6வது எம்.பி. இடத்துக்கு திமுகவின் கனிமொழியும் தேமுதிகவின் இளங்கோவனும் மோதுகின்றனர். திமுக வேட்பாளருக்கு மொத்தம் 27 எம்.எல்.ஏக்களின் ஆதரவு உள்ளது. தேமுதிகவுக்கு 22 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருக்கிறது. 5 எம்.எல்.ஏக்களைக் கொண்ட காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் ஆதரவு யாருக்கு என்பது இன்னமும் அறிவிக்கப்படவில்லை.
தேமுதிகவும் திமுகவும் டெல்லி லாபி மூலம் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் வாக்குகளைப் பெற பெரும் போராட்டமே நடத்தி வருகின்றன. இந்நிலையில் சென்னை கோட்டை வட்டாரங்களோ தேமுதிகதான் இப்போதைக்கு குடைச்சல் கட்சியாக இருப்பதால் திமுக வேட்பாளர் கனிமொழி வெல்லட்டுமே என்று முதல்வர் ஜெயலலிதா விரும்புவதாக கூறுகின்றன.
ஒருவேளை காங்கிரஸின் 5 எம்.எல்.ஏக்களின் வாக்குகள் தேமுதிகவுக்கு விழுமேயானால் தம் வசம் இருக்கும் அதிருப்தி எம்.எல்.ஏக்களின் வாக்குகளை திமுக பக்கம் விழ வைக்கவும் ஜெயலலிதா முடிவு எடுக்கலாம் என்கின்றனர். ஜெயலலிதாவின் இந்த முடிவுக்குப் பின்னணியும் இருப்பதாகவும் சொல்கின்றனர்.
2007 ஆம் ஆண்டு ராஜ்யசபா தேர்தல் நடைபெற்ற போது திமுக ஆட்சிக் காலம்... 6 இடங்களுக்கான தேர்தல் ..திமுக தலைவர் கருணாநிதியோ 4 இடங்களில் தாம் வைத்துக் கொண்டு எஞ்சிய 2 இடங்களை அதிமுக வெற்றி பெறட்டும் என்று கூறினார். இதை அதிமுக பொதுச்செயலரான ஜெயலலிதாவும் அப்போது வரவேற்றதுடன், இப்படித்தான் தேர்தல் நியாயமான முறையில் நடைபெற வேண்டும்.. இதை வரவேற்கிறேன் என்றார்.
தற்போது அதிமுக ஆட்சி.. அதிமுகவும் கூட்டணியும் 5 இடங்களில் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. இப்போது 6வது இடத்துக்கு திமுக போட்டியிடுகிறது.. இதனால் 2007-ல் விட்டுக் கொடுத்த திமுகவுக்கு 2013ல் விட்டுக் கொடுக்கலாம் என்பது அதிமுகவின் கணக்காக கூறப்படுகிறது. இதனால்தான் காங்கிரஸே ஆதரித்தாலும் தம் வசம் கை வைத்திருக்கும் அதிருப்தி எம்.எல்.ஏக்களை வைத்து கிராஸ் ஓட்டு போட வைத்து திமுகவுக்கு ஜெயலலிதா கை கொடுப்பார் என்றும் கூறப்படுகிறது.
இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ? நன்றி இணைய செய்திகள்.
ம் ...
ReplyDeleteஅது சரி...!!!!!
ReplyDeleteஎல்லா (மக்கள்) விடயங்களிலும் இவ் விரு திராவிடக் கட்சிகளும் விட்டுக் கொடுத்துப் போனால் தமிழகம் எப்படி இருக்கும்? ஆகா' !!!
ReplyDeleteஎதுவும் நடக்கலாம்!
எதுவும் நடக்கலாம்!