Tamilus

The best Tamil Aggregator | Tamilus

10/26/2013

ஓட்டுப் பொறுக்கிகளும்... அரசியல் வியாதிகளும்..


இந்தியா அன்பு, அஹிம்சை, அமைதி, தர்மம், சமாதானம், பொறுமை, சகிப்புத்தன்மை இவற்றையே வாழ்வின் ஆதாரமாக கொண்டு, இறைவனை இயற்கையிடம் கண்டு, இயற்கையோடு இணைந்து வாழும் இந்துக்கள் நிறைந்த , சனாதன தர்மம் மிகுந்த ஒரு நாடு.

இங்கு ஜிகாத் என்ற பெயரில் மனித வேட்டையாடும் மனித மிருகங்களுக்கு துணிச்சல் வர காரணம், ஒட்டு பொறுக்கிகளான இந்த மானங்கெட்ட அரசியல்வாதிகள்தான். 

வோட்டு வேட்டையாடி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி சொத்து சேர்த்து, தானும் தன் குடும்பமும் சுகபோகமாக வாழ, மத சார்பின்மை என்ற பெயரில் மக்களை பிரித்து, அவர்களிடையே பிளவை உண்டாக்கியதன் விளைவுதான் இத்தனை தீவிரவாத கர்மங்களும். 

அவரவர் மதத்தில் நம்பிக்கை கொண்டு, அவரவர் கடவுளை வணங்கும்போது சிறுபான்மை பெரும்பான்மை என்பதற்கு அங்கே இடமே இல்லை.

அனைவருக்கும் கடவுள் ஒருவரே என்பது இந்த மானங்கெட்ட அரசியல் வியாதிகளுக்குதான் தெரிய வில்லை என்றால் இந்த மத தலைவர்களுக்குமா தெரியவில்லை. அவர்கள் மக்களிடையே மத நல்லிணக்கத்தை, முறையாக இளைங்கர்களிடையே போதித்திருந்தால் இப்படி நடக்குமா? 

இந்த உலகத்திற்கு எப்படி வந்தோம். வாழ்வு முடிந்தவுடன் எங்கே செல்கிறோம் என்று யாராவது நிரூபிக்க முடியுமா? இனியாவது இந்த மத சார்பின்மை என்ற பெயரில், மக்களிடம் ஒட்டு பிச்சை கேட்கும் அரசியல்வியாதிகளை புறந்தள்ளுங்கள். 

பல மொழி கலாச்சாரம், பண்பாடு இவற்றிடையே ஒற்றுமையாக வாழும் இந்தியாவில் எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓரினம், நாம் அனைவரும் இந்தியர்கள் என்று உணர்வு கொண்டால் அங்கே வேற்றுமைக்கே இடம் இல்லை. 

வாழ்க்கை என்பது நீர்க்குமிழி போல. எப்போது வேண்டுமென்றாலும் யாருக்கும் எதுவும் நடக்கலாம். ஆனால் ஒருவர் உயிரை இன்னொருவர் பறிக்க யாருக்கும் எந்த மதத்தினருக்கும் உரிமை இல்லை. 

'ஜெய் ஹிந்த்'.

கார்டூன் மதன் மின்மலர்.

9 comments:

  1. அவரவர் உணர வேண்டும் கருத்துக்கள்...

    வாழ்க்கை என்பது நீர்க்குமிழி போல...

    ReplyDelete
  2. ஓட்டுப் பொறுக்கிகள் அரசியலில் மதத்தை கலந்ததால் பிடித்த சனியனை விரட்டும் மந்திரம் மக்களிடம் தான் உள்ளது !உங்கள் கருத்து நன்று !
    த.ம 3

    ReplyDelete
  3. பல மொழி கலாச்சாரம், பண்பாடு இவற்றிடையே ஒற்றுமையாக வாழும் இந்தியாவில் எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓரினம், நாம் அனைவரும் இந்தியர்கள் என்று உணர்வு கொண்டால் அங்கே வேற்றுமைக்கே இடம் இல்லை//

    நூத்துல ஒரு வார்த்தை. இந்தியர்கள் என்ற உணர்வுதான் மேலோங்கி நிற்க வேண்டும். மதத்தால் மட்டுமல்ல மொழியாலும் வேறுபட்டு நிற்பதை தவிர்க்க வேண்டும்.

    ReplyDelete
  4. வணக்கம்
    வாழ்க்கை என்பது நீர்க்குமிழி போல. எப்போது வேண்டுமென்றாலும் யாருக்கும் எதுவும் நடக்கலாம். ஆனால் ஒருவர் உயிரை இன்னொருவர் பறிக்க யாருக்கும் எந்த மதத்தினருக்கும் உரிமை இல்லை.

    அருமையாக பதிவில் சொன்னிர்கள் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. மதவாதமும் ஜாதியயுமும் அரசியலின் பிடிவாதங்கள்! நல்லதொரு பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  6. /// வோட்டு வேட்டையாடி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி சொத்து சேர்த்து, தானும் தன் குடும்பமும் சுகபோகமாக வாழ, மத சார்பின்மை என்ற பெயரில் மக்களை பிரித்து, அவர்களிடையே பிளவை உண்டாக்கியதன் விளைவுதான் இத்தனை தீவிரவாத கர்மங்களும். ///

    இந்த அமைப்பு மொத்தமும் இப்படி இருந்தால் மட்டுமே இங்கு அரசியல் செய்பவர்களுக்கு வசதியான ஒன்று.

    ReplyDelete
  7. குட்டையை குழப்பினால் தான் மீன் பிடிக்க முடியும்.

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"