நம்முடைய உடல் எடையை குறைப்பதற்கு எவ்வளவு தான் முயற்சித்தாலும், இருக்கிற எடை மட்டும் குறையாது. அதிலும் சிலர் எடை குறைக்க வேண்டுமென்று ஜிம்முக்கு செல்வார்கள். ஆனால் அதனை எடை குறைக்க வேண்டுமென்ற ஆர்வத்தில் ஒரு வாரம் மட்டும் தான் செல்வோம். அதன் பின் அதுவும் இல்லை.
ஆனால் சிலரோ தினமும் காலையில் எழுந்ததும் வாக்கிங், ஜாக்கிங் போன்றவற்றையாவது தொடர்ந்து செய்யலாம் என்று முடிவெடுப்பார்கள். அதுவும் தோல்வியிலேயே முடியும். ஏனெனில் இன்றைய அவசர காலத்தில், எதையும் விரைவில் முடிக்க வேண்டும் என்று வேகமாக செய்வோம். அதனால் உடல் விரைவில் சோர்வடைந்து விடும்.
இப்படிப்பட்ட நிலையில் எங்கு உடல் எடையைக் குறைப்பதற்கு மேற்கொள்ளும் முயற்சி நன்மையைத் தரும்? ஆகவே அத்தகையவர்களுக்காக உடல் எடையை எளிதில் அன்றாட செயல்களின் மூலம் எப்படி குறைப்பது என்று எளிமையான சில வழிகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
அதைப் படித்து பார்த்து தெரிந்து கொண்டு, தொடர்ந்து பின்பற்றி எடையை குறைக்க முயற்சி செய்வோம் வாருங்கள்.
- நாம் அனைவரது வீடுகளிலும், அலுவலகத்திலும் மாடிகள் இருக்கும். அப்போது மேலே செல்வதற்கு, லிப்ட்டுகளை பயன்படுத்தாமல், படிக்கட்டுகளின் மூலம் செல்லலாம். இது உடல் எடையைக் குறைப்பதற்கான ஒரு வழியாகும்.
- வீட்டிலோ அல்லது வேறு எங்கோ, கீழே உட்கார்ந்தால் எழும் போது, கைகளை கீழே ஊன்றியோ அல்லது வேறு எங்காவது பிடித்துக் கொண்டோ எழ வேண்டாம். அப்படியே எந்த துணை இல்லாமல் எழவேண்டும். இதுவும் ஒருவிதமான உடற்பயிற்சி தான்.
- தொப்பையைக் குறைப்பதற்கு ஒரு சிறந்த உடற்பயிற்சி என்றால், தரையில் படுத்துக் கொண்டு டி.வி பார்க்கும் போது, கைகளை தலைக்கு பின்னால் பிடித்துக் கொண்டு, மெதுவாக முன்னே எழ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால், வயிற்றில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரையும், உடல் எடையும் குறையும்.
- ஜாக்கிங் என்று சொன்னதும் வெளியே தான் செல்ல வேண்டும் என்பதில்லை. வீட்டில் டிவி பார்த்துக் கொண்டே, ஒரே இடத்தில் நின்று கொண்டே ஜாக்கிங் செய்யலாம்.
தொடரும்...
புதுசா இருக்கே...! நல்லது... நன்றி...
ReplyDeleteவிக்கி அண்ணனுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம் ஹி ஹி...
ReplyDeleteஅருமையான இடுகை ஒன்றை எழுதியுள்ளீர் சகோதரரே,
ReplyDeleteஇந்த இடுகை இவ்வளவு சிறப்பானதாக அமைய அல்லாஹ் தான் காரணம். அளவற்ற அன்பாளனும் நிகரற்ற அன்பாளனுமாகிய அல்லாவின் கருணையினால் தாங்கள் மேலும் சிறப்படைவீர்கள்.
“அல்லாஹ் ஒருதடவை சொன்னா, அது நூறு தடவை சொன்னமாதிரி”