Tamilus

The best Tamil Aggregator | Tamilus

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

6/10/2011

நம்பிக்கைகள் நம்பிக்கைகளாகவே இருந்ததில்லை எனக்குமட்டும்?!


நம்பிக்கைகளின்
நுனியில்
வாழ்க்கை
தொங்கிக் கொண்டிருக்கிறது .

சிதிலமடைந்த மனத்தின்
இருண்ட பொந்துகளில்
அலைந்து கொண்டிருக்கின்றன
சில நம்பிக்கைகள்

நாளை அவை
விபரீதக் கனவுகளாகி
ஓரிரவின் அமைதியை
விழுங்கலாம்.

பாழடைந்த கோவில்களின்
மயான மூலைகளில்
வௌவால்களாக தொங்கலாம்.

வேதாளங்கள் தொங்கும்
முருங்க மரங்களின்
வேர்களாகி
மண்ணில் புதையலாம்.

அவை சில வேலை
நிஜங்களாகலாம்.

சில வேலை
பொய்களாகலாம்.

நம்பிக்கைகள்
நம்பிக்கைகளாகவே
இருந்ததில்லை
எனக்குமட்டும்...!

6/09/2011

இது ஒரு காதல் க(வி)தை - 3 ( உண்மைச் சம்பவம்)


முதல் இரு பகுதிகளை படிக்க

சரிதான்
என் நம்பிக்கை
மீண்டும் ஒருமுறை
தோற்றுப் போனது !!?
என்றுதான்  நினைத்தேன்..

ஆனால் 
என் நம்பிக்கை
வீண்போகவில்ல.

உன் கண்கள் 
என்னையே 
குறி வைத்தன.

எனக்குள்
ரகசியப் புன்னகை
புரிந்து கொண்டேன்.

சில 
வினாடிக்குள்
என் அருகில்
நீ வந்தாய்.

இப்போதாவது 
கூறிவிடு
உன் முடிவை என்றேன்.

காதலனை 
தவிக்கவிடுவதில்
காதலிக்கு
ஓர் அற்ப சந்தோசம் 
என்றாய்.

மனதிற்குள்
மழைத்துளி பெய்தது போல் 
இருந்தது எனக்கு.

அன்றுமுதல்
ஏரிக்கரையும், ஆலமரமும்
நம்
மாலை நேர சந்திப்புகளின்
சின்னங்களாயிற்று!!!

ஒருநாள்  சந்திப்பில்...

கடற்கரை மணல்வெளி
நதிக்கரை புல்வெளி 
எது பிடிக்கும்? என்றாய்.

நான் சொன்னேன்,
மணல்வெளியும்
புல்வெளியும்
புரிந்து கொள்ள முடியாத
நான் மட்டும் 
புரிந்து கொண்ட
உன்னைப் பிடிக்கும் 
என்றேன்.

அப்போது 
வெட்கப்பட்டு
சிணுங்கிப் போனாய்.

நாட்கள் நகர்ந்துப் போனது...

அன்றொருநாள் 
அவசரமாய்  ஓடி வந்து
நீ சொன்ன 
செய்திகேட்டு
என் மூச்சு
நின்று போனது
ஒரு நிமிடம் ...!!!?

தொடரும்...

6/08/2011

ரஜினிக்காக கதையை மாற்றிய இயக்குனர்!?


உச்சத்தின் உடல்நிலை அனைவரையும் கலவரப்படுத்தியிருக்கிறது. (நம்மையும் கூட) குறிப்பாக அவரது ச‌ரித்திரப் படத்தின் இயக்குனரை. சகுனம் போன்ற மூட நம்பிக்கைகளை அவ்வளவாக நம்பாத இயக்குனரையும் இப்போது சென்டிமெண்ட் பயம் பிடித்தாட்டுகிறது.

ச‌ரித்திரப் படத்தில் உச்சத்துக்கு மூன்று வேடங்கள். இதில் ஒரு கதாபாத்திரம் இறந்துவிடுவதாக கதை அமைத்திருந்தார்களாம். உச்சம் வெளிநா‌ட்டுக்கு சிகிச்சைக்கு சென்ற பிறகு கதையை மாற்றியிருக்கிறார் இயக்குனர். அதாவது மூன்று கதாபாத்திரங்களும் உயிரோடு இருப்பது போல் கதை மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றத்துக்குப் பிறகுதான் உச்சத்தின் உடல்நலை தேறி வருகிறது என்று சொல்ல, அரண்டு போயிருக்கிறார் இயக்குனர். 

தலைவர்  பற்றிய செய்தி எனக்கு தெரிஞ்சத நண்பர்களுக்கு சொல்ல வேணாமா?

அரசியல்வாதிக்கு குடும்பம் இருக்கக்கூடாதா என்ன?


"யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்பது, கருணாநிதிக்கு மிகவும் பிடித்த, புறநானூற்றுப் பாடல் வரி. அதனால் தான் அதை, செம்மொழி மாநாட்டின் மையக் கருத்துப் பாடலின் முதல் வரியாக அமைத்தார். 

அந்த புறநானூற்றுப் பாடலின், இரண்டாவது வரி என்ன தெரியுமா... "தீதும் நன்றும் பிறர் தரவாரா' என்பது தான். அவரவர் வினைக்கு, அவரே பொறுப்பு. ஒருவருடைய செயலே, ஒருவரை உச்சியில் கொண்டு வைக்கிறது. அவருடைய செயலே தான், அவரை தலைக்குப்புற கீழே, அதல பாதாளத்திற்கு தள்ளி விடுகிறது. 

கனிமொழி எம்.பி., ஆனதும், சங்கமம் விழா நடத்தினதும் அப்படித் தான். இப்போது திகார் சிறையில், அறை எண் ஆறில் கைதியாக இருப்பதும் இப்படித்தான். 

அண்ணாதுரை எப்படி புகழ் பெற்றார், கனிமொழி எப்படி புகழ் பெற்றார்? கருணாநிதியின் மகள் என்ற தகுதி இல்லாதிருந்தால், நிரா ராடியா அவருடன் தொலைபேசியில் பேசி, அது பதிவாகி இருக்குமா? சுப்ரீம் கோர்ட்டில் சாட்சியம் ஆகி இருக்குமா? 

தேர்தலில் மக்கள் கொடுத்தது ஜனநாயக தண்டனை; சட்டப்படியான தண்டனை அல்ல. அது ஒரு பக்கம் காத்திருக்கிறது. ஸ்டாலின், அழகிரி, அவரின் மனைவி, கருணாநிதி என, குடும்பமே டில்லிக்கு படை எடுத்ததற்கு என்ன காரணம்? 

"ஆட்சித் தலைவனுக்கு, குடும்பமே இருக்கக் கூடாது' என அன்றே சொன்னார் சாக்ரடீஸ்.

இது ஒரு காதல் க(வி)தை - 2 ( உண்மைச் சம்பவம்)


இது  பகுதி - 2

ஒரு நாள் ...
ஒரு வாரம் ...
ஒரு மாதம் ...
முகம் காட்ட
மறுத்துவிட்டாய் !

மனதிற்குள் கலவரம்
நீ என்னை
வெறுக்கின்றாயா?
விரும்புகிறாயா?
உன்னிடமே
கேட்டு விட  தீர்மானம்
நிறைவேற்றிவிட்டேன்.

அன்று
உனக்கு முன்னால்
நீ போகும் பாதையை 
நான் 
ஆக்கிரமித்துக் கொண்டேன்.

அதோ வருகிறாய் 
உன் பெயரை உச்சரித்தவுடன்
திசை மாறி 
திரும்பிப் பார்த்தாய்.

அப்போதும் நீ 
பேசவில்லை
உன் உதடுகள்  தான் 
ஒரு புன்னகை 
புரிந்துவிட்டு போனது.

அதில் 
என்னையே மறந்துப் போனேன்
என்  காதலை கேட்கவா
ஞாபகம் இருக்கப்போகிறது?

மீண்டும் கலவரமானேன்!!!

அன்று
இரவு முழுவதும் 
விடியலுக்காகவே
விழித்திருந்தேன்!!!
ஒரு வழியாக 
விடிந்தது...!

மீண்டும் உன்முன் 
உதயமானேன்,
நீ  என்னை 
உதாசினப்படுத்தமாட்டாய் என்று !!!

சரிதான் 
என் நம்பிக்கை 
மீண்டும் ஒருமுறை 
தோற்றுப் போனது !!?

தொடரும்..

6/07/2011

சுட்டிக்காட்டுங்கள்..., குத்திக்காட்டாதீர்கள்..- சபாஷ் கலெக்டர் .




சேலம் மாவட்டத்திற்கு புதிய ஆட்சியராக பொதுப்பணித்துறை மாளிகையில் பொறுப்பேற்றுக்கொண்ட கொண்ட மகரபூஷனம், மேட்டூர் தண்ணீர் அணை திறப்புவிழா நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு மதியம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்.

வழக்கம் போலவே அதிகாரிகள் சால்வை, மாலை, பூங்கொத்து, எலுமிச்சம்பழம் என்று புதிய மாவட்ட ஆட்சியரை வரவேற்க காத்திருந்தனர். காரிலிருந்து இறங்கிய ஆட்சியர் எல்லோருக்கும் வணக்கம் மட்டும் சொல்லிவிட்டு அதிகாரிகள் கையில் வைத்திருந்த எதையும் வாங்காமல் தனது அறைக்கு சென்று விட்டார்.

பின்னர் பொதுமக்கள் குறைதீர்க்கும் நிகழ்சியில் ஆட்சியர் கலந்து கொண்டபோது, உள்ளூர் காங்கிரஸ் பிரமுகர் ஆக்ஸ்போர்டு ராமநாதன் ஒரு சால்வையுடன் ஆட்சியருக்கு பக்கத்தில் போக, அவருக்கு பின்னாலேயே போன சில பத்திரிகை புகைப்படக்காரர்களும் ராமநாதன் சால்வைபோடும் காட்சியை படமெடுக்க தயாராக இருந்ததை பார்த்து விட்ட ஆட்சியர் மகரபூசனம், சால்வையுடன் வந்த ராமநாதனை கையைகாட்டி சற்று தூரத்திலேய நிறுத்திவிட்டு, பொதுமக்கள் கலந்துகொள்ளும் இந்த கூட்டத்துக்கு இவரை யார் உள்ள விட்டது என்று பக்கத்தில் இருந்த அதிகாரிகளுக்கு அர்ச்சனை செய்யத் தொடங்கி விட்டார். அவசர அவசரமாக ஆக்ஸ் போர்டை வெளியேற்றினார்கள் அதிகாரிகள்.

பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது என் நிர்வாகத்தில் ஏதாவது குறைபாடுகள் இருந்ததால் சுட்டிக்காட்டுங்கள்... சரிசெய்து கொள்கிறேன், தயவு செய்து குத்திக்காட்டதீர்கள் என்றார். 

சபாஷ்  கலெக்டர்.

என்ன இருந்தாலும் முதல்வர் ஜே இப்படி செய்திருக்கக் கூடாது!!?


ஜே, ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க., ஆட்சி அமைய, தன் நாக்கை துண்டித்து காணிக்கை செலுத்திய பெண்மணிக்கு, அரசு வேலை மற்றும் பண உதவி செய்த ஜெயலலிதாவின் செயல், தவறான அணுகு முறை என்றே எனக்கு தோன்றுகிறது.

அரசு வேலை , பண உதவிகள் அளிப்பது போன்ற விஷயங்கள் இது போன்ற தவறான செயல்களை மற்றவர்கள் செய்ய ஊக்குவிப்பதாகும்.

அப்பெண்மணியை, மன நல மருத்துவ மனையில் சேர்த்து ஒரு மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற ஏற்பாடு செய்திருந்தால் அது சரியாக இருக்கும். இது மற்றவர்கள் இது போல செய்யாமல் தடுக்கும்.

இன்றைய அரசியல் தலைவர்கள் சிலர் தங்கள் அரசியல் வாழ்வு சரியும்போது , பல தொண்டர்கள் உயிர் விடுவதை , தங்கள் செல்வாக்கின் அளவு கோலாக காட்டிக் கொ(ல்)ள்வது மிகவும் வருந்தத்தக்கது.

இனியும் இதுபோல செயல்களை அரசியல்வாதிகள் ஊக்குவிக்காமல் இருப்பார்களா?

6/06/2011

காதல் செய்கிற நிலையிலா இருக்கிறேன்? சீமான் ஆவேசம்


இயக்குனர் சீமான், நடிகை விஜயலட்சுமி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் மட்டும் இல்லாது சினிமா வட்டாரத்திலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

நடிகை விஜயலட்சுமி போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில் சீமான் 3 ஆண்டுகளாக தன்னை காதலித்ததாகவும், திருமணம் செய்வதாக சொல்லி, நெருங்கி பழகியதாகவும், தற்போது தன்னை திருமணம் செய்ய மறுப்பதாகவும், இது தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் நடிகை விஜயலட்சுமி தெரிவித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் சீமான் மீது பெண்கள் வன்கொடுமை, நம்பிக்கை மோச‌டி, கற்பழிப்பு, திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியது என 6 பிரிவுகளின் கீழ் வலசரவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சீமானின் அரசியல் வளர்ச்சியை தடுப்பதற்காகவே அரசியல் ரீதியாக இந்த சதியை நடத்துகிறார்கள் என்றும் உலகளாவிய அளவில் சீமானுக்கு எழுந்திருக்கும் ஆதரவை சிதைக்க உளவுப் புள்ளிகள் நிகழ்த்தும் சதிதான் இது என்றும் சீமான் தரப்பில் சொல்லப்படுகிறது.

இது குறித்து சீமான் நேரில் விளக்கம் அளித்தால் தெளிவாக இருக்கும் என்று பலரும் எதிர்பார்த்தனர். இதனை அடுத்து ஒரு பத்திரிக்கைக்குப் பேட்டி அளித்திருக்கும் சீமான், காதல் செய்கிற நிலையிலா நான் இருக்கிறேன்? ஒரு வருடத்துக்கு மேல் சிறையில் இருந்துவிட்டு வெளியே வந்த எனக்கு ஈழ விவகாரங்களுக்கு போராடவும் ஈழப் படுகொலைகளை செய்தவர்களுக்கு எதிராக பரப்புரை செய்யவுமே நேரம் இல்லை.

படிக்கவும் தூங்கவும் நேரம் இல்லாத எனக்கு கண்டவர்களோடு டூயட் பாடுவது தான் வேலையா? ஏற்கெனவே இலங்கைப் புள்ளிகள் சிலரை தமிழகத்துக்கு அனுப்பி என்னை கொலை செய்ய முயற்சி நடந்தது. அதையே சட்டை செய்யாத நான் இந்த மாதிரி சின்னத்தனமான அவதூறுகளையா பொருட்படுத்துவேன்? யுத்தக் களத்தில் நின்றால் குண்டுகளையும் அரசியல் களத்தில் நின்றால் அவதூறுகளையும் எதிர்கொண்டு தான் ஆகவேண்டும்... என்று சீறுகிறார் சீமான்.

இது ஒரு காதல் க(வி)தை - 1 ( உண்மைச் சம்பவம்)



இது  ஒரு தொடர்க(வி)தை,  கவிதை வடிவில் உள்ள உண்மைக்  கதை..
கொஞ்சம் பொறுமை வேண்டும் இதைப் படிப்பதற்கு ....

இரவெல்லாம் விழித்ததில் 
பகலில்
சிவந்து போன கண்கள்..!

இளமையில் காதலித்ததால் 
முதுமையில்
சிந்திப்போன கண்ணீர் ...!

இரண்டும் 
என்காதலை
ஞாபகப்படுத்துகின்றன
என் தன லக்ஷ்மியை...!

புதைந்துப் போன 
நினைவுகளை
தோண்டி எடுக்கிறேன்...!

உன்னோடும் 
உன் நினைவோடும் 
பள்ளியில்
சுற்றித் திரிந்த 
என் அகராதியை 
புரட்டிப் பார்க்கிறேன்...!

பள்ளியில்  படிக்கும்
மாணவர்கள் நாம்
காலை முதல் 
மாலை வரை
வகுப்புகளில்
நம் முகங்கள் 
சந்தித்துக் கொண்டன ...!

ஒரு நாள் 
உன் தவறி விழுந்த
நோட்டுப் புத்தகத்தில் 
உன் பெயர் தான்
என்
முதல் கவிதைக்கு
முகவரி தந்தது...!

அன்றுதான் 
எனக்குள் என்னை 
அறிமுகப் படுத்தியது காதல்...!

அனுபவம் இல்லாத 
அனுபவத்திற்கு 
என் முனகல்களை எல்லாம் 
முடிச்சுப்போட்டு 
எழுதினேன் காகிதத்தில் 
அது உன் கைகளில் 
கடிதமாக...!

மறு நாள்
கண்களில்
காதலைத் தேக்கிக்கொண்டும்,
மனதில் ஆசைகளைச் 
சுமந்துக் கொண்டும்,
ஆவலோடு உன் வருகைக்காக 
காத்திருந்தேன்...!

ஏமாற்றம்... ஏமாற்றம்...!

- தொடரும் !!!

6/04/2011

நடிகர் சிரஞ்சீவியை காணவில்லை!? போலீசில் பரபரப்பு புகார்?




 
நடிகர் சிரஞ்சீவி 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரஜா ராஜ்ஜியம் என்ற கட்சியை தொடங்கினார். கடந்த தேர்தலில் அவர் திருப்பதி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

6 மாதங்களுக்கு முன்பு அவர் தனது கட்சியை காங்கிரசுடன் இணைப்பதாக அறிவித்தார். இதன் பிறகு சிரஞ்சீவி கடந்த 3 மாதங்களாக திருப்பதி தொகுதிக்கு வரவில்லை. இந்நிலையில் திருப்பதி கால்நடை மருத்துவ கல்லுரி மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

அவர்கள் தங்கள் தொகுதி எம்.எல்.ஏ.வான சிரஞ்சீவியை சந்தித்து தங்கள் கோரிக்கை பற்றி மனு கொடுக்க முடிவு செய்திருந்தனர். ஆனால் அவர் கடந்த 3 மாதங்களாக தொகுதி பக்கமே வராததால் ஆவேசம் அடைந்தனர்

இதையடுத்து அவர்கள் திருப்பதி கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு திரண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்த இன்ஸ்பெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில், எங்கள் தொகுதி எம்.எல்.ஏ.வான நடிகர் சிரஞ்சீவியை கடந்த 3 மாதங்களாக காணவில்லை. அவரை கண்டு பிடித்து தாரங்கள் என்று குறிப்பிட்டிருந்தனர்.

இதைப் பார்த்ததும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் மாணவர்களிடம், உங்கள் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து மாணவர்கள் திருப்பதி நகரம் முழுவதிலும், திருப்பதி எம்.எல்.ஏ. சிரஞ்சீவியை காணவில்லை. அவரை கண்டு பிடித்து கொடுத்தால் உரிய சன்மானம் வழங்கப்படும் என்ற வாசகங்கள் கொண்ட போஸ்டர்களை ஒட்டினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்தச்  செய்தியை படித்தபோது எனக்கு சிரிப்புத்தான் வந்தது ஏன் எனில் இதே நம்ம ஊர் என்றால் இதுவரை எத்தனை புகார்கள் சேர்ந்திருக்கும் என நினைக்கும் போது  வேறு என்ன வரும் சொல்லுங்கள் நண்பர்களே?