Ads 468x60px

5/01/2013

நீங்கள் இழப்பதற்கு எதுவும் இல்லை - பூட்டப்பட்ட விலங்குகளைத் தவிர



"நீங்கள் இழப்பதற்கு எதுவும் இல்லை - பூட்டப்பட்ட விலங்குகளைத் தவிர” என்று பிரகடனம் செய்த காரல் மார்க்சும், ஃபிரடெரிக் எங்கல்சும் கண்ட கனவுகளை நனவாக்க, பாட்டாளித் தோழர்கள் பச்சை ரத்தம் பரிமாறி, உரிமைப் பதாகையை உயர்த்தி வெற்றி கண்டதைக் கொண்டாடும் நாள்தான் மே நாள் ஆகும்.

இந்தியாவில் சென்னை மாநகரில் தான் முதன்முதலில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. பொதுவுடைமைவாதியும் தலைசிறந்த சீர்திருத்தவாதியும் ம.சிங்காரவேலர் தான் 1923 -இல் சென்னை உயர்நீதிமன்றம் அருகே உள்ள கடற்கரையில் தொழிலாளர் தின விழாவைக் கொண்டாடினார்.

மேதினக் கொண்டாட்டமானது, ஐரோப்பிய மக்கள் பல தெய்வங்களை வணங்கி வந்த (Pagan Europe) காலத்தில் ஏற்பட்டது. முதன் முதலில் இளவேனிற் கால ஆரம்பத்தை விழாவாகக் கொண்டாடினார்கள்.

ஆதிகால Celts and Saxons நெருப்பின் தினமாக (the day of fire) மே 1ஆம் தேதியைக் கொண்டாடினார்கள். Saxons ஏப்ரல் 30 சாயந்திரம் விழாவைத் துவக்குவர். விளையாட்டு, கேளிக்கைகள், விருந்துடன் கூடிய விழா பனிக்காலம் முடிந்து இளவேனிற்காலத்தை வரவேற்பதற்காகக் கொண்டாடப்படுவது. மற்றும், இந்த நாள் ஒரு வருடத்தை சம பாதியாகப் பிரிக்கிறது என்று கருதினர் (மே 1முதல் அக்டோபர் முடிய 6 மாதம், நவம்பர் 1 முதல் ஏப்ரல் முடிய ஆறு மாதம்) இந்த விழாவை கத்தொலிக்க சர்ச் சட்டத்தின் பாதுகப்பிலிருந்து நீக்கியது (outlawed by the Catholic church) ஆனாலும் மக்கள் 1700 வரை கொண்டடிக்கொண்டுதான் இருந்தனர்.

ரோமானியர்கள் பிரிட்டிஷ் தீவுகளுக்கு (British Isles) குடியேறியபொழுது, மே தினத்தை விமரிசையாகக் கொண்டாடினர். இந்த விழா பூக்களின் தேவதையான ஃப்லோராவிற்கான (Flora) வழிபாடு. ஏப்ரல் 28 முதல் மே 2 முடிய நடக்கும்.காலக்கிரமத்தில் Celts and Saxons இனத்தாருடைய கொண்டாட்டத்திலும் சேர்த்துக்கொள்ளப்பட்டது.

நாம் தற்போது கொண்டாடும் மே தினம், தொழிலாளிகள் விடுமுறை தினமாக, ஏற்படக் காரணம் 1886ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி, அமெரிக்காவில் தொழிலார்கள், எட்டு மணி நேர வேலைதான் வேண்டும் என்று போராட்டம், Haymarket என்ற இடத்தில் நடத்தியதன் நினை வாகத்தான். இந்தப் போரட்டம் Knights of Labour என்று அழைக்கப்பட்டது. கிட்டத்தட்ட 1600 போரட்டங்கள் நடந்ததாகவும் 600,000 தொழிலாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது. 1889ஆம் ஆண்டு பாரிஸ் மே 1ஆம் தேதியைத் தொழிலாளிகளின் விடுமுறை நாளாக, ஹேமார்கெட் போராட்டத்தில் உயிர் துறந்தவர்களை கௌரவிக்கும் வகையில் (in commemoration of the Haymarket Martyrs) International Working Men's Association (the First International) அறிவித்தது. தொழிலாளிகள் சிந்திய இரத்தத்தின் ஞாபகமாக சிகப்பு நிறக் கொடியைச் சின்னமாக்கினர்.

ஹவாயில் (Hawaii) மே தினம், (Lei. ) என்ற மரபு வழி வந்த விழாவுடன் இணைந்து கொண்டாடப்படுகிறது. Lei. என்பது மலர்களால் ஆன ஒரு மாலை அல்லது நெக்லஸ்.இது 46 செ.மீ. நீளம் இருக்கும்.

ஜெர்மனியில் 1933ஆம் வருடம் தொழிலாளர் தினம் விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. போலண்ட் 1990ல் தொழிலாளர்கள் தினத்தை "State Holiday" என்று மாற்றிற்று. ஸ்வீடன், நார்வே, இடலி, (Italy) முதலிய நாடுகள் மே 1ஆம் தேதியைக் கோலாகலமாக கொண்டாடுகின்றனர். ஆஸ்திரேலியாவில், எல்லைக்கேற்ப, தொழிலாளர்கள் தினம் வெவ்வேறு நாட்களில், கீழ்க்கண்டவாறு கொண்டாடப்படுகிறது:

It is the first Monday in October in the Australian Capital Territory, New South Wales and South Australia.

In both Victoria and Tasmania, it is the second Monday in March (though the latter calls it Eight Hours Day).

In Western Australia, Labour Day is the first Monday in March.

In both Queensland and the Northern Territory, it is the first Monday in May.

சோவியத் யூனியனில் மே தினம் ஒரு முக்கியமான அரசாங்க விடுமுறை, மிக விமர்சையாக ராணுவ அணிவகுப்பு காட்சியுடன் கொண்டாடப்படுகிறது. முதன் முதலில் மே 1ஆம் தேதி 1917ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.

New Zealandல் தொழிலாளர் தினம் அக்டோபர் மாதம் நான்காவது திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. இதற்கு மூல காரணமானவர் Samuel Parnell's என்னும் தச்சு வேலை செய்பவர். 1840ல் 8 மணி நேரத்திற்குமேல் வேலை செய்ய மறுத்தார். மற்ற தொழில் செய்பவர்களையும் தூண்டிவிட்டார். அக்டோபர் 1840ல் தொழிலாளர்கள் கூட்டம் ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. அக்டோபர் 28 1890ஆம் வருடம் ஒருநாளைக்கு 8 மணி நேர வேலை என்ற கோரிக்கையின் 50வது வருடத்தை ஒரு அணிவகுப்பின் மூலம் கொண்டாடியது. இதன் பிறகு ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் கொண்டாடியது.1899ல் அரசாங்கம் 1900ல் இந்த நாளைப் பொது விடுமுறையாக அறிவித்தது.

இப்படியாக ஒவ்வொரு தேசமும் மே தினத்தைக் கொண்டாடுகின்றன.



கண்ணீரும், வியர்வையும், செந்நீரும் சிந்திப் போராடும் வர்க்கம் விடுதலையை வென்றெடுக்கும் என்பதற்கு அடையாளமாகத் திகழும் இந்த மே நாளில், ஈழத் தமிழர் விடுதலைக்காகச் சிந்தும் கண்ணீரும், இரத்தமும் வீண் போகாது என்றும், அவ்வுரிமைப் போராட்டத்தில் உலகத் தமிழர்கள் மட்டுமல்லாமல் உழைக்கும் வர்க்கமும் தங்கள் பங்களிப்பைத் தந்திட வேண்டும் என்று வேண்டிச் சூளுரைத்து மே தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்..


3 comments:

  1. சிறப்பு பகிர்வுக்கு நன்றி... பாராட்டுக்கள்...

    தொழிலாளர் தின வாழ்த்துக்கள்... (என்றும்)

    நேரம் கிடைப்பின் வாசிக்க அன்புடன் அழைக்கிறேன் :

    http://dindiguldhanabalan.blogspot.com/2013/05/Pain-Gain.html

    ReplyDelete


  2. மேதின வரலாறுஅருமை பல பலரும் அறியச்செய்தீர்!

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"