Tamilus

The best Tamil Aggregator | Tamilus

5/11/2013

சிறையில் இருந்து வெளிவந்தபின் ராமதாஸ் என்ன செய்வார்?


ஒரு வழியாக, சித்திரை முழு நிலவு நாள், டாக்டர் ராமதாசின் உத்தரவுப்படி, மிக வெற்றிகரமாக கொண்டாடியாயிற்று. வழக்கமான வன்முறைகளும் அரங்கேறி விட்டன.நடந்த வன்முறைகளை அங்கீகரிக்கும் விதமாக, "முடிந்தால் கைது செய்' என்று, சவால் விட்டார்.ராமதாசின் சவாலை, வேண்டுகோளாக ஏற்று, கடுமையான நடவடிக்கை எடுத்து விட்டார் முதல்வர். 
விளைவுகளாக நடந்தது என்ன?பா.ம.க.,வினர் கூற்றுப்படி, முதுபெரும் தலைவரான, அதாவது, வலிமை வாய்ந்த கட்சியினருடன் கூட்டணி அமைத்தும், கடந்த சட்டசபை தேர்தலில் மூன்றே சீட்டில் ஜெயித்த, வயதானவரான, உடல் நிலை சரியில்லாதவரான ராமதாஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆனால், பாலங்களில் குண்டு வைப்பு, பஸ்கள் மீது கல்வீச்சு, தீ வைப்பு, பெட்ரோல் குண்டு வீச்சு, மரங்கள் வெட்டி சாய்ப்பு என்று, வன்முறைகள் பெருகி வருகின்றன.வட மாவட்டங்களில், இழந்த செல்வாக்கை திரும்பப் பெற, பா.ம.க.,வுக்கு எத்தனையோ வழிகள் உள்ளன.கல்வி வளர்ச்சியில் பின்தங்கிய வன்னியர்களுக்கு, கல்வி சேவையாற்றலாம்; 

அவர்களின் பொருளாதாரம் ஏற்றம் பெற, புதிய முயற்சிகளை செய்யலாம்.இப்படிப்பட்ட வழிகளை எல்லாம் விட்டு விட்டு, "மரங்களை சாய்ப்பேன், காதல் திருமணங்களை தடுப்பேன், வன்னியரை தூண்டி வன்முறையை வளர்ப்பேன்' என்ற அரசியல் நெறி முறையை பின்பற்றுவது, அழகல்ல.இவ்வளவு சம்பவங்களுக்கும் காரணமாக இருந்து விட்டு, முதல் வகுப்பு சிறையில், காந்திய சிந்தனை பற்றிய நூல்களை, ராமதாஸ் படித்துக் கொண்டிருப்பதாக, நாளேடுகள் வாயிலாக அறிகிறோம்.

சிறையில் இருந்து அவர் வெளிய வந்த பின் தான், காந்திய சிந்தனைகளை வாழ்க்கையில் பின்பற்ற போகிறாரா அல்லது பொழுது போகாமல் சிறையில் படித்துக் கொண்டிருக்கிறாரா என்பது தெரிய வரும்.

நன்றி - காளிதாஸ் , மதுரை 

0 comments:

Post a Comment

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"