3ம் வகுப்பு மாணவர்களுக்கு, 8 அல்லது 9 வயது இருக்கும். அந்த வகுப்பில் படிக்கும் பெண் குழந்தைகளுக்கு, பாலியல் கல்வி மற்றும் கொடுமை பற்றி, தற்போது, பாடம் கற்பிக்கப்படுகிறது.
பாலியல் என்றால், என்னவென்றே தெரியாத வயது அது. அந்த வயதில், பாலியல் கல்வி சொல்லிக் கொடுப்பது, வானில் போகும் சனியனை, ஏணி வைத்து இறக்கிய கதையாகி விடாதா? இப்படிச் சொல்வதால், என்னை, பிற்போக்குவாதி என்று சொல்வர்.
தானாகத் தெரிய வேண்டிய விஷயங்களை, அந்தந்த வயதில் தெரிந்து கொண்டால் தேவலாம். அதற்குள் அவசரப்பட்டு, நாமே கற்றுக் கொடுத்து, ஏன் சில விஷயங்களைத் தூண்ட வேண்டும்?வயது வித்தியாசம் தெரியாமல், சில காமுகர்கள், பாலியல் கொடுமைகள் செய்கின்றனர் என்பதற்காக, அதைப் பற்றிய விழிப்புணர்வை செயல்படுத்துகிறோம் என்று கூறி, அனைத்து பெண் குழந்தைகளுக்கும், அதைப் பற்றி தெரிய வைப்பானேன்?
பாலியல் கல்வி பற்றி விழிப்புணர்வு தேவை தான். அதை, 8ம் வகுப்பு முதல் துவங்கினால் சரியாக இருக்கும். அதுவும், எப்படி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று, நாசூக்காகச் சொல்வது நலம் பயக்கும்! பள்ளிப் பாடம் மட்டுமல்ல, ஊடகத் துறையும் சேர்ந்து, பொதுவான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நன்றி இணையம்.
ம் ...
ReplyDeleteஎப்பாவ் சாமி ! பாலியல் கல்வி என்றதும் ஓ..தும், குழந்தை பெறுவது மட்டுமில்லை. உடலைக் குறித்தும், தம்மை பாதுகாத்துக் கொள்ளும் மனோபலத்தையும் சொல்லித் தருவது, நல் தொடுகை, கேடு தொடுகை குறித்து அறிவுறுத்துவதும் கூட பாலியல் கல்வி. இந்தியாவில் தான் உலகிலேயே மிக அதிகமான பாலியல் வன்முறைகள், அதுவும் 5,6 வயது பிள்ளைகளிடம், பெற்றோர், உறவினர் எனப் பலரும் நடத்துகின்றனர். அந்தந்த வயதுக்கு ஏற்ப எதை சொல்லித் தரணுமோ அதனை தான் கல்வித்திட்டங்கள் வகுப்போர் கொடுப்பர் என நம்புகின்றோம். பாடத்திட்டத்தில் வரன்முறை மீறி இருந்தால் சுட்டிக் காட்டுங்கள், விவாதிப்போம்.
ReplyDeleteஉங்க வாதமும் சரியாதான் படுகிறது வாத்தி, பெற்றோர் பிள்ளைகளுக்கு நல்ல தொடுகை கெட்ட தொடுகை பற்றி குழந்தைகளுக்கு சொல்லி தர வேண்டும்.
ReplyDeleteஇருபாலர் படிக்கும் பள்ளிகளில் இதையெல்லாம் சொல்லிக்கொடுக்கும்போது நன்றாக இருக்கும் பிள்ளைகளும் கெட்டுப் போகும். தேவையான விஷயங்களை மட்டும் பெற்றோர் வீட்டில் வைத்து நாசூக்காக சொல்லிக்கொடுப்பதே நல்லது.
ReplyDeleteவீட்டுல அடங்காத பிள்ளைகள்லாம் மிஸ் சொன்னா அடங்கிடுவாங்க.. அதனால தப்பில்ல. 5 வயசுலயே சொல்லித்தர ஆரம்பிக்கனும் குட் டச், பேட் டச்ல இருந்து..,
ReplyDelete