விஜய காந்தின் தேமுதிகவில் இதுவரை 6 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை உருவாக்கியிருக்கும் அதிமுக மேலும் 11 பேரை 'தாவ' தயார் செய்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 29 எம்.எல்.ஏக்களைப் பெற்றது தேமுதிக. ஆனால் இவர்களில் இதுவரை 6 பேர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து தேமுதிக தலைமை மீதான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். கடைசியாக அதிருப்தி அணியில் ஐக்கியமானவர் சேந்தமங்கலம் எம்.எல்.ஏ. சாந்தி. இவர் கடந்த மாதமே அதிருப்தி அணிக்கு செல்ல தயாராக இருந்தும் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கண்டுபிடிக்கமுடியாமல் போனதாகவும் கூறப்படுகிறது.
கேபிளில் கேப்டன் டிவி சரியாக தெரிவதில்லை.. இருட்டடிப்பு செய்யப்படுகிறது என்று கடந்த மாதம் கேபிள் இயக்குனரிடம் புகார் கொடுத்த போது சேந்தமங்கலம் சாந்தி, செல்லவில்லை. அப்போதே விஜயகாந்த் இதை உணர்ந்திருந்ததால் சாந்தி, அதிருப்தி அணிக்கு செல்வதைத் தடுத்திருக்க முடியும் என்கின்றனர் தேமுதிகவினர்.
அதிமுகவும் இத்துடன் ஓய்ந்துவிடுவதில்லை என்ற முடிவில் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் 11 எம்.எல்.ஏக்களை அதிருப்தி அணிக்கு இழுக்கும் வேலைகள் மும்முரமாக நடைபெறுவதாக தெரிகிறது. இதனால் எதிர்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்தை விஜயகாந்த் விரைவில் இழகக்கக் கூடும். தேமுதிகவின் 4 எம்.எல்.ஏக்கள் அதிருப்தி அணிக்குப் போனால் போட்டி தேமுதிக உருவாகக் கூடும். இதனால் முதல் கட்டமாக 4 எம்.எல்.ஏக்களை அணி தாவ வைத்து விஜயகாந்த்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு வேட்டு வைக்கும் வேலையை ஜரூராக்கிக் கொண்டிருக்கிறதாம் அதிமுக.
சபாஷ் அம்மாவா கொக்கா?
நன்றி இணையம்.
தனிக் கட்சி தொடங்கி யார் கூடவும் கூட்டு இல்லைன்னு சொல்லி உயர்ந்து நின்னவர்.., எப்போ அம்மா கூடாரத்துக்குள்ள நுழைஞ்சாரோ அப்பவே தலை குனிய ஆரம்பிச்சுட்டார்
ReplyDeleteஇப்ப தான் களைகட்ட ஆரம்பித்துள்ளது...
ReplyDeleteரைட்டு ... ஆட்டம் சூடுபிடிக்கிறது....
ReplyDelete