முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க., அரசிடம், நாம் நிறையவே எதிர்பார்க்கிரோம் .
மணல் கொள்ளை, குவாரி கொள்ளை, கல்லூரி கொள்ளை, கான்ட்ராக்ட் கொள்ளை எல்லாவற்றையும், விஞ்ஞான ரீதியான நெட்-ஒர்க்காக மாற்றிவிட்டது முந்தைய அரசு.
இதை எல்லாம் யாராலும் ஒன்றும் செய்ய முடியாது; மாற்ற முடியாது என இறுமாந்திருந்தார் முன்னால் முதல்வர் . "எங்களால் மாற்ற முடியும்' என, தேர்தல் மூலம் நிரூபித்துக் காட்டிவிட்டனர் மக்கள்.
பல பிரச்னைகள் இருந்தாலும், புதிய அரசு, மின் உற்பத்திக்கு முதலிடம் தர வேண்டும். அது, மக்களின் ரத்த ஓட்டம் போன்றது.
இன்று மின்சாரம் இல்லாமல் எதையும் செய்ய முடியாது . எனவே நல்ல மின்திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
இல்லை வேறு ஏதேனும் வழிகளை கண்டறிய வேண்டும். மின் உற்பத்திக்காக, அ.தி. மு.க., அரசு எதை செய்தாலும், மக்கள் நிச்சயம் ஆதரிப்பர்.



















