Tamilus

The best Tamil Aggregator | Tamilus

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

1/31/2011

என்னடா உலகமிது...

கிழிந்த  சட்டையுடன் துணிக்கடைக்கு போனேன்....! ஒரு சட்டையை காட்டியவன்மற்றொன்றை காட்டமேலும்,கீழும் பார்த்தான்..! பட்டு சட்டை போட்டவன்கைக்குட்டை கேட்டான்மலைபோல் குவித்துகாட்டினான் அவனுக்கு...! நான் எடுத்து வந்தேன்அவன் மறுத்து சென்றான்....

1/29/2011

தமிழன் என்று சொல்லடா.. தலை குனிந்து நில்லடா!?

நான் தமிழன் என்றும், அதே சமயம் இந்தியன் என்றும் சொல்லி கொள்வதை பெருமையாகவே நினைக்கிறேன். ஆனால், இனி அதற்காக வெட்கப்பட வேண்டும் போலிருக்கிறது. இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில், மத்திய அரசின் சூழ்நிலையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இந்தியாவை சுற்றிய அனைத்து அண்டை நாடுகளும் நம்மிடம் கருத்து வேறுபாடு கொண்டிருக்க, யாரையும் பகைத்துக்கொள்ள முடியாத நிலைமை.ஒரு எதிரியை உருவாக்குவது பிரச்னை இல்லை. ஆனால், அந்த எதிரியும் நம் இன்னொரு எதிரியும் கூட்டு...

1/28/2011

"மிஸ்டர் கிளீன்' - உண்மையா ? Mr., பிரதமர்.

 "மிஸ்டர் கிளீன்' -ன்னு உங்களை சொல்றாங்க அது உண்மையா ? Mr., பிரதமர்ஜெர்மனியிலும், சுவிட்சர்லாந்திலும், வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கறுப்புப்பணம் அல்ல... இந்திய நாட்டைக் கொள்ளையடித்து, தேசத்துரோகம் செய்திருக்கும் சொத்துக்கள்.  இதை வெளியிட மத்திய அரசு ஏன் தயக்கம் காட்ட வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் கொடுத்திருக்கும் சாட்டையடி, "சுளீர்' என இருந்திருக்கும். நம் அரசியல்வாதிகள் எத்தனை பேர் யோக்கியர்களாக இருக்கின்றனர் என்பதை, இந்தக்...

1/26/2011

சலுகையா அல்லது சமாதியா?

ஆடைகளுக்குப் போட்டியாக தினம் ஒரு மாடலில் கைகளை அலங்கரிக்கும் அந்தஸ்தை செல்போன்கள் பெற்றுவிட்டன. மனிதர்கள் வசிக்கும் தொலைவைச் சுருக்கியதுடன், முகங்களைக் கூட பத்து இலக்க எண்களாக இவை மாற்றிவிட்டன என்பதே உண்மை.  மனிதர்களின் அனைத்து அடிப்படைத் தேவைகளின் விலையும் ஏறுவரிசையில் இருக்கும் நிலையில், தொலைத்தொடர்பு சேவைக் கட்டணங்கள் மட்டுமே இறங்கு வரிசைக்கு இடம்பெயர்ந்துள்ளன.  பொதுவாக செல்போன் சேவையைப் பயன்படுத்துவோர் தங்கள் நிறுவனங்களைச் சேர்ந்த...

1/25/2011

என்னதது, சின்னபுள்ளதனமா இருக்கே!!!

"2020ல், இந்தியா வல்லரசு நாடாக உயர வேண்டும்” என, அறிஞர்களும், ஆன்றோர்களும், இளைய தலைமுறையும் கனவு கண்டு, அதற்காக கடுமையாக உழைத்து வருகின்றனர். அதற்கு முன்பே, 2010ல் நம் அரசியல்வாதிகளும், அரசுத்துறை மேல் அதிகாரிகளும், தொழிலதிபர்களும், இந்தியாவை ஊழல் வல்லரசாக நிலை நிறுத்தி விட்டனர்.  இந்திய மக்கள் தொகையில், 10 சதவீதத்திற்கும் குறைவாக உள்ள இவர்கள், 120 கோடி மக்களின் தரத்தை, உலகளவில் அதலபாதாளத்திற்கு இறக்கி விட்டனர். உயர்மட்ட குழுக்கள் கூடி, நாள்...

1/24/2011

அட.. சீ... மானங்கெட்டவனே..

டஜன் பத்து  ரூபாய் கூவி கூவி  அழைத்தான் தள்ளுவண்டிக்காரன்....! ஏழு ரூபாய் வீதம் இரண்டு டஜன் கொடு பேரம்பேசினேன் அவனிடம்....! அரை மணிநேரம் வாதாடினேன் - இறுதியில்  இரண்டு டஜன்  பதினைந்து ரூபாய் என பரிமாறிக்கொள்ளப்பட்டது பணமும்.... பொருளும்... பீடியை எடுத்து இயல்பாகத்தான்  துப்பினான்... என்றாலும் எனக்கு  உறுத்திக் கொண்டிருக்கிறது. எதிர் கடையில் குளுகுளு காற்றுவாங்கி பிரிதிபளிக்கும் கண்ணாடி  கூண்டுக்குள் திருப்தி...

நீதிமன்றமா ? கட்ட பஞ்சாயத்தா ? வெட்கக்கேடு

நீதிமன்றங்களின், குறிப்பாகக் கூறவேண்டுமானால் நீதித்துறையுடன் தொடர்புடையவர்களின் கருத்துகள் விவாதப் பொருளாகி வருவது வேதனைக்குரிய ஒன்று. நீதிபதிகளே இப்படியா, நீதித்துறையே இப்படித்தானா என்று சராசரி இந்தியன் நம்பிக்கை இழந்துவிட்டால் அதன் விளைவுகள் இந்திய சுதந்திரத்தின், மக்களாட்சி அமைப்பின் அடித்தளத்தையே ஆட்டம்காண வைத்துவிடுமே என்பதுதான் நமது அச்சத்துக்குக் காரணம். கடந்த மாதம் உச்ச நீதிமன்றத்துக்கு வந்த வழக்கு ஒன்றின் விசாரணையின்போது நீதிபதி மார்க்கண்டேய...

1/22/2011

ஜெயலலிதா, விஜயகாந்த் எம்.எல்.ஏ., பதவி பறித்தால் என்ன ?

மக்கள் பிரச்னைகளை, தொகுதி பிரச்னைகளை எடுத்து வைக்கும் இடமான சட்டசபைக்கு எதிர்க்கட்சித் தலைவரான ஜெயலலிதா கடந்த ஓராண்டாக வரவில்லை. அதேபோல, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தும் சட்டசபைக்கு வராமல் புறக்கணித்து வருகிறார்.   ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றாக இருக்கக்கூடிய சட்டசபை, மக்கள் மன்றமாக விளங்கி வருகிறது. தன்னை தேர்ந்தெடுத்த தொகுதி பிரச்னைகளில் துவங்கி, அரசின் ஒவ்வொரு முடிவுகளையும் கண்காணித்து, அவற்றிற்கு ஒப்புதல் கொடுக்கும் பொறுப்பு...

பிளஸ் 2 படிக்கும் மாணவி

பிளஸ் 2 படிக்கும் மாணவி ஒருவர், அரசு மருத்துவமனை கழிவறையில் குழந்தையை பெற்றெடுத்திருப்பது, நம் இளைய தலைமுறை சீரழிந்து வருவதற்கு, ஒரு சிறிய எடுத்துக்காட்டு. இன்று, தவறான செக்ஸ் கலாசாரம், இந்த அளவுக்கு சிறுவர்களிடம் பரவியுள்ளதற்கு முக்கியக் காரணம்,  சமீபகாலங்களாக தமிழகத்தில் வெளிவரும் திரைப்படங்களும், தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களின் காட்சிகளும் தான்.பள்ளிக் குழந்தைகளே காதலிப்பது போன்ற காட்சிகள் வருவதும், காதலர்களுக்கு தூது போக, பள்ளிக்...

1/21/2011

அன்புள்ள வாக்காள பெருமக்களே...

  அன்புள்ள வாக்காள பெருமக்களே... நான் உங்கள் வேட்பாளர், நான் உங்கள் ஊரின் வேட்பாளர்... நீங்கள் என்னை தோ்ந்தெடுத்தால், நான், ஜாதிகளை ஒழிப்பேன், விண்ணப்பங்களில்,இருக்கும்,ஜாதிக்கான இடமே இல்லாமல்,செய்து விடுவேன்.. ஜாதி கட்சிகளையும்,ஒழித்துவிடுவேன்....ஜாதிகளுக்கான,இடஒதுகீட்டையும்,அழித்துவிடுவேன்.... எனவே....ஜாதிகள் இல்லாத, சமுதாயத்தை, அமைக்க,எனக்கே ஓட்டு போடுங்கள். மறக்காதீர், மறந்தும்  இருந்துவிடாதீர்...நான் உங்கள் ஜாதிக்காரன்!!!? (அந்த...

1/20/2011

திரு சிதம்பரத்திற்கு ஒரு கேள்வி?

பொது வாழ்வில் ஈடுபட்ட அன்றைய தலைவர்கள் காமராஜர், கக்கன் ஆகியோரை நினைத்து பார்க்கும்போது, இன்றைய பொது வாழ்வில் ஈடுபட்டிருக்கும் அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள், தங்கள் தகுதிக்கு மேல், மிகுந்த எதிர்பார்ப்புகளை கொண்டிருக்கின்றனர்.  அன்றைய அரசியல் தலைவர்கள், தங்களின் வாழ்க்கையை, மக்களோடு மக்களாக பகிர்ந்து வாழ்ந்தனர். அதனால்தான், அவர்களால் மக்களுக்கு தூய ஆட்சியை தர முடிந்தது. எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, தங்கள் சேவையை செய்தனர். அதனால், இன்று...

தமிழக முதல்வர் ஐயா அவர்களுக்கு !!!

தமிழன் தன்மானம் இழந்து பல ஆண்டுகளாகி விட்டது. எதை இலவசமாக கொடுத்தாலும், அதை கூச்சமின்றி வாங்க பழக்கப்பட்டு விட்டான். அதனால் தான், தொழிலுக்காக வாங்கிய வங்கி கடனையும், வட்டியுடன் தள்ளுபடி செய்யும் அரசுக்கு ஓட்டளித்தான். இலவச வேட்டி - சேலைகள், சாப்பாட்டிற்கு உகந்ததோ, இல்லையோ, இலவச ஒரு ரூபாய் அரிசி; அதை பொங்கி சாப்பிட இலவச சிலிண்டர், காஸ் அடுப்பு. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் பார்த்து மகிழ, இலவச கலர், "டிவி...' வேறு, என்ன வேண்டும் தமிழனுக்கு? "உழைத்து,...

1/19/2011

பிறப்பு முதல் இறப்பு வரை - உதவும் இந்திய மருத்துவம்

கருவை வயிற்றில் சுமக்கும் பெண்கள் நல்ல மனநிலையில் இருக்க வேண்டும். இவர்களுக்குக் கவலையோ, அச்ச உணர்வோ இருக்க கூடாது. இவைகளைப் போக்கி மகிழ்ச்சியான, எதையும் தாங்கும் சூழ்நிலையில் இருக்க வைக்க வேண்டும்.  மேலும் 7-வது மாத மருந்துகள் குழந்தையின் நாடித்துடிப்பு, உஷ்ணநிலை இருதய வளர்ச்சி, மூளை வளர்ச்சி, இருதய பலம் ஆகியவற்றைத் தடுகின்றது.    இடையில் உண்டாகும் பிரச்சனைகள்    இன்று சிசுவின் துடிப்பை, அசைவை அறிய ஸ்கேன் செய்து...

2010 ஊழல் ஆண்டு - 2011 தண்டனை ஆண்டு

முடிந்துபோன 2010-ம் ஆண்டுக்கு இந்திய ஊடகங்கள் வைத்த பொதுப்பெயர் "ஊழல்' ஆண்டு. இந்தியாவில் எந்த ஆண்டில்தான் ஊழல் இல்லாமல் இருந்தது? ...

1/18/2011

பேஸ்புக்கில் பழக்கமான சிறுமியை கொலை செய்த கொடூரம்

லிதுவேனியா : லிதுவேனியாவில் 14 வயது சிறுவன் ஒருவன் பேஸ்புக்கில் பழக்கமான சிறுமியை கொலை செய்த கொடூரம் நடந்துள்ளது. பேஸ்புக்கில் அறிமுகமான 13 வயது சிறுமியை , நேரில் வரவழைத்துக் கொலை செய்யதுள்ளது அம்பலமாகியுள்ளது. போலீசாரிடம் அந்தச்சிறுவன் குற்றத்தை ஒப்புக்கொண்டான். அந்தச் சிறுவனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. ...

காஷ்மீர் இந்தியாவின் ஒரு மாநிலம் தானா ? ஒரு சந்தேகம்

குடியரசு தினத்தன்று, காஷ்மீர் தலைநகரான ஸ்ரீநகரில், இந்திய தேசியக்கொடியை ஏற்றப்போவதாக, பா.ஜ., அறிவித்துள்ளது.  இதைக் கேள்விப்பட்ட காஷ்மீர் மாநிலத்தின் முதல்வர் ஒமர் அப்துல்லா, "தேசியக்கொடியை காஷ்மீரில் ஏற்றினால், வன்முறை வெடிக்கும்.&nbs...

1/17/2011

இறுதி இந்திய உலகக் கோப்பை அணி

உலகக் கோப்பை வெல்லப் போகும் அணி. 1. தோணி ,2. சச்சின்,3. சேவாக்,4. காம்பிர்,5. யுவரா...

ஜெயசூர்யாவை சாதனையை முந்தும் சச்சின்

சச்சின் டெண்டுல்கரின் சாதனை பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக ஜோகனஸ்பர்க்கில்  நடந்த 2வது ஒருநாள் போட்டி சச்சினின் 444 போட்டியாகும்.&nb...

1/16/2011

இலங்கையில் புறநகர் ரயில்சேவை - திருவள்ளூரில் சோதனை ஓட்டம்

இலங்கையில் புறநகர் மின்சேவை ரயில்களுக்கான 96 ரயில்களை பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை (ஐ.சி.எஃப்) தயாரித்து வருகிறது.  இதில் முதலாவது ரயில் தயாரிக்கப்பட்டு திருவள்ளூரில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.  இலங்கையில் புறநகர் ரயில் சேவைக்கான "டீசல், எலக்ட்ரீக் மல்டிபில் யூனிட்' (டி.இ.எம்.யு) ரயில்களை பெரம்பூர் ரயில்பெட்டி தொழிற்சாலை பிரத்யேகமாக நவீன தொழில்நுட்ப உதவியுடன் வடிவமைத்துள்ளது.  ரூ. 105 கோடி மதிப்பீட்டில் இந்த ரயில்களுக்கான...

1/15/2011

அதிமுக - தேமுதிக கூட்டணி CHO

சென்னை மியூசிக் அகாதெமி அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற துக்ளக் வார இதழின் 41-வது ஆண்டு விழாவில் வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்து துக்ளக் வார இதழின் ஆசிரியர் சோ ராமசாமி பேசியது:   "நாட்டில் நெருக்கடி நிலை அமலில் இருந்தபோது, ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டுமானால் இந்திரா காந்தியைத் தோற்கடிக்க வேண்டும் என்ற உணர்வு இருந்தது. அதுபோன்ற நிலை இப்போது தமிழகத்தில் உள்ளது. வரும் பேரவைத் தேர்தலில் திமுகவைத் தோற்கடித்தால்தான் நாட்டையே காப்பாற்ற...

1/13/2011

ஊழல் என்று சொல்லாதே திருட்டு என்று சொல்.!!!

 ஊழல் என்று சொல்லாதே திருட்டு என்று சொல்.!!! ஒரு சராசரி குடிமகன், மற்றொருவருடைய பொருளை, அவருக்கு தெரியாமல் அபகரித்தால், அதை திருட்டு என்கிறோம்.  ஒருவரிடம் பணமோ, பொருளோ வாங்கி ஏமாற்றினால், மோசடி என்கிறோம். இவை இரண்டும், சிறிய அளவில் நடப்பவை.ஆனால், மக்கள் வரிப்பணம் கோடிக்கணக்கில், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளால் அபகரிக்கப்படும் போதும், நாட்டின் இயற்கை வளம் சுரண்டப்படும் போதும், நாட்டின் வருமானத்தை இழக்க செய்யும் நடவடிக்கைகளையும் நாம்,...

1/12/2011

இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?

இப்படை தோற்கின் எப்படை வெல்லும்? ஜனவரி 12: இந்தியா - தேசிய இளைஞர் நாள்                         1863 - சுவாமி விவேகானந்தர் பிறப்பு. இந்தியா மனிதவளம் மிகுந்த நாடு. உலக அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக மக்கள்தொகை இருந்தாலும் விரைவில் அதையும் விஞ்சிவிடும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நாட்டின் மக்கள்தொகையில் பாதிக்குப் பாதி...

1/10/2011

மனம் எனும் சாக்கடை

மனம்  எனும் சாக்கடைமற்றவர் மனதிற்குள் நுழைய முயல்பவனே! உன் மனதிற்குள் நீ,நுழைந்ததுண்டா ...? உன் மனதின், இருண்ட அறைகளுக்கும், அங்கே உலவும் பேய்களுக்கும்,நீ, பயந்ததுண்டா...? உன் மனம் உன் அசிங்கங்களின்குப்பை கூடையாகஇருக்கிறதல்லவா...? உன் மனம் உன் இரகசியமான ஆசைகளை ஒளித்து வைக்கும் அந்தரங்க அறையாகஇருக்கிறதல்லவா...?   உன் மனம் அந்த ஆசைகளால் நீலப்படம் தயாரித்து உன் கனவு என்றஅந்தரங்க அரங்கத்தில்போட்டுப் பார்த்து,இரசிக்கிறதல்லவா...? அந்த படத்தில்...