ஊழலின் விளை நிலம் இந்தியா' என்று சொல்லும் அளவுக்கு, எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்ற நிலைக்கு நாட்டைக் கொண்டு சேர்த்ததில், காங்கிரஸ் கட்சிக்குக் கணிசமான பங்குண்டு.
நிலம், நீர், ஆகாயம், காற்று, நெருப்பு என, பஞ்ச பூத ஊழலையும், அக்கட்சி, மொத்த குத்தகைக்கு எடுத்துள்ளது. பீரங்கி மூலம் நிலத்தில் ஊழல், நீர்மூழ்கிக் கப்பல் மூலம் நீரில் ஊழல், '2ஜி' அலைக்கற்றை மூலம் காற்றில் ஊழல், ஹெலிகாப்டர் மூலம் ஆகாயத்தில் ஊழல், நிலக்கரி மூலம் நெருப்பில் ஊழல் என, பஞ்ச பூத ஊழலையும், தன் கைவசம் கொண்டுள்ளது.இந்த நிலையில், வருங்காலப் பிரதமர் ஆக, ராகுல் மறுத்தாலும், காங்கிரசாரால் முன்மொழியப்படுவார்.
இந்த லட்சணத்தில், கர்நாடக பா.ஜ., அரசு ஊழலில், உலக சாதனை படைக்கிறது என, அவர் கூறி வருவது, வேடிக்கையாக உள்ளது.அனைத்து ஊழல்களையும் விசாரிக்க, விசாரணைக் குழுக்களை அமைப்பதற்கு காங்கிரஸ் என்றுமே சளைத்ததில்லை. ஆனால், விசாரணைக் குழுக்கள் ஏதேனும் உருப்படியாகச் செயல்பட்டனவா, தீர்ப்பை வழங்கினவா என்றால், இல்லை என்ற பதிலே கிட்டும்.
விசாரணைக் குழுக்கள் முன், சம்பந்தப்பட்டோர் வர மறுப்பதும், தான் அந்தத் துறையோடு சம்பந்தப்பட்டிருந்தாலும், அதற்கும், தனக்கும் சம்பந்தம் இல்லை என, அறிக்கை விடுவதும், வரைமுறையாகிப் போயின.பிரதமரோ, அமைச்சரோ, உயர் அதிகாரியோ, அலுவலரோ, தான் ஊழலுக்கு அப்பாற்பட்டவர் என்றால், நீதி விசாரணைகளை நேரில் சந்தித்து அப்பழுக்கற்றவர் என, நிரூபிப்பது தானே நியாயம்?
ஜாதிச் சான்றிதழ் பெறுவதில் இருந்து, ராணுவத் தளவாடங்கள் வாங்குவது வரை, அடிமட்டத்தில் இருந்து, மேல் மட்டம் வரை, ஊழல் மலிந்துள்ளது. ஊழலற்ற இந்தியாவைக் காண்பது வாழ்வில் எந்நாளோ?
ஊழலற்ற இந்தியாவைக் காண்பது வாழ்வில் எந்நாளோ?
ReplyDeleteஇப்பிறவியில் இயலாது!
//
ReplyDeleteஊழலற்ற இந்தியாவைக் காண்பது வாழ்வில் எந்நாளோ?
//
நான் பிரதமர் ஆனாதான் ...
இப்போ இருக்கிற நிலமையில் இந்தியாவை யாரும் போரிட்டு வெல்ல வேண்டாம். அரசியல் வாதிகளிடம் பணம் கொடுத்து மொத்தமாக விலைக்கு வாங்கி விடலாம் இது தான் நிஜம். பாகிஸ்தானும் சீனாவும் இதை பற்றி யோசிக்கலாம்.
ReplyDelete