தமிழ் திரை உலகின் பிரபல பாடல் ஆசிரியர் கவிஞர் வாலி கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக அவசர சிகிச்சை பிரிவில் இருந்து வருகிறார்.
சினிமா பாடலாசிரியர் கவிஞர் வாலி மூச்சுத் திணறல் காரணமாக அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜூன் 8–ந்தேதி அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதில் போதிய முன்னேற்றம் காணப்படவில்லை. நுரையீரல் தொற்று மற்றும் சளிபடலம் உருவாகி இருந்ததால் தீவிர சிகிச்சை பிரிவில் வாலி அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சையில் ஓரளவு குணம் அடைந்ததால் வார்டுக்கு வாலியை கொண்டு வந்தனர். பின்னர் மீண்டும் அவரது உடல் நிலை மோசம் அடைந்தது.
இதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து கடந்த 30 நாட்களாக சிகிச்சை அளித்து வருகின்றனர். நேற்றிரவு அவரது உடல் நிலை மேலும் மோசம் அடைந்தது. இதனால் செயற்கை சுவாசம் (வெண்டிலேட்டர்) அளிக்கப்பட்டு வருகிறது.
நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் ஆஸ்பத்திரிக்கு சென்று வாலியின் உடல் நிலை குறித்து விசாரித்து வருகின்றனர்.
நடிகர் கமலஹாசன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு சென்று உடல் நலம் விசாரித்தனர்.
விரைவில் குணமடைய எல்லாம்வல்ல அந்தப் பரம்பொருளை வேண்டுவோம்..
விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்...
ReplyDeleteநானும் வேண்டிக்குறேன்
ReplyDeleteவிரைவில் நலம் பெற வேண்டுகிறேன்.
ReplyDeleteவிரைவில் நலம் பெற வேண்டுகிறேன்...
ReplyDeleteகாலத்தால் அழிக்க முடியாதவர்...
ReplyDeleteஎனது பிரார்த்தனைகளும்.....
ReplyDeleteவிரைவில் நலம் பெற வேண்டுகிறேன்...
ReplyDelete