*******************************************************************************************************************
அவர் விபத்துன்னா ரொம்ப பயப்படுவார் அதனால கொஞ்சம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை அதிகமாவே இருக்கும்!
முன்னெச்சரிக்கைன்னா என்ன செய்வார்?
உதாரணத்துக்கு சொல்லணும்னா சலூனுக்கு போகும்போது கூட ஹெல்மெட் போட்டுட்டுத்தான் போவார்னா பாத்துக்கங்களேன்.
******************************************************************************************************************
ஆசிரியர் : அவன் பணக்கார வீட்டுப் பையனா இருக்கலாம். அதுக்காக இப்படி அடம்புடிக்கக் கூடாது....
தலைமை ஆசிரியர் : என்னதான் சொல்றான் பையன்?
ஆசிரியர் : கழித்தல் கணக்கு போடும் போது பக்கத்தில் இருக்கிற நம்பர் கிட்டஇருந்து கடன் வாங்கணும்னு சொன்ன.. நான் பணக்கார வீட்டுப் பையன். ஏன் கடன் வாங்கணும்னு எதிர்கேள்வி கேக்குறான்
தலைமை ஆசிரியர் :?!?!
****************************************************************************************************************
ஆசிரியர் : முரளியிடம் 4 ஆரஞ்சு இருக்கிறது. அவனது தம்பிக்கு 2 பழத்தை கொடுக்க சொல்லிட்டேன். மீதம் அவனிடம் எத்தனை பழம் இருக்கும்?
அவன் : 4.
ஆசிரியர் : எப்படி உனக்கு கணக்கே தெரியாதா?
அவன் : உங்களுக்கு முரளியை பற்றி தெரியாதா?
*******************************************************************************************************************
கணவன் : என் பொண்டாட்டி என்ன திட்டிட்டாடா...
நண்பன் : ஏன்
கணவன் : கல்யாணமாகி இரண்டு மாதம் ஆகிறது. இன்னும் சமைக்கக் கூட வரலை, போய் உங்க அப்பாக்கிட்ட கத்துக்கிட்டு வாங்கண்ணு சொல்லிட்டா...
******************************************************************************************************************
கலா : எலிக்கு பேண்ட் போட்டா என்ன ஆகும்?
மாலா : என்ன ஆகும் நீயே சொல்லு.
கலா : எலிபேண்ட் ஆகும்.
********************************************************************************************************************
ஒருத்தி : எங்க வீட்டுக்காரர் ஒரு குழந்தை மாதிரி!
மற்றொருத்தி : இருக்கலாம். அதுக்காக என் பொண்ணு கூட ஓடிப்பிடிச்சி விளையாடறது எல்லாம் சரியில்ல..
********************************************************************************************************************
புதுமனைவி: நீங்கள் பிரெட்டை டோஸ்ட் செய்து காபி போட்டு விட்டீர்கள் என்றால், மாலை உணவு தயாராகிவிடும்.
கணவன்: அப்படியா மாலை உணவு என்ன?
புதுமனைவி : டோஸ்டும், காபியும்தான்!
********************************************************************************************************************
முரளியை பற்றி இப்போது தான் தெரிகிறது... ஹா... ஹா...
ReplyDeleteமுன் ஜாக்கிரதை ஜோக் சிரிப்பை வரவழைத்தது..,
ReplyDeleteஹா... ஹா... ஹா...
ReplyDeleteஅனைத்தும் நகைச்சுவை.
ReplyDeleteஹிஹி சிரிச்சுட்டேன்
ReplyDelete