும் எம் உறவுகளின் போராட்டத்தை வெற்றி பெறச் செய்வோம்.

    ReplyDelete
  22. இது இதை தாங்க நான் எதிர்பார்த்தேன்..

    ReplyDelete
  23. எங்கள் போராட்டத்தை பற்றி உங்கள் வலைப்பதிவில் எழுதியதற்க்கு நன்றி நண்பரே.

    நாங்கள் நிச்சயம் வெல்வோம்

    கூடன்குளம் அணு உலைக்கு எதிரான இந்த பதிவையும் படிங்க

    4-வதுநாள் உண்ணாவிரதம்.127 உயிர்களை காப்பாற்றுங்கள்!!!

    ReplyDelete
  24. என்ன செய்யலாம் சொல்லுங்க?

    ReplyDelete
  25. சுருக்கமாக அதன் ஆபத்தான விளைவுகள் குறித்து
    ஒரு வாசகம் தயாரித்து அதனைமூடக் கோரி
    அனைத்து பதிவுகள் மூலம்
    மத்திய அரசுக்கு மின்னஞ்சல் அனுப்பலாமா?

    ReplyDelete
  26. அன்பின் உறவுகளே..
    கூடங்குளம் அணுஆலை தொடர்பாக 127 உறவுகள் உண்ணாவிரதம் இருக்கும் செய்தி நான்கு நாட்களாக என்னை எந்தவேலையையும் செய்யவிடவில்லை..

    ஒவ்வொரு வேளை உண்ணும்போதும் ஏதோ குற்றவுணர்வு என்னுள்..

    என் மனம் திறந்து எழுதிய கவிதை..

    127 உயிர்களின் கேள்விகளாக..

    “அடக்கம் செய்யவா அறிவியல்“

    http://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_4313.html

    காண அன்புடன் அழைக்கிறேன்.

    ReplyDelete
  27. போராட்டம் கண்டிப்பாக வெல்லும்.நம்பிக்கையோடு இருப்போம்.நல்லதே நடக்கும் என எதிர்பார்ப்போம்

    இதையும் படிங்க அணு உலைக்கு எதிரான உண்ணாவிரதம் நாள் 5

    தமிழர்கள் முட்டாள்களா?உண்ணாவிரத போராட்டம் நாள் 5

    ReplyDelete
  28. பகிர்வுக்கு நன்றி நண்பரே!

    எனது தளத்தில் எனது ஆதரவுக்கரம்!


    இதற்கு நாம் என்ன செய்ய போகிறோம்?

    http://gokulmanathil.blogspot.com/2011/09/blog-post_6041.html

    ReplyDelete
  29. shanmugavel said...
    போராட்டம் வெல்லட்டும்.அனைவரும் குரல் கொடுப்போம்.

    sure

    ReplyDelete
  30. தமிழ் பதிவுலகமே திரண்டு ஒன்றிணைந்து ஓங்கி குரல் கொடுப்போம்

    எழுப்பும் குரல் எட்டுத்திக்கும் சென்று தூங்கிக்கொண்டிருப்போரை தட்டி எழுப்பட்டும்

    வெற்றி நமதே.. வெற்றி நமதே..

    நட்புடன்
    சம்பத்குமார்

    ReplyDelete
  31. அவர்கள் போராட்டம் வெற்றி பெறும்

    தங்கள் தளத்தின் முகவரி எனது இன்றைய பதிவில் கொடுத்துள்ளேன் நண்பரே

    ReplyDelete
  32. ஒவ்வொரு நாளும் போராட்டத்தின் வீரியம் கூடிக்கொண்டே இருக்கின்றது. அகில இந்திய ஊடகங்கள் அன்னா ஹசாரேவிற்க்கு அளித்த முக்கியத்துவம் போல உண்மையான மானுட சமூகத்திற்க்கான போராட்டத்திற்கு வட இந்திய ஊடகங்கள் தரவில்லை என்பதே உண்மை! மேதா பட்கர் போன்று அகில இந்திய அளவில் சமூக ஆர்வலர்கள், இது இந்தியாவின் பிரச்னை என்று எண்ணினால் வெற்றியின் இலக்கு, வெகு விரைவிலே... மாநில, மத்திய அரசுகள் தமக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லையென்பது போலின்றி, கபட நாடகமாடாமல் ஒருவரையொருவர் குறைக் கூறாமல் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு விரைவில் அடிகோலிடட்டும்!

    இயற்கையின் இடர்பாடுகளால் மட்டுமல்ல, மனிதனின் சின்னஞ்சிறு தவறுகளினாலோ அல்லது இயந்திர & மின்னணு சாதனங்களின் பழுதுகளினாலோ கூட மிகப்பெரிய விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன என்பது தான் அணுமின் நிலையங்களின் வரலாறு. காண்க: வேண்டாமே விபரீதம்...புகைப்படம் பார்ப்பீர்; புரிந்துணர்வுக் கொள்வீர்! – கூடங்குளம் அணுமின் நிலையம்! http://nellimoorthy.blogspot.com/2011/09/blog-post_20.html

    பதிவுலகத்தின் நட்சத்திர நாயகர் கூடல். பாலாவின் உடல்நிலையும் அவருடன் களமிறங்கி இருக்கும் அனைத்து தோழர்களின் உடல்நிலையும் கவலை அளித்தாலும் கொண்டுள்ள இலக்கை விரைவில் அடைந்திட வாழ்த்துக்கள்!

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"