உள்ளங்கையிலும், விரல் நுனியிலும் கம்ப்யூட்டரைக் கட்டுப்படுத்தும், "மவுஸ்' என்ற அதிசய கண்டுபிடிப்பை உலகுக்கு அளித்த டக்ளஸ் கார்ல் எங்கல்பர்ட், நேற்று இறந்தார்.
டக்ளஸ் எங்கல்பர்ட், ஜன.,30, 1925ல் அமெரிக்காவில் ஓரேகான் மாகாணத்திலுள்ள போர்ட்லேண்டில் பிறந்தார். எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் பட்டப் படிப்பை, ஓரேகான் மாகாண பல்கலையில் முடித்தார். 1944ல் அமெரிக்க கடற்படையில் ரேடார் டெக்னீசியனாக பணியில் சேர்ந்து, 1948ல் நாசாவில் இணைந்தார். ஆரம்ப கம்ப்யூட்டர் கால கட்டத்தில், இணையதள முன்னோடியாக திகழ்ந்த இவர், சிறந்த கண்டுபிடிப்பாளராகவும் விளங்கினார். இன்று கம்ப்யூட்டர் பயன்படுத்துவோரின் கைகளில் விளையாடும் "மவுஸ்', இவர் கண்டுபிடிப்புகளில் முதன்மையானது. விண்டோஸ், ஹைபர் மீடியா, அவுட் லைன் பிராசஸ், குரூப்வேர், டிஸ்பிளே எடிட்டிங் மற்றும் கிராஸ் பைல் எடிட்டிங் போன்ற கம்ப்யூட்டர் செயல்பாடுகளை அறிமுகப்படுத்தி சாதனை படைத்தார். "மவுஸ்' உட்பட 21 புதிய கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமை இவர் வசம் உள்ளது.
1968ல் சான் பிரான்ஸிஸ்கோவில், "மனித அறிவாற்றலை அதிகரிப்பதற்கான ஆராய்ச்சி' என்ற தலைப்பில் 90 நிமிடங்களுக்கு இவர் அளித்த "டெமோ' (செய்முறை விளக்கம்) சிறப்பு வாய்ந்தது. இது தான் உலகின் முதல் "டெமோ' என்பதால், இவர் "டெமோக்களின் தாய்' என அழைக்கப்படுகிறார். இவர், அமெரிக்காவிலுள்ள சிறந்த ஆய்வகமான எஸ்.ஆர்.ஐ.,ல் டைரக்டராகவும், சீனியர் சயின்டிஸ்டாகவும் பணியாற்றினார். 1990ல் "பூட்ஸ்ட்ராப் இன்ஸ்டிடியூட்"-யை நிறுவினார். 2008 முதல் இது, "டக்ளஸ் எங்கல்பர்ட் இன்ஸ்டிடியூட்' என்ற பெயரில் இயங்கி வருகிறது. பல உயரிய விருதுகள் பெற்ற இவருக்கு, அமெரிக்க அரசின் உயரிய, "தி நேஷனல் மெடல் ஆப் டெக்னாலஜி' விருது 2000ம் ஆண்டு கிடைத்தது. சிறுநீரக பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த இவர், 88வது வயதில் கலிபோர்னியாவில் நேற்று இறந்தார். "மவுஸ்' என்ற வார்த்தைக்கு மவசு ஏற்படுத்திக்கொடுத்த டக்ளஸ் இறந்ததால், மவுஸ் மவுனமானது. நன்றி தினமலர்
நல்ல விரிவான கட்டுரை... நிச்சயம் இவரைப்பற்றி நிறைய அறிய பலருக்கு வாய்பில்லை... அதைபோக்கும் விதமான கட்டுரை...
ReplyDeleteபலர் மறைந்தாலும் மனதில் இருப்பார்கள்... இவர் கையில்...
ReplyDeleteபோற்றப்பட வேண்டியவர்...
பதிவாக்கியமைக்கு நன்றி...
அவர் ஆன்மா சந்தியடைய பிரார்த்திப்போம்
ReplyDelete(மவுஸ் இருக்கிற வரையில் அவர் மவுஸ்
குறையப்போவதில்லை)
tha.ma 3
ReplyDeleteடௌக்லஸ் எங்கெல்பர்ட் 'மவுஸ்' மட்டும் அல்லாமல் கணினி வலை மற்றும் பலவற்றுக்கும் முன்னோடி..அவருடைய ஆத்மா அமைதியில் இளைப்பாரட்டும்! பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி!
ReplyDeleteமௌஸ் கண்டுபிடித்தவர் பற்றி உங்கள் பதிவு மூலம் அறிந்து கொண்டேன்....
ReplyDeleteதகவலுக்கு நன்றி.
ஆழ்ந்த அனுதாபங்கள். த.ம.-7
ReplyDelete