Tamilus

The best Tamil Aggregator | Tamilus

7/19/2013

ஸ்கூல்ல பொழப்பு சிரிப்பா சிரிக்குது... ஒரு காமெடி கலாட்டா...


ஒரு பள்ளிக்கூடத்துக்கு ஆய்வாளர் ஒருத்தர் வந்தாரு.

அந்த பள்ளிக்கூடத்தப் பத்தி ஏற்கனவே நிறைய அவரோட வேலை பாத்தவங்க சொல்லி இருக்காங்க. அதனால எதுக்கும் தயாராத்தான் அவர் வந்தார்.

முதல்ல ஒரு வகுப்புக்குள்ள போன உடனே பசங்க எல்லாம் எழுந்திருச்சு நின்னாங்க. சரி எதாவது கேள்வி கேக்க வேண்டாமுனு முதல் பையன எழுப்பி...........

"உன் பேர் சொல்லு.........."

"பழனி"

"உன் அப்பா பேரு.............."

"பழனியப்பா"

அடுத்தப் பையன எழுப்பி..........

"உன் பேர் சொல்லு.........."

"மாரி"

"உன் அப்பா பேரு.............."

"மாரியப்பா"

அவருக்கு கொஞ்சம் டவுட் வருது. இருந்தும் அடுத்தப் பையன எழுப்பி..........

"உன் பேர் சொல்லு.........."

"பிச்சை"

"உன் அப்பா பேரு.............."

"பிச்சையப்பா"

இப்பொ அவருக்கு கன்பார்ம் ஆயிடுச்சு. சரி பசங்க ஆரம்பிச்சுட்டாங்க அப்படினு புரிஞ்சுருச்சு. அடுத்தப் பையன எழுப்பினாரு.

"முதல்ல நீ உன் அப்பா பேரைச் சொல்லு...." (மனசுக்குள்ள ஒரு பெருமிதம்)

"ஜான்"

"இப்பொ உன் பேரைச் சொல்லு......."

"ஜான்சன்"

அப்புறம் என்ன அதுக்கு அப்பறம் அந்த பள்ளிக்கு எந்த ஆய்வாளரும் வரதே இல்ல.............

முகநூலில் ரசித்தது..

11 comments:

  1. ஸ்கூல்ல போழப்பு சிரிப்பா சிரிக்குது... ஒரு காமெடி கலாட்டா...
    >>
    இப்படி வாத்தியாரே ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா எழுதுனா ஸ்கூல் பொழப்பு ஏன் சிரிப்பா சிரிக்காது?! அது போழப்பு இல்லிங்கோ பொழப்பு.

    ReplyDelete
  2. @ராஜி said...
    ஸ்கூல்ல போழப்பு சிரிப்பா சிரிக்குது... ஒரு காமெடி கலாட்டா...
    >>
    இப்படி வாத்தியாரே ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா எழுதுனா ஸ்கூல் பொழப்பு ஏன் சிரிப்பா சிரிக்காது?! அது போழப்பு இல்லிங்கோ பொழப்பு.// அது கூகிள் தமிழ் இன்புட் மிஸ்டேக்.. ஹீ.ஹீ..

    ReplyDelete
  3. ஹா... ஹா... ஆய்வாளர் வேலையை விட்டதாக கேள்விப்பட்டேன்...!

    ReplyDelete
  4. மெல்ல மெல்லக் கொன்று தின்ற தமிழைக் காண இனி எந்தப் பாட சாலை செல்ல வேண்டுமோ !!....
    சிரிப்புக்குள்ளும் சிந்திக்க வேண்டிய வலிகளின் ஓலம் .இதை உணர்வது யாரு ?..............!!!!!!!!!!
    சிறப்பான படைபிற்கு வாழ்த்துக்கள் சகோ .

    ReplyDelete
  5. அடடா என்னா ஒரு டைமிங் கௌண்டர்...

    ReplyDelete
  6. கலக்கல்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. ஹா... ஹா... காமெடி கலாட்டா

    ReplyDelete
  8. நீங்கதானே அப்படி சொல்லச் சொன்னிர்கள்
    த.ம.-7

    ReplyDelete
  9. இப்ப இருக்க பசங்க விவரமாத்தான் இருக்காங்க! :)

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"