அவன் இவன் பற்றி வரும் துண்டு துண்டான செய்திகள் எப்போது படத்தைப் பார்ப்போம் என்ற ஆவலைத் தூண்டுவதாக உள்ளது. இந்த ஆவல் எல்லாம் நமக்குதான். சிலர் அனுபவித்தேவிட்டார்கள்.
பாலுமகேந்திரா, திருமதி பாலுமகேந்திரா இருவருக்கும் பிறகு விஷாலின் குடும்பத்தினர் அவன் இவனை ரசித்திருக்கிறார்கள். விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவின் மனைவியும் முன்னாள் நடிகையுமான ஸ்ரேயா ரெட்டியின் பாராட்டுதான் சமீபத்திய சர்ப்ரைஸ்.
அவன் இவனில் விஷாலின் நடிப்பைப் பார்த்து வாயடைத்துப் போனேன். விஷாலால் இப்படியும் நடிக்க முடியும் என்பதை என்னால் நம்ப முடியவில்லை என்று பாராட்டியிருக்கிறார். அத்துடன் ஆர்யா, ஜி.எம்.குமார் ஆகியோரும் ஸ்ரேயா ரெட்டியின் பாராட்டை பெற்றிருக்கிறார்கள். சிறிய கதை அதனை பாலா நாம் எதிர்பார்க்காத அளவுக்கு சொல்லியிருக்கிறார் என வியப்புடன் பாலாவும் ஸ்ரேயா ரெட்டியால் பாராட்டப்பட்டிருக்கிறார்.











