என்னுடைய மரணத்துக்கு
இந்த உலகம்
வருந்தா விட்டாலும்
என் பக்கத்து வீட்டுக்காரன்
வருந்தும்படியாவது
வாழ்ந்துவிட வேண்டும்
நூறாண்டு கழித்து
என் கல்லறையில்
மலர்கள் வந்து
விழாவிட்டாலும்
இறக்கும் அன்றாவது வந்து
விழும்படி வாழ வேண்டும்
உலக சிந்தனைக்குள்
என்னுடைய சொல்
அரங்கேரவில்லை என்றாலும்
மரணம் வரை
சிலர் மறக்காத
நல்லது ஒன்றை
கற்றுக் கொடுக்கவேண்டும்
உறவுகளல்லாமல்
என் மரணத்திற்கு
எங்கோ ஒரு மூலையில்
ஒரு துளி கண்ணீர்
விழுமானால் போதும்...
என் வாழ்க்கை
அர்த்தப்படும்...!
இப்பவே அந்த கவலை எதுக்கு கருண் ?வருந்தவும் ,மலர் தூவவும் .கண்ணீர் விடவும் ஆட்கள் உண்டு !நான் கியாரண்டி!
ReplyDeleteநன்றி..
Deleteசரியாகச் சொன்னீர்கள்...!
ReplyDeleteஅழகான ஆழமான வரிகள்.....
ReplyDeleteஇந்த பிழையை சரி செய்து விடுங்களேன்.
'அரங்கேரவில்லை' என்றாலும்..... அரங்கேறவில்லை.... என்றிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
சுட்டிக்காட்டியமைக்கு நன்றி..
Deleteஇப்படிப்பட்ட மரணம் எல்லோருக்கும் கிடைக்கட்டும்
ReplyDeleteகிடைத்தால் நல்லது
Deleteமரணக் கவிதை சிந்திக்க வைத்தது! நன்றி!
ReplyDeleteசரிங்க சுரேஷ்..
Deleteஅர்த்தமுள்ள வாழ்வுக்கு
ReplyDeleteவழிகாட்டும் அற்புதமான கவிதை
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கு நன்றி ..
Delete