உம்மன் சாண்டியோ, "பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை' என்றார். ஆராய்ச்சி மணியை அடித்து, ஏ,கே.அந்தோணியும், "முதல்வர் பதவியில் மாற்றமில்லை' எனக் கூறி விட்டார்.
ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும்... உம்மன் சாண்டி யார்? காங்கிரஸ் கட்சிக்காரர். எந்த காங்கிரஸ் தலைவர்களாவது, தம் மீது புகார் வந்ததும், பதவியை ராஜினாமா செய்தனரா...
துணை சபாநாயகர் குரியன் உட்பட!காங்கிரசின் அடையாளமே, பதவி தானே! தாங்க முடியாத அளவுக்கு, பெரும் நெருக்கடி ஏற்பட்டால் ஒழிய, பதவி விலகும் காரியம், காங்கிரசில் நடக்குமா?
இந்த அரசியல் தத்துவம், காங்கிரஸ் மட்டுமின்றி, எல்லா அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் பொருத்தமாகி விட்டது, இந்தியாவின் சாபக்கேடு.ஒரு காலத்தில், "இவர் செய்தது, தவறு' என்று, செய்தித் தாளில் செய்தி வந்தாலே, அடுத்த நிமிடம், பதவியைத் துறந்த தலைவர்கள் வாழ்ந்த பூமி இது.
என்ன செய்வது... 'பழைய நெனப்புத் தான் பேராண்டி!' என்ற கதை தான், நினைவுக்கு வருகிறது.இனிமேல், சுப்ரீம் கோர்ட்டில் குற்றம் நிரூபித்தாலும், பதவி விலக மாட்டார்கள், எதிர்கால அரசியல்வாதிகள்.
உதவி இணைய செய்திகள்.
சரி சகோதரரே மனதைச் சாந்தப் படுத்திகொண்டு ஸ்வீ ற் சாப்பிட
ReplyDeleteவாருங்கள் :)
http://rupika-rupika.blogspot.com/2013/07/blog-post_7459.html
மக்கள் சேவைக்காக அன்று வாழ்ந்தவர்கள் பதவியயை உதறினார்கள். இன்று தான் வாழவே பதவியில் நீடித்து ஆசையாய் வாழ்கிறார்கள்
ReplyDeleteதத்துவம்...! சாபக்கேடு...!
ReplyDeleteசொரணைக் கெட்ட மக்கள் வாழும் நாட்டில் தப்பு செய்யும் தலைவர்கள் எல்லாம் டபாய்ப்பார்கள். மக்களே எகிப்திய மக்களைக் கண்டாவது திருந்துங்கள், ஆள்பவன் மதவாதி, அதிகாரவாதி என்றதும் மூன்று கோடிப் பேர் தெருவில் இறங்கி அரசை தூக்கி எறிந்தார்கள். அவர்களே சூடு சொரணையுள்ள மக்கள், நாம் எல்லாம் வெறும் மாக்கள்.
ReplyDeleteநீதிமன்றங்கள் கூட அரசியல் விளையாட்டு மைதானமாகி வருவது வருந்தத் தக்கதே!
ReplyDeleteபதவி விலகுவதாவது அதெல்லாம் நடக்காத கதை. மேலும் அதற்கெல்லாம் இவர்கள் உப்பு போட்டு சோறு தின்று இருக்கவேண்டும்.
ReplyDeleteவாய்தா வாங்கியே கேசை இழுத்தடித்து பதவியில் இருப்பார்கள். இதெல்லாம் அரசியலில் சகஜம்.
பதவி ஒரு போதை..
ReplyDeleteஇதெல்லாம் அரசியல்ல சகஜமப்பான்னு சொல்லிட்டு போய்கிட்டே இருக்க வேண்டியதுதான் :)
ReplyDeleteநாட்டிற்கு தேவை உடனடி மாற்றம்.....
ReplyDelete