எனக்கு பிரதமராக வேண்டும் என்ற ஆசை இல்லை. கட்சி பணியாற்றவே விரும்புகிறேன்' என, நிதியமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளது, சிவகங்கைத் தொகுதி மக்களுக்கு மிகுந்த மன வருத்தத்தை அளித்திருக்கும்(?).
சிவகங்கை லோக்சபா தொகுதி தான், சிதம்பரத்தை, பார்லிமென்டில் அமைச்சராகவும், அறிவு மேதையாகவும் ஆக்கி அழகு பார்த்து, ஏணியாகவும், தோணியாகவும் தொண்டாற்றியது. தேர்தல் களத்தில், நீண்ட காலமாக இத்தொகுதியில் கண்ணை மூடி ஆதரித்து, வெற்றி பெறச் செய்துள்ளோம்.
கடந்த, 1988 அக்., 28ம் தேதி, அப்போதைய பிரதமர் ராஜிவ், கிராபைட் திட்டத்தை, சிவகங்கையில் துவக்கி வைத்தார். சிறு தொழில் துவங்க வாய்ப்பு உண்டு. கிராபைட் மூலம், பென்சில் முதல், விமானம் வரை தயாரிக்கலாம். விமானம் கட்டும் தொழிற்சாலை கூட, சிவகங்கையில் துவக்கப்படலாம். இத்திட்டத்தால், சிவகங்கை வளர்ச்சி பெற்ற மாவட்டமாக மாறும்' என்று, ராஜிவ் பேசினார்.ஆனால், இன்று வரை, அது வறண்டு போன மாவட்டமாகத் தான், வதங்கிக் கொண்டிருக்கிறது.
சிவகங்கை கிராபைட் தொழிற்சாலை துவக்கப்படாததற்கு, பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.இத்திட்டம் நிறைவேற்ற முடியாத ஒன்று என்று, 1988ம் ஆண்டிலிருந்து, இன்று வரை, 25 ஆண்டுகளாக, எதிர்ப்புப் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. இத்திட்டமும், கங்கை - காவிரி இணைப்புப் போல் கருகி, காற்றில் கரைந்து விடுமா?
ராஜிவ் உருவாக்கிய திட்டம் நிறைவேற, சோனியா முழு முயற்சி மேற்கொள்ள வேண்டும். இதற்கு நிதியமைச்சர் துணையாக இருப்பார் என்று நம்புகிறோம். நான், சிவகங்கை என்ற கண்ணாடி வழியாக, இந்தியாவைப் பார்க்கப் போகிறேன் என்று, சிவகங்கையில் நடந்த ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தில், சிதம்பரம் முழங்கியது, சிவகங்கை மக்களின் காதுகளில் தேனாய், அமுதாய் இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
சிவகங்கைத் தொகுதியை, இந்தியாவே, ஏன், உலகமே கண்டு பிரமிப்பும், பெருமிதமும் அடையும் ஒரு தொகுதியாக மாற்றும் வரை, உங்களது சேவை எங்களுக்குத் தேவை என்று வஞ்சப் புகழ்ச்சியாக சொல்லுகிறார்கள் சிவகங்கை தொகுதி வாக்காளர்கள்.
சிதம்பர ரகசியமோ ?
ரகசியங்கள் வெளிப்பட்டால்... அவ்வளவுதான்
ReplyDeleteஅவர் ஜெய்தார்ந்னு சொல்லாதின்க்க ... ஜெய்க்க வைக்கப்பட்டார்
ReplyDeleteபுண்ணியவான் கால் வச்சு இடம் புல்லு கூட முளைக்க மாட்டுது
ReplyDeleteதேர்தல் வந்தால் இந்த புண்ணியவானின்
ReplyDeleteகனவு தெரியப் போகிறது