Tamilus

The best Tamil Aggregator | Tamilus

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

5/25/2011

முதல்வர் ஜெயலலிதாவிற்கு ஒரு வேண்டுகோள்!!!


முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க., அரசிடம், நாம்  நிறையவே எதிர்பார்க்கிரோம் .

மணல் கொள்ளை, குவாரி கொள்ளை, கல்லூரி கொள்ளை, கான்ட்ராக்ட் கொள்ளை எல்லாவற்றையும், விஞ்ஞான ரீதியான நெட்-ஒர்க்காக மாற்றிவிட்டது முந்தைய  அரசு. 

இதை எல்லாம் யாராலும் ஒன்றும் செய்ய முடியாது; மாற்ற முடியாது என இறுமாந்திருந்தார் முன்னால் முதல்வர் . "எங்களால் மாற்ற முடியும்' என, தேர்தல் மூலம் நிரூபித்துக் காட்டிவிட்டனர் மக்கள்.

பல பிரச்னைகள் இருந்தாலும், புதிய அரசு, மின் உற்பத்திக்கு முதலிடம் தர வேண்டும். அது, மக்களின் ரத்த ஓட்டம் போன்றது.

இன்று  மின்சாரம் இல்லாமல் எதையும் செய்ய முடியாது . எனவே நல்ல மின்திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். 
இல்லை வேறு ஏதேனும்  வழிகளை கண்டறிய வேண்டும். மின் உற்பத்திக்காக, அ.தி. மு.க., அரசு எதை செய்தாலும், மக்கள் நிச்சயம் ஆதரிப்பர். 

செய்வாரா  முதல்வர்?

5/24/2011

ராஜபக்ஷேவை அடித்து உதைத்த நாம் தமிழர் கட்சியினர்.(வீடியோ)

ராஜபக்ஷேவை அடித்து உதைத்த நாம் தமிழர் கட்சினர். (வீடியோ).
இந்த  வீடியோவை ஒரு நண்பர் எனக்கு கொடுத்தார் . இதை பார்க்கும் போது எனக்கு பதிவிட வேண்டும்  எனத் தோன்றியது.  எனக்கு கிடைத்த அனுபவம் உங்களுக்கும்...



இங்கு மருத்துவ சிகிச்சை இலவசம்.



***********************************************************************************

அவர் விபத்துன்னா ரொம்ப பயப்படுவார் அதனால கொஞ்சம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை அதிகமாவே இருக்கும்!

முன்னெச்சரிக்கைன்னா என்ன செய்வார்?

உதாரணத்துக்கு சொல்லணும்னா சலூனுக்கு போகும்போது கூட ஹெல்மெட் போட்டுட்டுத்தான் போவார்னா பாத்துக்கங்களேன்.

***********************************************************************************


ஆ‌சி‌ரிய‌ர் : அவ‌ன் பண‌க்கார ‌வீ‌ட்டு‌ப் பையனா இரு‌க்கலா‌ம். அது‌க்காக இ‌ப்படி அட‌ம்புடி‌க்க‌க் கூடாது....


தலைமை ஆ‌சி‌ரிய‌ர் : எ‌ன்னதா‌ன் சொ‌ல்றா‌ன் பைய‌ன்?

ஆ‌‌சி‌ரிய‌ர் : க‌ழி‌த்த‌ல் கண‌க்கு போடு‌ம் போது ப‌க்க‌த்‌தி‌ல் ‌இரு‌க்‌‌கிற ந‌ம்ப‌ர் ‌கி‌ட்டஇரு‌ந்து கட‌‌ன் வா‌ங்கணு‌ம்னு சொ‌ன்ன.. நா‌ன் பண‌க்கார ‌வீ‌ட்டு‌ப் பைய‌ன். ஏ‌ன் கட‌ன் வா‌ங்கணு‌ம்னு எ‌தி‌ர்கே‌ள்‌வி கே‌க்குறா‌ன்

தலைமை ஆ‌சி‌ரிய‌ர் :?!?!
***********************************************************************************

ஆசிரியர் : முரளியிடம் 4 ஆரஞ்சு இருக்கிறது. அவனது த‌ம்‌பி‌க்கு 2 பழ‌த்தை கொடுக்க சொல்லி‌ட்டே‌ன். ‌மீத‌ம் அவ‌னிட‌ம் எ‌த்தனை பழ‌ம் இரு‌க்கு‌ம்?


அவன் : 4.

ஆசிரியர் : எப்படி உனக்கு கணக்கே தெரியாதா?

அவன் : உங்களுக்கு முரளியை பற்றி தெ‌ரியாதா?
***********************************************************************************

கணவ‌ன் : எ‌ன் பொ‌ண்டா‌‌ட்டி எ‌ன்ன ‌தி‌ட்டி‌ட்டாடா...


ந‌ண்ப‌ன் : ஏ‌ன்

கணவ‌ன் : கல்யாணமாகி இரண்டு மாதம் ஆகிறது. இன்னும் சமைக்க‌க் கூட வரலை, போய் உங்க அப்பா‌க்‌கி‌ட்ட க‌த்து‌க்‌கி‌ட்டு வா‌ங்க‌‌ண்ணு சொ‌ல்‌லி‌ட்டா...
***********************************************************************************

‌கலா : எ‌லி‌க்கு பே‌ண்‌ட் போ‌ட்டா எ‌ன்ன ஆகு‌ம்?


மாலா : எ‌ன்ன ஆகு‌ம் ‌நீயே சொ‌ல்லு.


கலா : எ‌லிபே‌ண்‌ட் ஆகு‌ம். 

 
***********************************************************************************

ஒருத்தி : எங்க வீட்டுக்காரர் ஒரு குழந்தை மாதிரி!

மற்றொருத்தி : இருக்கலாம். அதுக்காக என் பொ‌ண்ணு‌ கூட ஓடி‌‌ப்‌பிடி‌ச்‌சி ‌விளையாடறது எ‌ல்லா‌ம் ச‌ரி‌யி‌ல்ல..
***********************************************************************************

புதுமனைவி: நீங்கள் பிரெட்டை டோஸ்ட் செய்து காபி போட்டு விட்டீ‌ர்கள் என்றால், மாலை உணவு தயாரா‌கிவிடும்.


கணவன்: அ‌ப்படியா மாலை உணவு என்ன?

புதுமனை‌வி : டோஸ்டும், காபியும்தான்!

 

 ***********************************************************************************



 

5/23/2011

ரஜினிக்கு ஒரு ரசிகனின் கடிதம்..


தலைவா ..

இது நீங்கள் சீக்கிரம் குணமடைந்து வீடு திரும்ப தினமும் கோயிலுக்கு போய் பிராதிக்கும் ஒரு சாதாரண ரசிகனின் கடிதம்.

'ராணா' படத்தின் பூஜை முடித்த அன்று மாலையில் நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து உங்களைப் பற்றி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தகவல்கள் வதந்திகளாக பரவி வருவதை பார்க்கும் போது பயமாக இருக்கிறது.

மருத்துவர்கள் உங்களைப் பற்றி தினம் ஒரு அறிக்கை கொடுத்தாலும் என் மனம் நீங்கள் ஒரு முறை மருத்துவ மனை ஜன்னலிலிருந்து கை காட்டினால் போடும் என காத்து கிடக்கிறது  .

உங்களது மனைவி "எனது கணவர் நன்றாக இருக்கிறார். அவருக்கு சின்ன பிரச்னை தான்" என்று பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தாலும், தனுஷ் என்னதான் சமாதானம் சொன்னாலும் என்னுடைய மனது ஏனோ ஏற்க மறுக்கிறது.

நீங்கள் இனிமேல் நடிக்காவிட்டாலும் நான் கவலைப்பட போவதில்லை. ஒரு ரசிகனாக உங்கள் படம் ரிலீசாகும் போது முதல் காட்சி பார்த்து விசிலடித்து ரசித்தவன் நான்.

நீங்கள் "நான் நன்றாக இருக்கிறேன்" என்று பேசி வீடியோ எடுத்து டி.வி. சேனல்களில் ஒளிப்பரப்பலாமே. உங்களுங்கு உடம்பு சரியில்லாத நாளில் இருந்து தவிக்கும் என்னை மாதிரி கோடான கோடி ரசிகர்களுக்கு அது போதுமானதாக இருக்குமே!

உங்களுக்கு உடம்பு குணமான பின் ரசிகர்களை சந்திக்க இருப்பதாக தங்கள் மனைவி கூறி இருக்கிறார். அதற்காகவும் காத்து இருக்கிறேன்.

உங்களுக்கு உடம்பு குணமாகி நீங்கள் 'ராணா' படத்தில் நடித்து அது வெளியாகி, அந்த படத்தில் நீங்கள் வரும் முதல் காட்சியை விசிலடித்து வரவேற்க ஆவலாக காத்திருக்கிறேன் தலைவா..!

நீங்கள் யானை அல்ல குதிரை என்பதைஉணர்த்துங்கள் தலைவா...

5/22/2011

நேர்மையிருந்தால் இதை செய்வாரா முதல்வர் ஜெயலலிதா?


நம் முன்னோர் இயற்கையை வழிபட்டதன் காரணமாக, அதன் பயனை நாம் இன்று அனுபவித்து வருகிறோம். ஆனால், அரசியல் பின்னணி கொண்ட சிலர், இயற்கை வளங்களை முடிந்த அளவுக்கு அழித்து வருகின்றனர். 

தமிழகத்தில், ஆற்று மணல் கொள்ளை மூலம், ஒரு தரப்பினர், கோடி கோடியாக சம்பாதிக்கின்றனர். வனங்களை அழித்து, மரங்களை கடத்துவது தொடர்கிறது. இதற்கு சான்றாக, மலைகளையொட்டிய மாவட்ட கிராமங்களில், யானைகள், சிறுத்தைகள் ஊடுருவுகின்றன. வன விலங்குகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைகிறது. 

சிட்டுக் குருவி இனமே மாயமாகி விட்டது. விவசாய நிலங்கள், விற்பனை நிலங்களாக மாறி வருகின்றன. நிலத்தடி நீர் கட்டுப்பாடின்றி உறிஞ்சப்படுகிறது. பாலித்தீன் பயன்பாடு, டயர்களை எரிப்பது போன்ற, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது, மக்களின் பழக்கவழக்கங்களில் ஒன்றாகி விட்டது.

ஏற்கனவே ஆட்சியில் இருந்த போது, மழை நீர் சேமிப்பு என்ற மகத்தான திட்டத்தை கொண்டு வந்து, நிலத்தடி நீர் மட்டம் உயர்த்த வழி செய்த முதல்வர் ஜெயலலிதா, இம்முறை, இயற்கையை காப்பாற்ற, சிறப்பு திட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டும். 

மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மாற்று வழிமுறைகளை கண்டறிந்து, வனங்களை காத்து, விலங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்க வழி செய்ய வேண்டும். நிலத்தடி நீர் மட்டம் உயர செய்ய வேண்டும். தென்னக நதிகள் இணைப்பு குறித்து ஆராய வேண்டும். இயற்கையை காப்பதன் மூலம், இனத்தை காப்பாற்ற முடியும். செய்வாரா முதல்வர்?

பாராட்டு மழையில் அவன் இவன்



அவன் இவன் பற்றி வரும் துண்டு துண்டான செய்திகள் எப்போது படத்தைப் பார்ப்போம் என்ற ஆவலை‌த் தூண்டுவதாக உள்ளது. இந்த ஆவல் எல்லாம் நமக்குதான். சிலர் அனுபவித்தேவிட்டார்கள்.

பாலுமகேந்திரா, திருமதி பாலுமகேந்திரா இருவருக்கும் பிறகு விஷாலின் குடும்பத்தினர் அவன் இவனை ரசித்திருக்கிறார்கள். விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவின் மனைவியும் முன்னாள் நடிகையுமான ஸ்ரேயா ரெட்டியின் பாராட்டுதான் சமீபத்திய சர்ப்ரைஸ்.

அவன் இவனில் விஷாலின் நடிப்பைப் பார்த்து வாயடைத்துப் போனேன். விஷாலால் இப்படியும் நடிக்க முடியும் என்பதை என்னால் நம்ப முடியவில்லை என்று பாராட்டியிருக்கிறார். அத்துடன் ஆர்யா, ‌ஜி.எம்.குமார் ஆகியோரும் ஸ்ரேயா ரெட்டியின் பாராட்டை பெற்றிருக்கிறார்கள். சிறிய கதை அதனை பாலா நாம் எதிர்பார்க்காத அளவுக்கு சொல்லியிருக்கிறார் என வியப்புடன் பாலாவும் ஸ்ரேயா ரெட்டியால் பாராட்டப்பட்டிருக்கிறார். 

5/21/2011

ஏழை‌ப் பெ‌‌ண்க‌ளு‌க்கு ஜெயல‌லிதா கொடு‌த்த முத‌ல் அ‌ல்வா!?



''திருமண உதவி கேட்கும் ஏழை‌ப் பெ‌ண்க‌ளு‌ம், இளநிலை பட்டம் அல்லது டிப்ளமோ பெற்ற பெண்களின் பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.24 ஆயிரத்திற்கு‌ள் இரு‌க்க வே‌ண்டு‌‌ம், பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த பெண்ணாக இருந்தால் 5ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். மற்ற வகுப்பைச் சேர்ந்த பெண்கள் 10ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். அ‌ப்படி இரு‌ந்தா‌ல் ம‌ட்டுமே ரூ.25 ஆயிரத்துடன், தாலி செய்வதற்கு 4 கிராம் தங்கமும் இலவசமாக வழங்கப்படும்'' எ‌ன்று த‌மிழக அரசு பு‌திய ‌நிப‌ந்தனையை ‌வி‌தி‌த்து‌ள்‌ளது.

த‌மிழக ச‌ட்ட‌ப்பேரவை தே‌ர்த‌‌ல் வா‌க்குறு‌திபடி படித்த ஏழைப் பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் உதவியுடன் தாலிக்கு 4 கிராம் தங்கமும், பட்டம் அல்லது டிப்ளமோ பெற்ற பெண்களின் திருமணத்திற்கு ரூ.50 ஆயிரத்துடன் 4 கிராம் தங்கமும் இலவசமாக வழங்கப்படும் என்று பதவியேற்ற நாளிலே முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.

அவ‌ர் அ‌றி‌‌வி‌த்த கையோடு த‌மிழக சமூகநலம், சத்துணவுத் துறை முதன்மைச் செயலர் மோகன் பியாரே மூல‌ம் வெ‌ளி‌யி‌ட்ட‌ப்ப‌ட்டு‌ள்ள அரசாணை‌யி‌ல் இ‌ந்த பு‌திய ‌நிப‌ந்தனை ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாக வெப் துனியா இணைய தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

திருமண‌ உத‌வி‌த் தொகை பெற வே‌ண்டுமானா‌ல் பெ‌ண்‌ணி‌ன் பெ‌ற்றோ‌‌ரி‌ன் ஆ‌ண்டு வருமான‌ம் 24,000 ரூபா‌ய்க்கு குறைவாக இருக்க வேண்டும் எ‌ன்று. ‌கிராம‌ப்புற‌த்‌தி‌ல் நெ‌ற்ப‌யிரு‌க்கு களை எடு‌‌க்கு‌ம் ஒரு பெ‌ண்‌ணி‌ன் ஒரு நா‌ள் கூ‌லி 100 முத‌ல் 130 வரை கொடு‌க்‌க‌ப்படு‌கிறது. ம‌ண்வெ‌ட்டியை எடு‌த்து வேலை‌க்கு செ‌‌ன்றா‌ல் 150 ரூபாய்‌க்கு குறை‌ந்து கூ‌லியை வா‌ங்காம‌ல் வருவ‌தி‌‌ல்லை ‌கிராமபுற ம‌க்க‌ள். இ‌ப்படி கூ‌லிவேலைக்கு செ‌ன்று ச‌ம்பா‌தி‌க்கு‌ம் ஏழை‌ப்‌பெ‌ற்றோ‌ர்க‌ளி‌ன் ஆ‌ண்டு வரு‌ம் 35 ஆ‌யிர‌‌த்‌தி‌ற்கு மே‌ல் இரு‌க்கு‌ம் போது 24 ஆ‌யிர‌ம் ரூபா‌ய் இரு‌ந்தா‌ல்தா‌ன் ‌திருமண உத‌வி‌ தர‌ப்படு‌ம் எ‌ன்று த‌மிழக அரசு அ‌றி‌வி‌த்து‌ள்ள எ‌ந்த வகை‌யி‌ல் ‌நியாய‌ம்?

கனிமொழி கைது - கலைஞர் பரபரப்பு பேட்டி



ஸ்பெக்ட்ரம் வழக்கில் சம்மந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி பெற்றது தொடர்பாக அந்த டி.வி.யின் பங்குதாரரும், தி.மு.க. தலைவர் கலைஞரின் மகளுமான கனிமொழி எம்.பி. மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. அவரது ஜாமீன் மனு மீதான தீர்ப்பு நேற்று டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் அறிவிக்கப்பட்டது. அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று மாலை 5.45 மணி அளவில் கருணாநிதி தனது கருத்தை தெரிவிக்க இருப்பதாகவும், ஒரு சில பத்திரிகையாளர்கள் மட்டும் உள்ளே வரும்படியும் அழைப்பு வந்தது.

ஆனால் அனைத்து தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளின் வீடியோகிராபர்கள், போட்டோகிராபர்கள், நிருபர்கள் என அனைவரும் உள்ளே நுழைந்ததால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சில நிமிட நேர கூச்சலுக்கு பின்னர் கலைஞர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.


மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியின் ஜாமீன் மனு டெல்லி நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதே? அதுபற்றி உங்கள் கருத்து என்ன?

அது நீதிமன்ற விவகாரம். நான் ஒன்றும் அதில் கருத்து சொல்ல விரும்பவில்லை.

காங்கிரசுடன் உங்கள் உறவு தற்போது எப்படியிருக்கிறது?

எல்லோருடனும் நல்ல உறவு இருக்கிறது.

இந்த தீர்ப்பின் காரணமாக காங்கிரசுடன் உங்களுக்குள்ள உறவு பாதிக்குமா? என்ன முடிவு எடுக்கப்போகிறீர்கள், இதற்காக கட்சிக் கூட்டம் நடைபெறுமா?

தி.மு.க. என்பது ஒரு ஜனநாயக இயக்கம். நான் மாத்திரம் எந்த முடிவும் எடுக்க முடியாது. எங்கள் கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூடித்தான் எந்த முடிவையும் எடுக்க வேண்டும். நானாக ஒரு முடிவு எடுக்க முடியாது.

செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தை எப்போது கூட்டப்போகிறீர்கள்?

தேவைப்படும்போது கூட்டுவோம்.

இந்த தீர்ப்பு குறித்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போகிறீர்களா?

சட்டவல்லுநர்களை கலந்தாலோசித்து முடிவெடுப்பேன். என்ன முடிவு என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.

உடனடியாக டெல்லி போகிறீர்களா?

இப்போது நான் போகவில்லை.

தேர்தலிலே உங்களுக்கு கிடைத்த முடிவு பற்றி என்ன கருதுகிறீர்கள்?

அதைப்பற்றி நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன். மக்கள் நல்ல ஓய்வு கொடுத்திருக்கிறார்கள். இப்போது நீங்களும் ஓய்வு கொடுத்தால் நல்லது.

உங்கள் மகள் கனிமொழியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறதே, அதன் காரணமாக உங்கள் மனநிலை எப்படி பாதிக்கப்பட்டிருக்கிறது?

உங்களுக்கு ஒரு மகள் இருந்து, அவர் செய்யாத குற்றத்திற்காக, இதுபோன்ற ஒரு தண்டனை கிடைத்தால், உங்கள் மனம் அப்போது என்ன பாடுபடுமோ அந்த மனநிலையில் என் மனம் இருக்கிறது.

5/20/2011

மழைக்கும் எனக்குமான உறவு...!




உன்மீது உண்டானது 
காதல்தான் என்று 
எனக்கு
முதலில் உணர்த்தியது 
மழை...!

உன்னுள் கரையும் போது 
என்னுள் மழையில் நனையும் சிலிர்ப்பு...!

கரு மேகங்கள் சூழ 
ஒரு நாள் மழை தோடு முன் 
என் விரல்களை நீ  பற்றினாய் ...!

நம் முதல் ஸ்பரிசத்தை 
மேலும் மகிழ்த்தியது 
மழையின் பகிர்வு...!

நெற்றியில் விழும் 
ஒற்றை முடி விலக்கி 
மெல்ல இதழ் பதித்தாய்
அதுவும் 
ஒரு மழைநாள் மாலைப் பொழுதில் ...!

பின்னொரு நாள் 
கனத்த இதயத்தையும் 
கண்ணீரையும் சேர்த்து 
என் காதலுக்கு கல்லறை 
எழுப்பினாய்
அன்றும் மழை பெய்தது...!

அந்த  மழை
என் கண்ணீர் விலக்கவா
தன் சோகம் கரைக்கவா 
என்று தெரியவில்லை ...!

உண்மையில்
உன் பிரிவை விடவும்
என்னை வருத்துவது 
நீ தந்த 
மழைக்கும் எனக்குமான உறவு...!


5/19/2011

தனு‌‌ஷு‌க்கு ‌சிற‌ந்த நடிகரு‌க்கான தே‌சிய ‌விருது




டெல்லியில் 58வது திரைப்பட தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.நடிகர் தனுஷ் நடித்த ‘’ஆடுகளம்’’ படத்திற்கு 5 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. 

ஆடுகள‌‌ம் பட‌த்தில் நடி‌த்த நடிக‌ர்  த‌னு‌‌ஷு‌க்கு ‌சிற‌ந்த நடிகரு‌க்கான தே‌சிய ‌விருது ‌கிடை‌த்து‌ள்ளது.
‌சிற‌ந்த நடிகை‌க்கான ‌தே‌சிய விருது தெ‌ன்மே‌ற்கு பருவகா‌ற்று பட‌த்‌தி‌ல் நட‌ந்த சர‌ண்யா பொ‌ன்வ‌ண்ணனு‌க்கு ‌‌கிடை‌த்து‌ள்ளது.

ச‌ன் ‌‌பி‌‌க்ச‌ர்‌ஸ் தயா‌ரி‌‌த்த ஆடுகள‌த்தை பட‌த்தை இய‌க்‌‌கிய இய‌க்குன‌ர் வெ‌ற்‌றிமாற‌ன் ‌சிற‌ந்த இய‌க்குனராக தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர். அவரு‌க்கு த‌ங்க‌த்தாமரை ‌விருது ‌கிடை‌த்து‌ள்ளது.

‌சிற‌ந்த ‌திரை‌க்கதை‌க்கான ‌விருது‌ம் வெ‌ற்‌றிமாற‌ன் பெ‌ற்று‌ள்ளா‌ர்.

ஆடுகள‌ம் பட‌த்‌தி‌ன் ‌நடன இய‌க்குனரான ‌தினே‌ஷ்குமாரு‌‌க்கு ‌சிற‌ந்த நடன இய‌க்குனரு‌க்கான தே‌சிய ‌விருது ‌கிடை‌த்து‌ள்ளது.

மைனா பட‌த்தில் பட‌த்‌‌தி‌ல் நட‌ந்த த‌ம்‌பி ராமையா ‌சிற‌ந்த துணை நடிகராக தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.