'நந்தவனத்திலோர் ஆண்டி; அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி, கொண்டு வந்தான் ஒரு தோண்டி, அதைக் கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி...'இந்த சித்தர் பாடல், தற்போது, விஜயகாந்திற்கு நிச்சயம் பொருந்தும்.
அரைத்த மாவையே அரைத்த அரசியல் கட்சிகளின் மத்தியில், ஆவேசமாக
வெகுண்டெழுந்த அவரது கட்சி, முதல் தேர்தலிலேயே கணிசமான ஓட்டுகளைப் பெற்றது. மக்கள் மத்தியில் நல்லதொரு கட்சி உருவாகி விட்டது; நன்மைகள் பல கிடைக்கப் போகிறது என, ஒளிமிக்க நம்பிக்கை ஏற்பட்டது.கட்சி வளரும் வரை, ஏதாவதொரு கட்சியில், அதுவும் பிரபலமான செல்வாக்கு மிக்கக் கட்சியில், கூட்டு சேர்வது நல்லது தான். அந்த வகையில், அ.தி.மு.க.,வோடு கூட்டு சேர்ந்து, தேர்தலை சந்தித்தது; தேர்தலில் அமோக வெற்றி பெற்று, எதிர்க்கட்சி அந்தஸ்தும் கிடைத்தது.
ஆனால், அவருக்கே உரித்தான அவசர குணம் குறையவில்லை. அ.தி.மு.க.,வுடன் முரண்பட்டு, முதல்வர் ஜெயலலிதாவை வம்புக்கிழுத்து, தன் எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்தையே இழந்து விடுவார் போல் தெரிகிறது.
தன் கட்சியிலிருந்து விலகி, மாற்றுக் கட்சிக்கு செல்ல, சில சட்டசபை உறுப்பினர்கள் தயாராகிக் கொண்டிருக்கிற இவ்வேளையிலும், விஜயகாந்த் தன் போக்கை மாற்றிக் கொள்ளவில்லை.அதுமட்டுமா... துணைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனை, பலரும் மதிப்பதில்லை.
இந்த நிலையில், இறங்கு முகத்தில் இருக்கிற, தி.மு.க., - காங்கிரசுடன் கூட்டு சேரும் யோசனை வேறு.இனியாவது, தன் அவசரத்தை குறைத்து, அ.தி.மு.க.,வை தூஷிப்பதை விடுத்து, தன் கொள்கைகளை பரப்ப வேண்டும். மக்களுக்கு என்னவெல்லாம், நல்லது செய்ய முடியும் என்பதை விளக்கி, அன்பும், அமைதியும் கொண்டு, அனுசரணையோடு கட்சியை வழிநடத்த வேண்டும்... இல்லாவிட்டால், எதிர்காலம் பிரகாசமாக இருக்காது.
ஏங்க அடுத்த முதல்வருன்னு சொல்லிகிட்டு இருக்காறு... நீங்க என்னன்னா...
ReplyDelete'அங்கேயே' கேப்டனாக இருந்திருக்கலாம்....!
ReplyDeleteஇப்படியே போனா ஓட்டு போட ஒருத்தரும் இருக்கமாட்டாங்க....
ReplyDeleteஅவருக்கு இவ்வளவு ஒட்டு கிடைத்ததே அதிகம். அவருடைய கட்சியும் பத்தோடு பதினொன்றுதான்.
ReplyDeleteநல்ல பதிவு.
ஒரு ஃபுல்லை போட்டுட்டு வந்து உன் டியூசன் செண்டருக்குள்ளே வந்துரப் போறாரு கேப்டன் சாக்கிரத.
ReplyDeleteசர்த்தான் வாத்தியாரே!
ReplyDeleteஉங்கள் வலைதளத்தை அழகுபடுத்த வேண்டுமா இந்த லிங்கை கிளிக் பண்ணுக http://www.bigmasstemplate.blogspot.in/
ReplyDelete