பொதுத் தேர்வு தேர்ச்சி சதவீதம் குறைந்ததால், அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, தமிழக அரசு கிடுக்கிப்பிடி போட்டுள்ளதாக செய்தி வெளியாகிஉள்ளது.தவறு, அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீது மட்டும் இருக்கும் பட்சத்தில், அரசு எந்த நடவடிக்கையும், மக்கள் நலன் கருதி எடுக்கலாம்.
ஆனால், அரசுப் பள்ளிகளில் உள்ள பற்றாக்குறை, ஒன்றா, இரண்டா?அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில், கட்டட வசதிகள் மட்டுமின்றி, போதுமான அளவில் ஆசிரியர்களும் இருக்கின்றனர். அதனால், அங்கு மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் படுமோசமாக இருந்தால், நடவடிக்கை எடுக்கலாம்.
ஆனால், அரசுப் பள்ளிகளில், எங்காவது முழுப் பணியிடங்களும் நிறைவுடன் உள்ளதா?மருத்துவ விடுப்பு, பிரசவ கால விடுப்பு எடுத்து ஆசிரியர்கள் சென்றால், மாணவர்கள் நிலை பரிதாபம் தான். எனக்குத் தெரிந்த, தோல்வியுற்ற குழந்தைகள் மற்றும் மதிப்பெண் குறைந்த குழந்தைகளை விசாரித்தேன்... அழமாட்டாத குறையாக கூறினர்.
இப்போது அதிகாரிகள், யாரைத் திருப்திப்படுத்த, கிடுக்கிப்பிடி போடுகின்றனர்? தண்டனை சரி; ஆனால், தேவையான எல்லா கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுத்து, தண்டிக்க வேண்டும். நன்றி சுந்தரபாரதி
தவறான கிடுக்கிப்பிடி...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteதவறான வழிமுறை.
ReplyDeleteஅம்மா என்றாலே அதிரடிதானே!
ReplyDelete