Tamilus

The best Tamil Aggregator | Tamilus

5/22/2013

இதில் பெண்களுக்கும் பங்கு உண்டா?




நாட்டில், பயங்கரவாதம், கொலை, கற்பழிப்பு போன்ற வன்கொடுமைகள் பெருகி வருவது, மிகுந்த வேதனையளிக்கிறது. பாலியல் கொடுமைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென்று, பிரதமர் உட்பட அனைத்து தரப்பினரும் கூறி வருகின்றனர்.

இது, தனிநபர் ஒழுக்கம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், பாலியல் கொடுமைகளை பிரசாரத்தின் மூலம் தடுக்கவோ, ஒழிக்கவோ முடியாது.ஆயுள் தண்டனை, மரண தண்டனை போன்ற கடுமையான தண்டனைகள் மூலம், சட்டத்தினாலேயே கூட தடுத்து நிறுத்த முடியாத, இது போன்ற குற்றவாளிகளை பிரசாரத்தினாலும், போராட்டத்தினாலும் எவ்வாறு தடுக்க முடியும்?

நம் நாட்டில் சாதாரணமாக, ஒரு குற்றம் நடந்து, அந்த வழக்கின் விசாரணை முடிந்து, இறுதித் தீர்ப்பு வெளியாகும் போது, கிட்டத்தட்ட ஏழு, எட்டு ஆண்டுகள் முடிந்திருக்கும்.சில வழக்குகளில் மரண தண்டனை விதிக்கப்பட்டும், அதை நிறைவேற்றுவதில், அதற்கு பின் நீண்ட கால தாமதம் ஏற்படுகிறது.

சில வழக்குகளில், குற்றவாளிகள் பாதி தண்டனையை, விசாரணைக் காலத்திலேயே அனுபவித்து விடுவது உண்டு. இறுதியில், நிரபராதி என்று அவர் விடுவிக்கப்பட்டால், தேவையில்லாமல் ஒரு நிரபராதி சிறைவாசம் செய்து, மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும்.

வழக்கின் தீர்ப்பு வெளியாக, நீண்ட கால தாமதம் ஏற்படும்போது, அந்தக் குற்றத்தின் தீவிரம் நீர்த்துப் போவதுடன், மக்களும் அந்த சம்பவத்தை மறந்து விடுவர்.'தாமதித்துக் கிடைக்கும் நீதி, மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம்' என்று சொல்வதுண்டு. 

சில மாதங்களுக்கு முன், கேரளாவில் உள்ள ஒரு நீதிமன்றத்தில், ஒரு வழக்கின் குற்றப் பத்திரிகை, குற்றம் நடந்து மூன்று மாதங்களில் தாக்கல் செய்யப்பட்ட நற்செய்தி வெளியாகியிருந்தது. இன்று, பெருகி வரும் குற்றங்கள் குறைவதற்கு ஒரே வழி, பாலியல் மற்றும் கொலைக் குற்றங்கள், தனி நீதி மன்றத்தில் விசாரிக்கப்பட்டு, மூன்று மாதங்களில் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதே. அவ்வாறு செய்தால், குற்றம் செய்ய முனைவோர், ஓரளவு பயப்படுவர். நிரபராதிகள் அனாவசியமாகத் தண்டிக்கப்படுவதும் தவிர்க்கப்படும்.

கற்பழிப்பு - தீர்வுதான் என்ன? முதலில் இந்த தலைப்புதான் வைத்தேன்.



8 comments:

  1. சுயநலம், பணத்தாசை... இப்படி எழுதிக் கொண்டே போகலாம்...

    ReplyDelete
  2. ஒரே வழி, பாலியல் மற்றும் கொலைக் குற்றங்கள், தனி நீதி மன்றத்தில் விசாரிக்கப்பட்டு, மூன்று மாதங்களில் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்//உண்மைதான் நீதிபதியையும் பெண்கள் அடங்கிய குழுவாகவும் இருக்கவேண்டும் அப்போதுதான் சரியான தீர்ப்பு கிடைக்கும்

    ReplyDelete
  3. தாமதமாகும் தீர்ப்புகளும், கேடு கெட்ட கல்வி முறையும்தான் இவ்வகை குற்றங்களுக்கு காரணம் என்று நான் நினைக்கிறேன்.

    ReplyDelete
  4. பல பேர் பார்க்கின்ற மாதிரி நடுத் தெருவில் வைத்து மக்களால்
    கொடுக்கப்படும் தண்டணை தான் இதற்கொரு சரியான தீர்வாக
    இருக்க முடியும் என்பது எனது கருத்து சகோதரரே :( மிக்க நன்றி பகிர்வுக்கு .

    ReplyDelete
  5. தாமதமான தீர்ப்பு தான் குற்றங்கள் பெருக காரணம் என்பதே என் கருத்தும்.

    ReplyDelete
  6. //இன்று, பெருகி வரும் குற்றங்கள் குறைவதற்கு ஒரே வழி, பாலியல் மற்றும் கொலைக் குற்றங்கள், தனி நீதி மன்றத்தில் விசாரிக்கப்பட்டு, மூன்று மாதங்களில் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதே.//

    வழி மொழிகிறேன் ஆசிரியரே

    ReplyDelete
  7. தனி மனித ஒழுக்கம் என்பதை ஒவ்வொரு மனிதரும் கடை பிடிக்காத வரை இக்குற்றங்கள் குறைய வழியில்லை! சட்டமோ , காவல் துறையோ , நீதிமன்றமோ இதனை ஒழிக்கயிலாது!

    ReplyDelete
  8. ஆணுக்கும் பெண்ணுக்கும் தனி மனித ஒழுக்கம் வேண்டும். மீறுவது மட்டுமல்ல.. மீற தூண்டும் (அ)நாகரீகங்களும் பாலியல் வன்முறைக்கு வழி வகுக்கும். அளவுக்கு மீறிய வேகம் விபத்தை தரும். அளவு கடந்த (அ)நாகரீகங்கள் அழிவை தரும். அதனை உணரா பெண்களின் குரல் சாதாரணமானவனையும் நடுநிலையானவனையும் பெண்களுக்கு எதிராக மாத்தி யோசிக்க வைக்கிறது.

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"