தில்லு முல்லு படத்தை தடை செய்ய கோரி விசு தாக்கல் செய்த மனுவை நீதிபதி நிராகரித்தார். இதனால் படம் எவ்வித பிரச்னையும் இல்லாமல் ரிலீஸ் ஆக இருக்கிறது. பாலசந்தர் இயக்கத்தில், ரஜினி நடிப்பில், 1981-ம் ஆண்டு வெளிவந்த சூப்பர்-டூப்பர் ஹிட் காமெடி படம் "தில்லு முல்லு". இப்படத்திற்கு நடிகரும், இயக்குனருமான விசு திரைக்கதை, வசனம் எழுதி இருந்தார். இப்படம் அதேபெயரில் இப்போது ரீ-மேக் ஆகியுள்ளது.
ரஜினி மீசை எடுத்து நடித்த முதல் படம். இதனை கலகலப்பு படத்துக்கு வசனம் எழுதிய பத்ரி ரீமேக் செய்திருக்கிறார். மிர்ச்சி சிவா ஹீரோ, இஷா தல்வார் ஹீரோயின். இந்த விவரங்கள் ஏற்கனவே அனைவருக்கும் தெரிந்ததுதான்.
இந்தப் படத்தை வெளியிடக் கூடாது, ஒரிஜினல் தில்லு முல்லு படத்துக்கு நான்தான் கதை, திரைக்கதை அமைத்து வசனம் எழுதினேன். என்னிடம் ரீமேக் செய்ய அனுமதி வாங்கவில்லை என விசு வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
யுவனும், எம்.எஸ்.விஸ்வநாதனும் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். இவர்கள் இணைவது இதுதான் முதல்முறை. தில்முல்லு பாடலை இருவரும் இணைந்தே பாடி ஆடியிருக்கிறார்கள்.
இன்று போய் நாளை வா கண்ணா லட்டு தின்ன ஆசையாக மாறிய போது பழைய படத்தின் கிளாஸிக் டச் மொத்தமாக மிஸ்ஸானது. அப்படியொரு விபத்து தில்லு முல்லுக்கு நேருமா?
நாளை படத்தைப் பார்க்கும் போது தெரிந்துவிடும்.
நாளைக்கே ரீலீசா...?
ReplyDeleteரஜினியையும் சிவாவையும் ஒப்பிடவே முடியவில்லையே
ReplyDelete