கண்ணா லட்டு திண்ண ஆசையா படம் மூலம் பப்ளிசிட்டி கிடைக்க சீனிவாசனின் இன்னொரு முகம் வெளியே தெரிய வந்தது. வேலை வாங்கித் தருவதாகவும், சினிமாவில் வாய்ப்பு வாங்கித் தருவதாகவும், இரட்டிப்பு பணம் தருவதாகவும் பல உறுதிகளை கொடுத்து அதை காப்பாற்ற முடியாமல் தவித்த கதை மெல்ல மெல்ல வெளியே வந்தது.
சென்னையில் ஆரம்பித்த இரண்டு புகார்கள் அப்படியே நகர்ந்து ஆந்திரா, கேரளா, கர்நாடகா வரை சென்றது. இவரால் பாதிக்கப்பட்டவர்கள் இதுவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் 7 புகார்களை அளித்துள்ளனர். புகாரில் ஏமாந்தவர்களின் கணக்குப்படி ரூபாய் 12 கோடியை எட்டுகிறது.
இதில், ஒரு சில புகார்கள் சீனிவாசனும், அவரது மனைவியும் பணம் கேட்டவர்களை தொலைத்துவிடுவதாக சொல்லி மிரட்டிய புகார்கள் ஆகும். இந்த நிலையில் சீனிவாசனை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். பின்னர் 5 நாள் காவ-ல் எடுத்து விசாரணை நடத்தினர்.
ஆனால், உருப்படியாக அவரிடமிருந்து எந்த தகவலும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. இவ்வளவு பணத்தை என்ன செய்தீர்கள் என்று போலீசார் திரும்ப திரும்ப கேட்டிருக்கிறார்கள். அனைத்திற்கும் அமைதியாக இருந்திருக்கிறார். சீனிவாசனை விசாரிக்கும் டீமில் இருக்கிற ஒரு அதிகாரியிடம் இதுகுறித்து கேட்டபோது, அவர் எப்போது பார்த்தாலும் சிரித்துக்கொண்டே இருக்கிறார்.
திடீரென விக்கை கழட்டி தலையை துடைத்துக்கொண்டு மீண்டும் மாட்டிக்கொள்கிறார். என்ன சார் ஏதாவது சொல்லுங்களேன், கஸ்டடி முடியபோகுது என்று கேட்டால், மறுபடியும் ஒரு 5 நாள் கஸ்டடி கேட்டு வாங்கிக்க வேண்டியதுதானே என்று காமெடியாக பதில் சொல்லுகிறார். இவரிடம் இருந்து உண்மையை வரவழைக்கவோ, பணம் இருக்கும் இடத்தை அறிந்து கொள்ளவோ அவர் சொன்னபடி இன்னும் சில நாட்கள் தேவைப்படும் என்றுதான் கருதுகிறோம் என்கிறார் அந்த அதிகாரி.
மொத்தத்தில் காமெடி நடிகரான பவர் ஸ்டார் சீனிவாசன், தன்னுடைய சிரிப்பையே வில்லத்தனமாக பயன்படுத்தி போலீசாரை கண்ணீர் விட வைத்திருக்கிறார்.
'செமையாக கவனித்தால்' எல்லாம் வெளியே வரும்...
ReplyDeleteகவனிப்போ....எல்லாம் தேவை
ReplyDelete