Ads 468x60px

12/28/2010

நாம் இந்தியர்களா?


இது  என்னுடைய 100 ஆவது பதிவு.

சுதந்திரப் போராட்ட காலங்களில், பதிவு செய்யப்பட்ட ஒரு குற்ற வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக சாட்சி சொல்வதற்கு, அப்போதைய இந்தியப் பிரதமர் நேரு, கோர்ட் கூண்டில் ஏறினார். அவருடன், இந்திய நாட்டின் முதல்  இந்திய கவர்னர் ஜெனரலான ராஜகோபாலாச்சாரியாரும் சாட்சி சொன்னார். இரு பெரும் தலைவர்கள் சாட்சி கூறினர் என்பதற்காக, குற்றம் சாட்டப்பட்டவரை கோர்ட் விடுதலை செய்து விடவில்லை

அவர் மேல் சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டதாக கருதி, அவருக்கு தண்டனை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் வெறும் கற்பனையல்ல... உண்மையில், நம் நாட்டில் நடந்த ஒரு வரலாற்று சான்று; கோர்ட்டின் மாண்பை பறைசாற்றும் சம்பவம். 

ஆனால், இன்று, நீதிபதிகளை மிரட்டும் அரசியல்வாதிகள், ஐகோர்ட் நீதிபதி சொன்ன புகாரை மறைக்கும் சுப்ரீம் கோர்ட் நீதிபதி, ஊழல் விசாரணைக்காக பார்லிமென்ட் கூட்டுக் குழுவை கூட்ட, சபையை முடக்கும் எதிர்க்கட்சிகள், "எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஊழல் இல்லையா?' எனக் கூறும் ஆளுங்கட்சிகள், 

அரசு உயரதிகாரிகளின் லஞ்சம் என, இந்நாட்டையே உலுக்கிக் கொண்டிருப்பவைகளை யார் கேட்பது? அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் இதனால் பயன் பெறுவதால், அவர்கள் இதைத் தட்டிக் கேட்பதற்கு வாய்ப்பில்லை. இவற்றை தட்டிக் கேட்கும் சகல தகுதிகளுடைய பொது மக்கள், இன்றைய விலைவாசி உயர்வால், ஒவ்வொரு பொழுதையும் கடத்த பாடுபடும் கஷ்டத்தில், திராணியற்று கிடக்கின்றனர். 
( நன்றி எஸ்.ரவீந்திரன், கோவை )

ஊழலின் அளவு பெரிதாக பெரிதாக, மக்களிடம் அது பற்றிய விழிப்புணர்வும் அதிகமாகிறது. இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரும், கல்வி அறிவு பெற்று, ஊழலுக்கும், லஞ்சத்திற்கும் எதிராக ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தப் போகும் காலம் வெகு தொலைவில் இல்லை.

படிச்சாச்சா.........?
அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....?
தமிழ்மணம், தமிழ்10 ,லோகோ இருக்கா ....?
புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...
புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க...
 
 
அனைவருக்கும் என் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

13 comments:

 1. வாழ்த்துக்கள். இந்த மாதம் மட்டும் 51 பதிவா? அடேங்கப்பா. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. 100 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள்.....கடுமையான ஸ்பீடா இருக்கீங்க...குட்....

  அருமையான பதிவு....ஓட்டும் போட்டாச்சு......

  ReplyDelete
 4. 100 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்... தொடர்ந்து பல பதிவுகளை எழுதி விழாவை சிறப்பியுங்கள்...

  ReplyDelete
 5. நூறுக்கு வாழ்த்துக்கள், இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள்........
  wish ur happy new year

  ReplyDelete
 7. ஐலோ..பாஸ்... உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"//

  உம்..கருத்தா...!!!


  ஹி..ஹி.. இருங்க..
  யோசனை பன்ணிப்பார்க்கிறேன்..
  உம்..
  ங்..

  ஆங்...

  புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. ஹி..ஹி ( ஏண்ணே.. புதுவருஷம் 2011-னுதானே...)

  ReplyDelete
 8. ஓ..ஓ.. கமென்ஸ் மாட்ரேஷன் இருக்கா...!!!

  அவ்....

  அப்ப..அப்பால வரேன்

  ReplyDelete
 9. பின்னூட்டம் கொடுத்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி..

  ReplyDelete
 10. @பட்டாபட்டி....

  ஹி..ஹி.. இன்னும் ஒரு கமென்ஸ் பாக்கியிருக்கு பிரதர்...

  சீக்கிரமா போடுங்க.. ஹி..ஹி

  ReplyDelete
 11. ஒரு சிறு திருத்தும் ராஜாஜி இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் கிடையாது, முதல் கவர்னர் ஜெனரல் மவுண்ட் பாட்டன்.

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"