தரிசு நிலம் ஒன்று
இங்கு தவிக்கிறது...!
கண்ணகியைக் கூட
தெய்வமாக வணங்கும்
தமிழ் நாட்டின்
அழகு தமிழ் பேசும் நான்,
மலடி...!
எவ்வளவோ உள்வாங்கி
எதனையும் கொடுக்காத
கஞ்சனின் பணப் பெட்டி
நான்...!
இன்னும் மக்களாட்சி
மலராத மலட்டு தேசம்
நான்...!
என் தேதிகளில்
அமாவாசை
அடிக்கடி வந்தது
சிவராத்திரியோ
தினமும் வந்தது...!
ஆனால் ஒரு
பிள்ளையார் சதுர்த்தி
மட்டும் இன்னும்
பிறக்கவே இல்லை...!
எங்கள் ஊர்
முழுதும்
பரிதாபமாய் பார்க்கும்,
என்
இறுதி விருப்பம்
இதுதான்...!
இறந்த பிறகு
என்னை
எரித்துவிடாதீர்கள்
புதைத்துவிடுங்கள்
அப்போதாவது
இவ்வயிற்றில்
புழு, பூச்சி வராதா?
மனதைப் பிசைந்தது உங்கள் கவிதை...நன்று!
ReplyDelete'மலடி' என்ற சொல்லை முதலில் உபயோகத்தில் இருந்து அகற்ற வேண்டும்...
எந்தளவு மனதில் வலி ஏற்படும் என்பதை வரிகளில் அருமையாக... மிகவும் உண்மையாக சொல்லி உள்ளீர்கள்... இறுதி விருப்பம் கலங்க வைத்தது...
ReplyDeleteஇப்பவும் இம்மாதிரியான பெண்கள் இருக்கிறார்கள் என்பது தான் கொடுமையே...
Deleteவலி நிறைந்த கவிதை
ReplyDeleteசரிங்க...
Deleteசமூகத்தில் இவர்களுக்கான சொற்பிரயோகமும்
ReplyDeleteஅவர்களின் நிலையம் மனதை மிகவும் வேதனைப் படுத்தும்..
கவிதை நிதர்சனமாக விவரிக்கிறது சற்று கனத்துடன்..
நிதர்சனம்..
Deleteகலங்க வைத்த கவிதை.
ReplyDeleteநல்லது..
Deleteவிரைவில் அவள் வாழ்விலும் கிருஷ்ண ஜெயந்தி வர வாழ்த்துக்கள் !
ReplyDeleteத.ம 7
நன்றி...
Deleteஇறந்த பிறகு
ReplyDeleteஎன்னை
எரித்துவிடாதீர்கள்
புதைத்துவிடுங்கள்
அப்போதாவது
இவ்வயிற்றில்
புழு, பூச்சி வராதா?//
வேதனையின் விளிம்பை தொட்ட வரிகள்! நன்று!
வாழ்த்துகளுக்கு நன்றி அய்யா...
Deleteவணக்கம்
ReplyDeleteஇன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்
அறிமுகப்படுத்தியவர்-கும்மாச்சி
பார்வையிட முகவரி இதோ- வலைச்சரம்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-