உன்மீது உண்டானது
காதல்தான் என்று
எனக்கு
முதலில் உணர்த்தியது
மழை...!
உன்னுள் கரையும் போது
என்னுள் மழையில் நனையும் சிலிர்ப்பு...!
கரு மேகங்கள் சூழ
ஒரு நாள் மழை தோடு முன்
என் விரல்களை நீ பற்றினாய் ...!
நம் முதல் ஸ்பரிசத்தை
மேலும் மகிழ்த்தியது
மழையின் பகிர்வு...!
நெற்றியில் விழும்
ஒற்றை முடி விலக்கி
மெல்ல இதழ் பதித்தாய்
அதுவும்
ஒரு மழைநாள் மாலைப் பொழுதில் ...!
பின்னொரு நாள்
கனத்த இதயத்தையும்
கண்ணீரையும் சேர்த்து
என் காதலுக்கு கல்லறை
எழுப்பினாய்
அன்றும் மழை பெய்தது...!
அந்த மழை
என் கண்ணீர் விலக்கவா
தன் சோகம் கரைக்கவா
என்று தெரியவில்லை ...!
உண்மையில்
உன் பிரிவை விடவும்
என்னை வருத்துவது
நீ தந்த
மழைக்கும் எனக்குமான உறவு...!
- மறுபதிவு
சூப்பர்...
ReplyDelete/// அந்த மழை
ReplyDeleteஎன் கண்ணீர் விலக்கவா
தன் சோகம் கரைக்கவா
என்று தெரியவில்லை...! ///
என்னவெல்லாம் செய்கிறது இந்தக்காதல்!
ReplyDeleteஅவள் உங்களை தொட்டிருக்கிறாள், இதழ் பதித்திருக்கிறாள், அதனால் தான் வந்தது பிரச்சினையே. எனவே காதல் துயர் தாக்காமல் escape ஆக வேண்டுமென்றால் கல்யாணம் ஆகும் வரை தொட அனுமதிக்கக் கூடாது. எப்பூடி......!!
ReplyDelete
ReplyDeleteநெற்றியில் விழும்
ஒற்றை முடி விலக்கி
மெல்ல இதழ் பதித்தாய்//
அதுதான் உங்களை மேலும் குழப்பமடைய வைக்கிறதோ?