Tamilus

The best Tamil Aggregator | Tamilus

6/06/2013

மரணத்தின் பிடியில் ஒரு ...


Thanks: ஜெ.தமிழ்ச்செல்வன், தலைவர், இந்தியன் பயர் ஒர்க்ஸ் அசோசியேஷன், சிவகாசி.


சிவகாசி, பட்டாசு தொழிற்சாலைகளில் விபத்துகள் ஏன் நடக்கின்றன என்று வாசகர்கள் இருவர், இப்பகுதியில் எழுதிய கருத்துக்கள் உண்மைக்கு மாறானவை.பொதுவாக, பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளுக்கு, மனித தவறுகளே காரணமாக அமைகின்றன. இதில், வர்த்தகத்தை இணைப்பதில் அர்த்தம் இல்லை.சிவகாசிக்கும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் வர்த்தகர்களுக்கும், இத்தொழிலை விட்டால், வேறு வழியில்லை. 

அபாயங்கள் நிறைந்த தொழில் இது என்பது, அவர்களுக்கும் தெரியும்.பட்டாசு தொழிற்சாலைகளை கண்காணிக்கும், அரசு அலுவலர்களின் லஞ்ச லாவண்யத்தை, அரசு கட்டுப்படுத்துவது இல்லை. எத்தனையோ உயிர்ப்பலிகள் ஏற்படுவதற்கு காரணமான ஆலைகள் சீல் வைக்கப்பட்ட போதும், அதற்கான உரிமங்கள் மீண்டும் எப்படி வழங்கப்பட்டன? காரணம், அதிக அளவு லஞ்சம் தந்து சரிகட்டப்பட்டது. இதை நாங்கள் அரசு கவனத்திற்கு கொண்டு சென்றோம். ஆனால், நடவடிக்கை இல்லை. ஆகவே, இன்று பட்டாசு தொழிற்சாலை மிக மோசமான சூழ்நிலையை சந்திக்கிறது.

பட்டாசு ஆலைகள் விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் பின்பற்றும் போக்கு, இத்துறையில் பல்வேறு விதிமீறல்களுக்கு உதவுகின்றன. பட்டாசு தொழிலை லீசுக்கு விடுவது, அங்கீகரிக்கப்பட்டதல்ல. ஆனால், இக்குற்றத்தில் ஈடுபடுபவர்களை தண்டிப்பது இல்லையே! 

விபத்துகள் ஏற்பட்டு இறந்தால், உடனடியாக அக்குடும்பத்திற்கு, 4 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு தரச் சொல்லி, அரசு அதிகாரிகள் வற்புறுத்திய சம்பவம் சமீபத்தில் நடந்திருக்கிறது; சட்டப்படி இது சரியானதல்ல. சிலர், பணத்தாசையில் இம்மாதிரி மரிப்பதும் நடக்கிறது. அதைவிட, இப்பணியில் ஈடுபடும் ஆண் தொழிலாளர்கள் பலர், போதையுடன் பணிக்கு வருவது, அதிக அபாயத்தை ஏற்படுத்துகிறது. இப்பகுதியில் வளர்ந்து, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட இத்தொழில், இன்று சிரமப்படுகிறது என்பதே உண்மை.





5 comments:

  1. எங்கும் "குடி" தான் காரணம்...

    ReplyDelete
  2. ஆண் தொழிலாளர்கள் பலர், போதையுடன் பணிக்கு வருவது, அதிக அபாயத்தை ஏற்படுத்துகிறது. //நானும் கேள்விப் பட்டேன் வருத்தமாய் உள்ளது

    ReplyDelete
  3. உண்மை நிலை விளக்கும் பதிவு
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. எப்போதான் முழு மதுவிலக்கு அமலுக்கு வருதோ அப்போதான் எல்லாரும் நிம்மதியா இருக்கலாம்.

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"