அவனுக்கு அன்றுதான் திருமணம் முடிந்தது. தன் மனைவியை உயர் ரக அரபுக் குதிரை பூட்டிய சாரட் வண்டியில் அழைத்துச்சென்றுகொண்டு இருந்தான். பாதையில் ஒரு குழியில் விழுந்து எழுந்தது சாரட் வண்டி. 'முதல் எச்சரிக்கை!' என்றவன், குதிரையின் முதுகில் சாட்டையில் ஒரு இழு இழுத்தான்.
சிறிது நேரம் கழித்து, மீண்டும் ஒரு பள்ளத்தில் விழுந்து எழுந்தது வண்டி. 'இரண்டாவது எச்சரிக்கை!' என்றவன் மீண்டும் சாட்டையால் குதிரையை அடித்தான். மூன்றாவது முறையும் சாரட் பள்ளத்தில் விழுந்து எழ, கோபத்துடன் சாரட்டை விட்டுக் கீழே இறங்கினான்.
துப்பாக்கியை எடுத்து குதிரை யைச் சுட்டுக் கொன்றுவிட்டான். அதிர்ச்சியடைந்த மனைவிசாரட்டை விட்டு இறங்கி, 'உனக்கு அறிவே இல்லையா? அந்தக் குதிரை எத்தனை காஸ்ட்லி தெரியுமா?' என்று கேட்டாள். அவளை நிமிர்ந்து பார்த்தவன், 'முதல் எச்சரிக்கை!' என்றான்.
அதன்பிறகு 40 வருடங்கள் தங்களுக்குள் எந்தச் சண்டையும் இல்லாமல், அந்தத் தம்பதி சந்தோஷமாகக் குடும்பம் நடத்தினார்கள்!
ha ha ha
ReplyDeleteஎச்சரிக்கை அருமை...
அது சரி....
ReplyDeleteஇப்போ நமக்குத்தான் எச்சரிக்கை மணி அடிக்கப்படும் என்பதை சகோதரர் மறக்க வேண்டாம்.
அதுவே கொஞ்சம் உல்டா ஆனா எப்படி இருக்கும்...
ReplyDeleteஅட....
ReplyDeleteமுன்பே படித்திருக்கிறேன்!
என்ன பாஸ் இவ்வளவு லேட்டா அறிவுரை தரீங்க.
ReplyDeleteவேடந்தாங்கல்...
ReplyDeleteஇப்போல்லாம் குதிரையை(?) ஒரு அடி அடித்தாலே புளுகிராசிலிருந்து ஆள் வந்திடும்...