Tamilus

The best Tamil Aggregator | Tamilus

6/30/2013

ராணுவ வீரர்களுக்கு ஒரு ராயல் "சல்யூட்!'


பத்ரிநாத், கேதார்நாத் புனித யாத்திரைக்குச் சென்று, எதிர்பாராத கனமழையிலும், நிலச்சரிவிலும் பாதி வழியில் சிக்கித் தவித்த, ஆயிரக்கணக்கான யாத்ரீகர்களை, உயிரை பணயம் வைத்து காப்பாற்றியுள்ளது, நம் ராணுவம்.


அந்த மாவீரர்களுக்கு, ஒரு சல்யூட்.அன்னியனை உள்ளே நுழைய விடாமல், இரவு, பகலாக கண்விழித்து, உறைய வைக்கும் குளிரிலும், பேய் மழையிலும், கொசுக்கடியிலும், விஷ ஜந்துக்கள் நடமாடும் இடங்களிலும், அயராது நம் எல்லைப் பகுதியை பாதுகாத்து வரும், எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களும், பூகம்பம், புயல் மழை, சுனாமி, நிலச்சரிவு போன்ற, இயற்கைப் பேரிடர்கள் நிகழும் போது ஓடோடி வந்து, கடவுள் போல் மக்களை மீட்கும் விமானப்படை மற்றும் கப்பல், தரைப்படை வீரர்களும், யாரும் கோடிகளில் புரள்பவர்கள் அல்ல.

மீட்பு பணியின் போது, எத்தனை நேரமானாலும், எத்தனை நாளானாலும் பசி, தாகம் இவற்றை பொருட்படுத்த மாட்டார்கள். ஏனெனில் மீட்புப் பணியும், யுத்தம் போன்றதே.தன்னலம் கருதாத, இத்தகைய ராணுவ வீரர்களுக்கு மதிப்பும், மரியாதையும் இருந்தது, ஒரு காலத்தில்.தேசத்தைக் காப்பாற்றும் ஒரு ராணுவ வீரனுக்கு, மனைவியாகப் போவதை, அப்பெண்ணும் பெருமையாக நினைப்பாள். 

ஆனால் இன்று, இவர்களுக்கு பெண் தர மறுக்கும் பரிதாப நிலை உள்ளது.பேரிடர் காலங்களில், மீட்புப் பணியின் போது கடவுளாகத் தெரிபவர்கள், மற்ற நேரங்களில் வேறு மாதிரியாகத் தெரிகிற துயரம் வந்து விட்டது.தேசத்திற்காக பாடுபடும் ராணுவ வீரர்களுக்கு, பெண் கொடுக்கும் மனப்பாங்கு வரவேண்டும்.ராணுவ வீரர்களின், சேவைகளை புகழும் இந்த நேரத்தில், இந்த நினைப்பும், நமக்கு வர வேண்டும்!     நன்றி நாராயணன்.



6 comments:

  1. ராணுவ வீரர்கள் என்றும் போற்றப்பட வேண்டியவர்கள்...

    ReplyDelete
  2. மரியாதைசெய்யனும்

    ReplyDelete
  3. மரியாதைக்குரியவர்கள் இவர்கள்.....

    ReplyDelete
  4. மரியாதைக்கு உரியவர்களை என்றும் மதிக்க வேண்டும்...

    ReplyDelete
  5. ராயல் சல்யூட்... நம் வீரர்களுக்கு..

    ReplyDelete


  6. பாராட்டுக்கும் போற்றுதலுக்கும் உரியவர்கள் அவர்களே! வாழ்க இராணுவ வீர்கள்!

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"