Tamilus

The best Tamil Aggregator | Tamilus

5/13/2013

இப்படியும் சில பெண்கள் ! என்ன செய்ய?


ன்புள்ள அப்பாவுக்கு...
நலம் ..
தாங்கள் நலமுடன் இருக்க
ஆண்டவனை 
வேண்டிக்கொள்கிறேன்.


அன்று,


தாமரைக் குளமும் 
பெருமாள் கோயிலும் 
பெரிதாய் இருக்கிறதென்று 
சொன்னீர்கள்...!


வீட்டுக் கொல்லையில்
பூச்செடிகளும் 
சின்ன காய்கறித் தோட்டமும் 
பார்த்துக்கொண்டே இருக்கலாம்
என்றீர்கள்...!



பழைய தஞ்சாவூர் ஓட்டு வீட்டில் 
வாழக் கொடுத்து வைக்க 
வேண்டுமென்று 
வக்கணை பேசினீர்கள்...!


மாமியாரும், நாத்தனாரும்
தங்கக் குணமென்று
பார்த்தவுடன் எடைப் போட்டதாக 
அம்மாவிடம் அங்கலாய்த்தீர்கள்...!


மாப்பிள்ளையின் 
சம்பளம் பற்றி
மாய்ந்து மாய்ந்து பேசினீர்கள் 
சம்பந்தி வீட்டு பெருமை...!


மாப்பிள்ளை வீடு 
ரொம்ப அழகுதான் 
உறவினர்களின் உபசரிப்புக்கும் 
ஒரு குறையும் இல்லை...!


இங்கு 
நீங்கள் 
பார்க்கத் தவறியது 
அவர் மனசு அழகா
என்பதை மட்டும்தான்...!


இருந்தாலும் பரவாயில்லை ...


இந்தக் கடிதத்தை 
அம்மாவிடம் 
படித்துக் காட்டும்போது 
அவரோடு நான் 
சந்தோஷமாகவே இருப்பதாக 
அவசியம் சொல்லவும்...!

படம் உதவி ஓவியர் இளையராஜா - மறு பதிவு.

9 comments:

  1. மனம் கனக்கச் செய்யும் கவிதைக் கடிதம்...
    மேலோட்டமாகப் பார்த்து யாரையும்
    எடைபோட்டுவிடக்கூடாது என்பதையும்
    ஒரு பெண்ணில் இருக்கும் எண்ணற்ற உணர்வுகளையும்...
    உணர்ச்சியில்லாத சில மானுட ஜென்மங்களையும்
    விளம்பி நிற்கிறது கவிதை...

    ReplyDelete
  2. அம்மாவிடம் சொல்ல வேண்டாம்... இன்றும் பலரின் உண்மையான நிலைமை... கொடுமை...

    ஆக மொத்தம் மனதை பார்த்து திருமணம் செய்து வைக்கவில்லை...

    ReplyDelete
  3. நேர்மாறாக நேர்மையான பெண்ணின் மனதை படம்பிடித்து விட்டீர்கள்.வாழ்த்துக்கள்.ஆனாலும் அந்தகால பழைய ஓட்டுவீடு எப்போதுமே குளுமை மனதுக்கும் மகிமை

    ReplyDelete
  4. 21ம் நூற்றாண்டிலும் இதுதான் நிலைமை!

    ReplyDelete
  5. எப்போதுமே பெண்களின் மனநிலை இப்படித்தான்.

    ReplyDelete
  6. இப்படியும் சில பெண்கள்.... என்றில்லை.
    இப்படித்தான் எல்லா பெண்களும்... என்ன செய்வது?

    பெண்களின் மனவேதனையைக் கவியில் கொடுத்தமைக்குப் பாராட்டுகள்.

    ReplyDelete
  7. கனக்க வைத்த கடிதக் கவிதை! நன்றி!

    ReplyDelete
  8. உலகம் என்ன தான் நாகரீகம் என்று எவ்வளவோ மாறினாலும்..அம்மாவிடம் சந்தோசமாக இருப்பதாகவே காட்டிக் கொள்ளும் பெண்கள் என்றும் மாறுவதில்லை என்பது மகிழ்ச்சியான விடயம்.

    நன்றி ஒரு பெண்ணின் சோகம் சொன்னக் கடிதத்திற்கு

    ReplyDelete
  9. உங்கள் பதிலில், ஒரு உண்மையுடன் கூடிய சோகம் தெரிகிறது; ஆண்கள் தான் "அங்கு" தவறு செய்கிறார்கள்.

    எனக்கு கடவுள் நம்பிக்கை இப்போ இல்லை. என் மனைவி, "நான் முருகனைப் பார்க்கணும். நீங்களும் வரனும்" என்பார்கள். என் மனைவியே தனியாகவே கார் ஒட்டி சென்று வரலாம். இருந்தாலும், மனைவியுடன் கூட செல்வது கணவனுக்கு அழகு. அதைத் தான் நான் செய்தேன்...!


    கணவனுக்கு சில கடமைகள். நானும் கோவிலுக்கு செல்வேன். என் மனைவிக்காக. அது மூட நம்பிக்கையா என்று ஆராய்வது என் வேலை அல்ல. ஒரு கணவனாக கூட செல்வேன். அவ்வளவே...!

    ____________________
    அருணா செல்வம் said...

    இப்படியும் சில பெண்கள்.... என்றில்லை.
    இப்படித்தான் எல்லா பெண்களும்... என்ன செய்வது?
    -----
    உலகம் என்ன தான் நாகரீகம் என்று எவ்வளவோ மாறினாலும்..அம்மாவிடம் சந்தோசமாக இருப்பதாகவே காட்டிக் கொள்ளும் பெண்கள் என்றும் மாறுவதில்லை என்பது மகிழ்ச்சியான விடயம்.

    நன்றி ஒரு பெண்ணின் சோகம் சொன்னக் கடிதத்திற்கு

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"