
தமிழக முதல்வர், இந்தியாவின் பிரதமராக வர வேண்டும் என்று, சட்டசபையில் சரத்குமார் பேசுகிறார். இதே போல், அ.தி. மு.க.,வின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அமைச்சர்களும், எம்.எல்.ஏ.,க்களும், ஜெயலலிதா பிரதமராக வர வேண்டும் என்று பேசுகின்றனர்.
தி.மு.க., தலைவர் கருணாநிதியோ, "சேலை கட்டிய தமிழன் பிரதமராவதை விட, வேஷ்டி கட்டிய தமிழன் பிரதமராக வரவேண்டும்' என்கிறார். ஆக, இந்தியாவின் தென் கோடி மாநிலமாம், தமிழகத்தை சேர்ந்த ஒரு தமிழனும், பிரதமராக வர முடியும்...