Tamilus

The best Tamil Aggregator | Tamilus

9/30/2011

மனிதர்கள் சிலர்...


காலமெல்லாம்
தங்களுடைய
ஆரோக்கியத்தை 
செலவழித்து
செல்வத்தை 
சேர்ப்பவர்கள்...


பின்னர்
அதே செல்வத்தை 
செலவழித்து
ஆரோக்கியத்தை 
மீட்கத் 
துடிப்பார்கள்...


நிகழ்காலத்தை 
கடந்தகால 
இழப்புகளிலும்,
எதிர்காலத்தை 
கவலைகளிலும்
செலவிடுபவர்கள் ...


வாழும் காலத்தில் 
சாகவேமாட்டோம் எனக்கறுதி
தோற்றம் காட்டுவார்கள்
இறந்த பின்னர் 
வாழ்ந்ததே தெரியாமல்
ஒழிந்து போவார்கள்.....


டிஸ்கி : இதை அப்படியே தொடருங்கள் நண்பர்களே பின்னூட்டங்கள் 
மூலமாக.....

26 comments:

  1. அருமையான சிந்தனை நண்பா..

    உண்ணும்போது கூட உண்ணுகிறோம் என்ற சிந்தனையின்றி ஏதாவது பேசிக்கொண்டோ..

    தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டோ உண்பர்களை என்ன செய்வது..

    எப்போதும் இவர்களின் சி்ந்தனையில் பணம் பணம் பணம் தான்.

    ReplyDelete
  2. தங்களை அன்புடன் விருந்துக்கு அழைக்கிறேன்..

    http://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_565.html

    ReplyDelete
  3. ////காலமெல்லாம்
    தங்களுடைய
    ஆரோக்கியத்தை
    செலவழித்து
    செல்வத்தை
    சேர்ப்பவர்கள்...


    பின்னர்
    அதே செல்வத்தை
    செலவழித்து
    ஆரோக்கியத்தை
    மீட்கத்
    துடிப்பார்கள்...
    /////

    எவ்வளவு பெரிய வாழ்க்கைத் தத்துவத்தை அழகாக புரியவைத்து இருக்கீங்க சூப்பர் பாஸ்

    ReplyDelete
  4. 'நச்'சுன்னு இருக்கு ..முதல் இரண்டு பந்திகளும் சூப்பர்!

    ReplyDelete
  5. ////காலமெல்லாம்
    தங்களுடைய
    ஆரோக்கியத்தை
    செலவழித்து
    செல்வத்தை
    சேர்ப்பவர்கள்...


    பின்னர்
    அதே செல்வத்தை
    செலவழித்து
    ஆரோக்கியத்தை
    மீட்கத்
    துடிப்பார்கள்...
    /////


    அருமையாக உணர்தினாய் மக்கா!!!!

    ReplyDelete
  6. மனிதர்களின் உண்மை முகம் இதுதான்...

    ReplyDelete
  7. இன்றைய எமது வாழ்வியலை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டியிருக்கிறீர்கள்

    ReplyDelete
  8. உலகம்
    நோய்களை
    அறிதளைவிட .....
    நோய்களைப்பற்றி
    அறிதளைவிட ......
    நுகர்வு பண்பாடு
    மக்களை ஆட்டி
    படைக்கிறது அதை
    எடுத்துக் காட்டி
    படம் பிடித்து
    முன்வைக்கிரீர்
    பாராட்டுகள் தொடருங்கள் .

    ReplyDelete
  9. TM 7 கலக்கல் சிந்தனை!

    ReplyDelete
  10. இனிய மாலை வணக்கம் பாஸ்.

    சபாஷ்,
    உங்களிடமிருந்து வித்தியாசமான ஒரு படைப்பு.
    அதுவும் மனிதனின் வாழ்வியல் யதார்த்ததை நச்சென்று சொல்லி,
    அவனின் இன்னோர் பக்கத்தை தோலுரித்துக் காட்டுகிறது!

    வாழ்த்துக்கள் பாஸ்.

    ReplyDelete
  11. நியாமான ஆதங்கம் பாஸ்...
    இந்த அவசர கால உலகில் இது எல்லாம் தவிர்க்க முடியாது உள்ளது
    இது எல்லாம் தப்பு என்று மூளைக்கு தெரியுது
    இருந்தும் என்ன பயன் மனசு கேக்குது இல்லையே

    ReplyDelete
  12. அருமையான கவிதை. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  13. அருமையான கவிதை. நல்லா இருக்கு.

    ReplyDelete
  14. இருக்கும் போது கொடுக்க
    மனம் வராது
    இறக்கும் போது கொடுக்க
    இயலாது
    பிறக்கும் போது வந்ததுபோல
    மரிக்கும் போதும்
    செல்வது போல

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  15. நல்ல கவிதை நிதர்சனமும் கூட.....

    ReplyDelete
  16. யதார்த்தமான கவிதை..கொஞ்சம் ஸ்பெல் செக் பண்ணிப் போடுங்கள்.

    ReplyDelete
  17. என்னாதிது? இன்னிக்கு எல்லோருமே சூப்பரா கவிதை எழுதுறீங்க? இந்தக் கவிதை அருமை கருண் அண்ணே!

    ReplyDelete
  18. Kavithai super sago. Nilaiyatra vazhkaiyai arumaiyaai uraikkiradhu ungal kavithaigal kavithai

    ReplyDelete
  19. என்வே
    வாழும் ஒவ்வொரு கணமும்
    நமக்காக மட்டுமின்றி பிறருக்காகவும் வாழப் பழகுவோம்
    அதன் காரணமாய் இறந்த பின்பும் கூட
    நீடித்து வாழ்வோம் என அறிந்து தெளிவோம்
    தரமான படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 17

    ReplyDelete
  20. சூப்பரு நண்பா

    ReplyDelete
  21. அரிய தத்துவம் எளிய விளக்கம் அருமை!

    ReplyDelete
  22. // இதை அப்படியே தொடருங்கள் நண்பர்களே பின்னூட்டங்கள்
    மூலமாக..... //

    எதுக்கு அதை காப்பி பேஸ்ட் பண்ணி இன்னொரு பதிவு தேத்துறதுக்கா...

    ReplyDelete
  23. இருக்கும் போது ஊத்த மாட்டான் பால... கால நீட்டி படுத்துக்கிட்டா எவ்வளவு பெரிய மால

    ReplyDelete
  24. கவிதை சூப்பர்

    ReplyDelete
  25. ஒவ்வொரு நாளும் செத்து செத்து வாழ்கிறோம்
    சாவே நமக்கு வராது என்று நினைக்கிறோம்
    ஆனால்
    வாழ்க்கையை வாழாமலே செத்தும் விடுகிறோம்

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"